02-03-2004, 10:19 AM
இரண்டு சம்பவங்களும் வெறும் செய்தியாகவன்றி உதாரணங்களாக அமைந்திருப்பது வேதனை அளிக்கிறது...இங்கு பெற்றோரை மட்டும் குறை கூற முடியாது. அவர்கள வாழும் நாட்டினதும் அதன் சட்ட அமைப்புக்களையும் நடமுறைகளையும் விளங்கிக் கொள்ளும் நிலையில் இல்லாதவர்களுக்கு அதை விளங்கப்படுத்த வேண்டியது அவ்வவ் நாடுகளின் கடமை...அதை குறிப்பிட்ட நாட்டின் அரசுகள் பேதமற்ற முறையில் செய்திருக்க வேண்டும்...! அல்லது ஆலோசனை பெறும்படி ஒவ்வொருவரும் அகதியாக பதியப்பட்ட பின்னரோ அல்லது அகதி அந்தஸ்து பெற்ற பின்னரோ ஆலோசனை அளிக்க வேண்டும்....!
இப்போ இலங்கையில் இருந்து வந்த பலருக்கு ஜேர்மனியை உலகப்படத்தில் காட்டச் சொன்னால் அது புரிவதில்லை....ஏன் இலங்கையில் வாழும் சிங்கள மக்களிடம் நோர்வே பற்றிக் கேட்டால் அப்படி ஒரு நாடு இருக்கா என்று கேட்கும் அளவிற்கு ஆட்கள் இருக்கிறார்கள்...!
எனவே பலவகைப் பின்னணிகளில் இருந்து வரும் பெற்றோரை புதிய சூழலுக்கேற்ப சட்ட வழிநடத்த வேண்டிய சிறிய, முக்கிய பொறுப்பு அவ்வவ் நாடுகளின் கடமை...அது ஒவ்வொருவரினதும் அடிப்படை உரிமையும் கூட....!
ஒரு மாணவனோ அல்லது மாணவியோ பல்கலைக்கழக கல்வி பெறும் நோக்கில் கல்விகற்கும் போது தாம் கல்விபயிலும் நாடுகளில் உள்ள அடிப்படை, நடமுறைக் கல்விக் கொள்கைகள் பற்றிய விடயங்களை உள்வாங்கி பெற்றோருக்கு தெரிவிக்க வேண்டும்...அதன் பிரகாரம் பெற்றோர் விழிப்புணர்த்தப்பட்டு அவர்கள் சரியான நடவடிக்கைகளை எடுக்க உதவ முடியும்...காரணம் பெற்றோரைவிட குறிப்பிட்ட நாட்டின் கல்விக் கொள்கைகள் பற்றி அங்கு கல்வி பயிலும் ஒருவருக்கு ஓரளவேனும் விளங்கிக் கொள்ளக் கூடிய வாய்ப்பு மிக அதிகம்....!
உதாரணத்துக்கு இலங்கையில் எமது பெற்றோர் படித்த காலத்தில் இருந்த கல்விக் கொள்கைக்கும் நாம் படித்த காலத்தில் இருந்த கல்விக் கொள்கைக்கும் இடையே பாரிய வேறுபாடு இருந்தது...அரசாங்கங்கள் காலத்துக்கு காலம் இவை பற்றி அறிவித்தாலும் பாடசாலைகளில் நாம் பெற்ற செய்திகள் மூலமே எமது பெற்றோரை நாம் அதிகம் விழிப்புணர்வு படுத்தினோம்.....இதையே இங்குள்ள மாணவர்களும் செய்ய முனைய வேண்டும்....அதே போல் மாணவர்களின் கோரிக்கைகளைப் பெற்றோரும் சரியான முறையில் விரைந்து பரிசீலிக்க வேண்டும்...! சட்ட உதவிகள் அல்லது ஆலோசனைகள் தேவைப்பட்டால அவற்றைப் பெற்று குறைகள் அல்லது தேவைகள் காணப்படின், தமது நியாய பூர்வ கோரிக்கைகளை குறிப்பிட்ட அமைச்சுகளுக்கு அனுப்ப வேண்டும்....!
அடுத்து...எந்த மாணவனோ அல்லது மாணவியோ பல்கலைக்கழகக் கல்விதான் வாழ்வின் ஒரே இலட்சியம் என்று இருக்கக் கூடாது....இன்று பல மாணவர்கள், குறிப்பாக மேற்கில், உயர்கல்வி பெறாது இளநிலைக் கல்வியுடன் (A/L, O/L, Diploma) வேலை வாய்ப்புப் பெற்று குறிப்பிட காலத்தின் பின் அந்த வேலை வாய்ப்பு அனுபவத்தைக் காட்டி பல்கலைகழகக் கல்வியை பகுதி நேரக் கல்வியாகத் தொடர்கின்றனர்...!
பல்கலைகழகக் கல்வி என்பது சில சந்தர்ப்பங்களில் எம்மை சோம்பேறிகள் ஆக்குகிறது என்றால் அது உண்மையாகக் கூட இருக்கலாம்.....பட்டம் முடித்த பின் தொழில் தேடிப் போனால் 'நீ கனக்கப்படித்திருக்கிறாய் இந்த வேலை சரிவராது' என்று திருப்பியும் அனுப்பிவிடுவார்கள்....உண்மையைச் சொன்னால் எமது சமூகம் கல்வி தொடர்பில் காட்டும் அபரிமித பரிமானம் சில வேளைகளில் நாம் யதார்த்ததை தரிசிக்கும் போது சலிப்பைத்தான் ஏற்படுத்துகிறது...இது எமது சமூக மாணவர்கள் பலர் கடந்த காலத்தில் கண்ட அனுபவமும் கூட.....!
எனவே பெறும் கல்வியை சரியான தொலை நோக்கோடு ஒவ்வொருவரினதும் இயலுமைக்கு ஏற்ப பெற்று அவற்றை சரியான நேரத்தில் பயன்படுத்தி முன்னேறுவதே அவசியம்.... அதை விட்டு பல்கலைக் கழகக் கல்விதான் வாழ்க்கை என்று இருப்பது முழு மடமை என்றுதான் நாம் கூறுவோம்.....! ஆனால் ஒரு பிரஜைக்கு அவசியமான அடிப்படைக் கல்வியை பெறுவது அவசியம்....அதன் பின் தொழில்சார் கல்வி பெறுவதே பட்டங்கள் பெறத் துடிப்பதிலும் பார்க்கச் சாலச் சிறந்தது...அதுவும் இன்று தொலைக்கல்வி முறைகள் நன்கு விருத்தியடைந்துள்ள நிலையில்....!
பல்கலைக்கழகக் கல்வி கிடைக்கவில்லை என்பதற்காக குடிப்பதும் கவலையோடு அலைவதும் முழு மூடத்தனம்...அவன் டொக்டர் இவர் இஞ்சினியர்...அவற்ற மகள் பட்டதாரி இவற்ற மகன் எக்கவுண்டன்...இவை ஒரு தனிமனித ஆளுமையை வளர்க்க உதவாது...இதற்காகத்தான் பல்கலைகழகக் கல்வி என்றால் இக்குறிப்பு அப்படிப்பட்ட வார்த்தை உச்சரிப்புகளுக்காக படிக்கும் நவகால முழு மூடர்களுக்காக எழுதவில்லை என்பதையும் தெரிவிக்க விரும்புகிறோம்....!
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
:!:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>