02-20-2006, 03:08 PM
Vasampu Wrote:<b>தல</b>
இதற்கு ஏன் நீங்கள் கறுப்பு வெள்ளைத் தொலைக்காட்சி காலத்திற்கு சென்றீர்கள். சமீபத்திலும் கொல்கொத்தாவில் கங்குலிக்கு ஆதரவாக அங்கு கலகம் நடந்ததே.
உங்களுக்கு ஞாபகம் இருக்குமென்று நம்புகின்றேன் முன்பு யாழ் மாவட்ட பாடசாலைகளுக்கான உதைபந்தாட்ட போட்டி யாழ் முற்றவெளியில் நடை பெறும். அப்போது இறுதிப் போட்டியின் போது அங்கு நடைபெறாத கலவரமா?? இவை எல்லாம் இரசிகர்களின் அதீத பற்றால் ஏற்படுபவை.
ஆனால் இங்கு நித்திலா என்ன இந்தியாவிற்கு ஆதரவான கருத்தா எழுதியுள்ளா??
1996 ல் யாழ்ப்பாணத்தில் மின்சார வசதி இருக்கவில்லை ஆதலால்த்தான் கறுப்பு வெள்ளை தொலைக்காட்ச்சி,12 v பற்றறியோடு, நான் சொல்லவந்த நிகள்வு கலவரம் அல்ல. இந்தியா தோற்றுப் போன கவலை...!
::

