02-20-2006, 02:46 PM
ம்.. இலங்கையணியைவிட இந்திய அணிமீது விருப்பம் கொண்ட பல இலங்கைத் தமிழர்கள் இருக்கிறார்கள். அவ்வளவும் ஏள்..? இலங்கைத் தமிழருக்கு பாகிஸ்தானுடன் என்ன பிணக்கு.. எதுவும் இல்லை! ஆனாலும் கார்கில் சண்டையில் இந்தியா வெல்ல வேண்டும் என்று மனதார குறிப்பிடத்தக்களவு இலங்கைத்தமிழர்கள் விரும்பினார்கள். ஆனாலும் இன்றளவும் இந்தியா ஈழத்தமிழரின் அபிலாசைகளுக்கு எதிரானதாகவே நடக்கிறது. காரணம் இந்தியாவின் இறையாண்மை எனப்படுகிறது. சரி.. இந்த முரணை என்னவென்பது? ஒரு நாட்டின் இறையாண்மைக்காக இன்னொரு இனம் இறையாண்மையுடன் வாழ வழிவிடப்படவில்லை. லக்கிலுக்! ராஜா இங்கே ஈழத்தமிழர் தரப்பிலிருந்து சிறுபிள்ளைத்தனமாக, முதிர்ச்சியற்ற கருத்துக்கள் வந்த போதும் அவற்றுக்கு நீங்களும் விசமம் நிரம்பி (வேண்டுமென்றே நிரப்பி) --இதில முதலில் யார் செய்தது என்ற பிரச்சனைக்கு வரவில்லை! -- கருத்துக்களை சொன்ன போதும் இன்றைக்கும் இந்தியா என்னும் நாட்டிற்கு ஈழம் அமைவது துளியும் விருப்பம் இல்லை.
ஒரு தமிழனாக என்று கேட்க வில்லை. ஒரு இந்தியனாக இருந்து பதில் சொல்லுங்கள். ஈழம் அமைவதனால் இந்தியனான உங்களிற்கு என்ன பாதிப்பக்கள் ஏற்படும் என நிங்கள் நினைக்கிறீர்கள்? உண்மையில் பாதிப்புக்கள் ஏற்படுமா? அதற்கு முன்னர் இந்தியா ஈழம் அமைவதை விரும்பவில்லை என்ற உண்மையை ஏற்றுக்கொள்கிறீர்களா? ஆம் எனில் நீங்கள் ஒரு இந்தியர் என்ற வகையில் ஏன் அவ்வாறு விரும்பவில்லை என கூற முடியுமா? இரண்டு தரப்பிலும் நடந்து கொண்டிருக்கும் குழந்தைப்பிள்ளைத்தனமான சீண்டல்களையும் நிறுத்திவிட்டு எதிரிகளாக இருந்தாலும் நாகரீகமான எதிரிகளாக இருத்தல் தான் நல்லது.

, ...