02-20-2006, 03:35 PM
Luckyluke Wrote:அமைதிப்படை செய்தது ஏற்றுக்கொள்ள முடியாதது.... அதற்காக நாங்கள் இழந்தது கொஞ்சம் நஞ்சமா?
ஆனாலும் அதே பழம் பஞ்சாங்கத்தையா நாங்கள் இன்னமும் பாடிக்கொண்டிருக்கிறோம்....
கணவரை இழந்த சோனியா காந்தியே நீதிமன்றத்தால் மரணதண்டனை விதிக்கப்பட்டவர்களை மன்னிக்க வேண்டும் என்று இந்தியக் குடியரசுத் தலைவரிடம் பரிந்துரை செய்யவில்லை?
பழய பஞ்சாங்கம் எண்று நீங்கள் சொல்வது பலபேரின் வாழ்க்கையை பிரட்டிப்போட்டவிடயம்..... அதன் தாக்கத்தால் எத்தனை குடும்பங்கள் இண்றும் இன்னலுக்குள் இருக்கிறது தெரியுமா...??? மறக்கவேண்டியது இருக்கிறது... மரத்தால் விளுந்தவனை மாடு மிதித்த கதையாக இண்றும் இலங்கையின் இராணுவத்துக்கு இந்தியா ஆதரவு கொடுத்து பயிற்றுவிக்குமானால், எப்படி நாங்கள் அளிவில் இருந்து மீள்வது...???
இந்தியா...! எங்களின் மனங்களில் அன்பை விதைக்கவில்லை மாறாக அளியாத வலியைத்தான் விதைத்து வருகிறது. அதுக்கான பலன்தான் இண்று நாங்கள் எதிர்ப்பது. நாளை அது வினையாக அமையலாம்.... எல்லாம் இந்தியாவின் கையில்த்தான் உள்ளது. எங்களின் கையில் ஒண்றும் இல்லை விரல்களைத்தவிர..!
::

