02-20-2006, 03:33 PM
Quote:காவடி எழுதியது:இல்லை.. லக்கி! விடுதலைப் புலிகளின் விமானப்படையையும் இந்திய பாதுகாப்பையும், புலிகளின் கடற்படையையும் இந்திய பாதுகாப்பையும் தொடர்பு படுத்தி இந்திய இராணுவ ஆய்வாளர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
அடுத்தது(தயவு செய்து இந்தக் கேள்விக்கு கேலியாக பதிலளிக்க வேண்டாம். ஏனெனில் இதுவும் ஆராயப்பட கூடிய விடயம் தான்..) தனக்கருகில் பலம் பொருந்திய ஒரு அமைப்பு இருப்பதை இந்தியா விரும்பவில்லையா?
இது உங்களுக்கே ஓவராகத் தெரியவில்லையா?
Quote:இந்தியா ஈழம் அமைவதை விரும்பவில்லை என்று இதுவரை அறிவித்துள்ளதா?ஆம்! இலங்கை துண்டாடப்படுவதை இந்தியா விரும்பவில்லை என்று பலதடவைகள் சொல்லியிருக்கிறது. இலங்கை துண்டாடப்பட்டாலே ஈழம் அமையும் என்பது உங்களுக்கு தெரிந்திருக்க கூடும்
Quote:இலங்கையைப் பொறுத்தவரை இன்று வரை இலங்கைக்கு ஒரு அரசு உண்டு.... இந்தியா அந்த அரசுத் தரப்பு அதிகாரிகளோடு தான் எந்த பரிவர்த்தனையும் வைத்துக் கொள்ள முடியும்....ம்.. நோர்வே புலிகளோடு தொடர்பு கொள்கிறது.யப்பான் தொடர்பு கொள்கிறது, ஐரோப்பிய நாடுகள் தொடர்பு கொள்கின்றன.. தென்ஆபிரிக்கா தொடர்பு கொள்கிறது.. ம்.. இந்தியாவால்த்தான் முடியவில்லை.. பரவாயில்லை.. அதன் உணர்வுகளை புரிந்து கொள்கிறோம்..
Quote:பாகிஸ்தான் பல விஷயங்களில் எங்களுக்கு எதிராக இருந்தாலும், உலகால் அங்கீகரிக்கப்பட்ட அரசாங்கம் அங்கு இருக்கிறது என்பதை கணக்கில் எடுத்துக் கொள்ளுங்கள்.....உங்கள் கருத்துப்படி தமிழீழம் அமைந்தால் கண்டிப்பாக இந்தியா புலிகளோடு தொடர்பு கொள்ளும் என்று நாம் நினைக்கலாமா, யாருக்கு தெரியும் முதல் வாழ்த்துச் செய்தியே இந்தியாவிடமிருந்து வரலாம்..
, ...

