02-20-2006, 03:16 PM
காவடி Wrote:ம்.. நல்லது ராஜா.. நடந்து முடிந்த இருபகுதியினருக்குமேயான கசப்பான சம்பவங்களால்தான் ஈழத்திற்கான ஆதரவு கொடுக்க முடியவில்லை என்ற வாதத்தை ஏற்க முடியாதே.. அப்படியானால் இன்று யப்பானும் அமெரிக்காவும் எதிரிகளாகவே இருந்திருக்க வேண்டும்.. ஜேர்மனியும் பிரான்சும் இன்ன பிற நாடுகளும் எதிரிகளாக இருந்திருக்க வேண்டும்..
ஆனால்.. ஈழம் அமைவதை இந்தியா விரும்பாமைக்கு இருக்கின்ற காரணம் அதுவாக நான் நினைக்கவில்லை. ஒன்று தனக்கருகில் இன்னொரு நாடு உருவாவதை இந்தியா ஏனோ விரும்பவில்லை.. அது ஏன்..?
அடுத்தது(தயவு செய்து இந்தக் கேள்விக்கு கேலியாக பதிலளிக்க வேண்டாம். ஏனெனில் இதுவும் ஆராயப்பட கூடிய விடயம் தான்..) தனக்கருகில் பலம் பொருந்திய ஒரு அமைப்பு இருப்பதை இந்தியா விரும்பவில்லையா?
அகண்ட ஈழம் என்று ஏதோ சொல்கிறார்களே..(அதுதான் தமிழ் ஈழத்தையும் தமிழகத்தையும் இணைத்து) விடுதலைப்புலிகளின் தலைவர் கனவில் கூட கண்டிராத அந்த அகண்ட ஈழத்தை புலிகள் கோருவார்கள் என்ற புனைகதையை இந்தியா நம்பகிறதா?
தயவு செய்து இந்தியராக பதில் சொல்லுங்கள்.. இறுதியாக யொசித்து பாருங்கள்.. பக்கத்தில் அவ்வப்போது சண்டை பிடிக்கின்ற பாகிஸ்தானுக்கே அவ்வப்போது சென்று கை குலுக்குகின்ற இந்தியா இன்னமும் புலிகளுடனான முறுகல் நிலைக்கு பழைய காரணங்களைத்தான் சொல்லிக்கொண்டிருக்க வேண்டுமா?
ஈழம் வருவதை இந்தியா விரும்பாத காரணம்
1, புலிகளை பிடிக்காத காரணம் அறிந்த உண்மை. இதை கூட பரஸ்பர பேச்சு அனுகுமுறையில் சரி செய்து விடலாம்.
2. ஈழம் உருவாகும் போது இலங்கை இந்தியாவிற்க்கு நிரந்தர எதியாகி விடும்.
3.ஈழம் உருவான பின்பு தமிழ் நாட்டில் வேலை இல்லாத கூட்டம் தனி தமிழ் நாடு கண்டிப்பாக கேட்க்கும். தமிழ் நாடு விடுதலை படை புலிகளின் சார்பு அமைப்பு. 40 பேரை தாண்டாத இந்த அமைப்பு மக்கள் விரோத செயல்கள் பல செய்துள்ளது.
4. புலிகளின் கொள்கையான யார் சுதந்தியதிற்க்கு போரடினாலும் ஆதர்வு தருவோம் என்பது இந்தியாவ்ற்க்கு பாதக மானது. சில நாள் முன்பு பீகார் மாவோய்ஸ்ட் தீவிரவாதிகளின் தலைவன் வெளிபடையாக புலிகள் எங்களுக்கு பயிர்ச்சி அளித்ததாக கூறினான். இது எந்தளவு உண்மை என்பது தெரியவில்லை.
அதனால் தான் பெடரல் அமைப்புக்கு இந்தியா ஆதர்வு தருகின்றது.
நான் சொன்னதில் தவறு ஏதும் இருந்தால் கோபிக்காமல் திருத்தவும்
.
.
.

