02-19-2006, 11:12 PM
வினித் Wrote:<b>சிவாஜிலிங்கத்தின் மதம் 'இஸ்லாம்': சொல்கிறது நாடாளுமன்ற இணையத்தளம்! </b>
[ஞாயிற்றுக்கிழமை, 19 பெப்ரவரி 2006, 16:50 ஈழம்] [ச.விமலராஜா]
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கத்தின் மதம் இஸ்லாம் என்று சிறிலங்கா நாடாளுமன்றத்தின் புதிய இணையத்தளம் தெரிவித்துள்ளது.
சில நாட்களுக்கு முன்பாக பதிவேற்றப்பட்ட 'திறக்கப்பட்ட' இந்த இணையத்தளத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பல விவரங்கள் தவறுதலாக இடம்பெற்றுள்ளன.
அதேபோல் அமைச்சர் தினேஸ் குணவர்த்தனவின் குடிநிலை என்ற தலைப்பின் எதிரே '<b>விதவை'</b> என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர் மற்றும் முகவரிகளை மட்டும் பதிவேற்றிவிட்டு தொலைபேசிகளையோ வேறு எதுவித தொடர்பு எண்களையோ பதிவு செய்யாமல் இருக்கிறது.
சிறிலங்காவின் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களின் முழு விவரங்களைக் கூட தெரியப்படுத்தாத இந்த இணையத்தளமானது உலக வங்கியினது நிதி உதவியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நன்றி:புதினம்

