02-19-2006, 02:46 PM
இவோன் Wrote:அதில் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது. அது போலவே நடிகனுக்கு பாலூற்றும் ஒருவனும், தன்னுடைய உரிமையைப் பயன்படுத்தி பாலூற்றுகின்றென் என்றால் அதற்கு நாம் என்ன செய்ய முடியும்,? எப்படி அவனை சினிமா பைத்தியம் என்று சொல்ல முடியும்?அதே நேரம் ..கடவுளை வழிபடுவதில் உயர்த்தப்பட்டவர்கள் பாப்பாணிகள். எனவே இவ்வளவு காலமும் வழிபட்ட மக்களை அவமதித்து பாப்பாணர் கும்பிடும் கடவுளை மறுதழிப்போம் என்று வெளிக்கிட்டார் பெரியார்( அது பற்றி பிரிதொரு பக்கத்தில் விவாதிப்போம்) . அப்படியான வாதம் தான் உம்முடையது.
இப்படி உங்களுக்கு சினிமா பிடித்திருக்கிறது. எல்லோருக்கும் சினிமா பிடித்திருக்கிறது. உங்கள் வார்த்தைகளில் விடுதலைப் போராளிகளுக்கும் பிடித்திருக்கிறது. சினிமா தப்பான பாதையில் செல்கின்றதென தெரிந்தும் உங்களுக்கு சினிமா மீது வெறுப்பு தோன்றவில்லை. அப்படியிருக்க இன்னுமொரு நபர், சினிமா தப்பான பாதையில் செல்கிறதென அறிந்தும், சினிமாவிற்கு அதீத ஆதரவு கொடுப்பதில், கட் அவுட் வைப்பதில் பாலூற்றுவதில் என்ன தவறு காண முடியும்? வெண்டுமானால் அவர் அளவுக்குமீறி சினிமாவை விரும்புகிறார் என்றும், நீங்கள் அதாவது தூயவன் கொஞ்சம் அளவாக சினிமாவை விரும்புகிறார் என்றும் சொல்லிக் கொள்ளலாம்.
அப்படிப் பார்த்தால் அளவுக்கதிகமாக சினிமாவை விரும்புகினறவர் முழுச் சினிமா பைத்தியம் என்றால்.. கொஞ்சம் அளவாக சினிமாவை விரும்புகின்ற நீங்கள் அல்லது உங்களைப் போன்றவர்கள் அரைப் பைத்தியங்கள் என்று தான் கூறமுடியும்.. (புரியாவிடில் மீளவும் வாசிக்க வேண்டுகிறேன்.)
(--இன்னொரு குறிப்பாக எனது பெயரைச் சுட்டிக்காட்டி தமிழில் பெயர் வைக்க வக்கில்லை என்று ஒரு இடத்தில் குறிப்பிட்டிருந்தீர்கள். இதற்கு நீங்கள் சொன்ன அதே வார்த்தைகளை உங்களுக்கு சொல்கின்றேன்..அது!--)
தன்குடும்ப உறவுகள் கஸ்டப்படும் அதே பொழுது, ஒரு பாலபிசேகம் செய்பவனுக்கும், இங்கே அடையாளப்படுத்துவதற்காக படம் ஒன்றை இணைத்ததையும் முடிச்சுப் போடும் விதம் எப்படியானது என்பது தான் எமக்குப் புரியவில்லை. அதிலும் நீர் போட்ட அரை, முழுக்கணக்கிருக்கே........... உம் கணக்கு வாத்தியாரை கண்டாக வேண்டும்.
[size=14] ' '

