02-20-2006, 03:17 PM
Quote:என் ஈழ ஆதரவு நிலைபாடு இந்த களத்துக்கு வந்தபின் சில வாய்க்கொழுப்பெடுத்தவர்களால் குறைந்திருப்பது உண்மை... நான் எந்த அளவு ஈழத்தமிழர் ஆதரவாளன் என்பது ஆருரானுக்கு தெரியும்..... இப்போது என் நிலை என்னவென்றால்.... இவர்கள் என் தாய்நாட்டுக்கு எதிராக இருக்கும்போது நாம் மட்டும் ஏன் இவர்களை ஆதரிக்க வேண்டும் என்பது தான்....லக்கி லுக்! நீங்களும் பல இடங்களில் தமிழீழத்து செய்திகளின் உண்மைத்தன்மை புரியாது விசமத்தனமாக கருத்துக்களை வழங்கியிருந்தீர்கள். இருப்பினும் ஒரு விடுதலைப்போரின் வெற்றிக்கு அது தனது நியாயத்தன்மையை உலகமெல்லாம் எடுத்துச் சொல்லும் செயற்பாடும் உறுதுணையளிக்கிறது. ஆனால் ஈழத்தமிழர்களாகிய நாம் அதில் சற்று பின் நிற்கிறோம்.. நாங்கள் எங்கள் பிரச்சனைகளை எங்களுக்குள்ளெ எழுதியும் எங்களுக்கள்ளே சொல்லியும் மட்டுமேதான் வருகிறொமா என சந்தேகம் எழுகிறது.
காலமெல்லாம் ஈழத்தமிழருக்காக இந்தியாவில் பல போராட்டங்களை நடத்தி ஆட்சி இழந்த தலைவனையே குள்ளநரி என்று விமர்சிக்கும் நன்றி கெட்டவர்களுக்கு நாம் ஏன் இன்னமும் ஆதரவு தரவேண்டும் என்று நினைக்கத் தோன்றுகிறது....
இந்தக் காலகட்டம் ஒரு முக்கியமான காலம்! எங்கள் போராட்ட நியாயத்தை உலக மக்கள் புரிந்து கொள்ள வேண்டிய காலம்.. அவர்களுக்கு அதை எடுத்து சொல்ல வேண்டிய எங்களுக்கான காலம். ஒரு இந்தியராகவே எங்கள் போரின் நியாயத்தை புரிந்து கொள்ளுங்கள். நாளை ஒரு நாடு உருவாகும் போது அந்த நாட்டிற்கான தேவையை நாங்கள் மட்டுமின்றி உலகில் உள்ள அனைவரும் புரிந்து கொண்டிருக்க வேண்டும் என்பதே விருப்பம்..
நடந்த சம்பவங்களை வைத்து ஈழத்துடனான உறவை இந்தியா அணுகக் கூடாது. யுத்தம் புரிந்து, இன்றளவும் ஒருவித முறுகல் நிலையிலேயே இருக்கின்ற பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தைகளை செய்ய இந்தியாவால் முடியும் போது ஈழத்துடன் ஏன் முடியாது? அவ்வாறு முடியாமல் இருப்பதற்கான காரணங்கள் என்ன ?
, ...

