02-20-2006, 12:53 PM
இவோன் Wrote:ஓம் தலை! சாருவின் சொகுசு வாழ்க்கை தொடர்பான கருத்தை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் அதெல்லாவற்றையும் விட முக்கியமானது புலத்தில் பிறந்து வளர்கின்ற தலைமுறைதான். அவர்கள் எந்த அளவிற்கு அங்கு சென்று வாழ முற்படுவார்கள்..? (இங்கே அவர்களினதோ பெற்றோர்களினதோ தவறு எதுவும் இல்லை. அதுதான் இயல்பு)
ஆனாலும் தலை! ஈழத்தில் பிரச்சனை ஒன்று இருக்கிறது. அதனாலே தொழ்ல் வாய்ப்புக்கள் இல்லை, பாதுகாப்புக்கள் இல்லை என்ற காரணங்களினால் புலத்தில் வாழ்கின்றவர்கள் உடனடித் தீர்வு ஒன்று கடைக்கும் பட்சத்தில் நாடு திரும்புவார்களா? அல்லது சிங்கப் பூர் மாதிரி வரும் வரைக்கும் பார்த்துக்கொண்டிருப்பார்களா? அப்படிப் பார்த்துக்கொண்டிருப்பார்களேயானால் அது சொகுசு வாழ்க்கையின் பிடியில் சிக்கிய நிலைமைதானே
இளையோரைப்பற்றியானால்.... இதற்கு காலம் தான் பதில் சொல்லவேண்டும். நிற்ச்சயமாக எதையும் சொல்ல முடியாத நிலை. நடந்து வரும் சர்வதேச அரசியல் நிலைப்பாடுகள் வேற்று இனத்தவருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பட்ச்சத்தில் கட்டாய தாயகம் நோக்கிய இடம்பெயர் பயணம் ஆரம்பிக்கலாம்...
அதவிட தாய்நாட்டில் இருக்கும் நிரப்பப்படாத வெற்றிடங்கள் அதாவது வேலைவாய்ப்புக்கள் அவர்களை இழுத்துச் செல்லும்.... ஆனால் கலாச்சார மாற்றம் அவர்களை தாயகத்தில் இருந்து விலக்கியே வைத்திருக்கும்... அது உண்மைதான்..!
::

