02-19-2006, 10:54 AM
Quote:எந்த நடிகரோ அல்லது வேறு விதமாகவோ அடையாளபப்டுத்துவது என்பது ஒவ்வொருவருக்குமுள்ள உரிமை
அதில் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது. அது போலவே நடிகனுக்கு பாலூற்றும் ஒருவனும், தன்னுடைய உரிமையைப் பயன்படுத்தி பாலூற்றுகின்றென் என்றால் அதற்கு நாம் என்ன செய்ய முடியும்,? எப்படி அவனை சினிமா பைத்தியம் என்று சொல்ல முடியும்?அதே நேரம் ..
Quote:எனக்கு சினிமா மீது ஈடுபாடு உண்டு. தமிழ்சினிமா செல்லும்பாதை தப்பு என்பதற்காக சினிமாவை நானும் வெறுக்கவில்லை! யாரும் வெறுக்கவில்லை! ஏன் விடுதலைப் போராளிகள் கூட வெறுக்கவில்லைஇப்படி உங்களுக்கு சினிமா பிடித்திருக்கிறது. எல்லோருக்கும் சினிமா பிடித்திருக்கிறது. உங்கள் வார்த்தைகளில் விடுதலைப் போராளிகளுக்கும் பிடித்திருக்கிறது. சினிமா தப்பான பாதையில் செல்கின்றதென தெரிந்தும் உங்களுக்கு சினிமா மீது வெறுப்பு தோன்றவில்லை. அப்படியிருக்க இன்னுமொரு நபர், சினிமா தப்பான பாதையில் செல்கிறதென அறிந்தும், சினிமாவிற்கு அதீத ஆதரவு கொடுப்பதில், கட் அவுட் வைப்பதில் பாலூற்றுவதில் என்ன தவறு காண முடியும்? வெண்டுமானால் அவர் அளவுக்குமீறி சினிமாவை விரும்புகிறார் என்றும், நீங்கள் அதாவது தூயவன் கொஞ்சம் அளவாக சினிமாவை விரும்புகிறார் என்றும் சொல்லிக் கொள்ளலாம்.
அப்படிப் பார்த்தால் அளவுக்கதிகமாக சினிமாவை விரும்புகினறவர் முழுச் சினிமா பைத்தியம் என்றால்.. கொஞ்சம் அளவாக சினிமாவை விரும்புகின்ற நீங்கள் அல்லது உங்களைப் போன்றவர்கள் அரைப் பைத்தியங்கள் என்று தான் கூறமுடியும்.. (புரியாவிடில் மீளவும் வாசிக்க வேண்டுகிறேன்.)
(--இன்னொரு குறிப்பாக எனது பெயரைச் சுட்டிக்காட்டி தமிழில் பெயர் வைக்க வக்கில்லை என்று ஒரு இடத்தில் குறிப்பிட்டிருந்தீர்கள். இதற்கு நீங்கள் சொன்ன அதே வார்த்தைகளை உங்களுக்கு சொல்கின்றேன்..அது!--)
Quote:எந்த நடிகரோ அல்லது வேறு விதமாகவோ அடையாளபப்டுத்துவது என்பது ஒவ்வொருவருக்குமுள்ள உரிமைதவிரவும் தீவிர இலக்கியம் பகுதி யாழில் தொடர்ந்தும் இருக்கிறது. அது தொடர்பில் எந்த விதமான அடியைத் தந்தீர்கள் என்று தெரியவில்லை. உண்மையைச் சொல்லப்போனால் அதனை மனதில் வைத்து நீங்கள் தான் எமக்கான பதிலடிகளை தரவேண்டும். ஆனால் அவ்வாறு நடந்துகொள்ளாமல் நாகரீகமாக நடந்து கொள்வதையிட்டு மகிழ்ச்சியும் நன்றியும்.
தீவிர இலக்கியம் இருக்கினறதென்பதற்காக அங்கே கண்டிப்பாக நாளுக்கொரு கருத்து எழுத வேண்டுமென்றில்லை. ஏனெனில் அது அரட்டைப் பகுதியல்ல. ஆகவே விவாதிக்கப்பட வேண்டிய கருத்துக்களும் அதற்கான தேவைகளும் ஏற்படும் போது கண்டிப்பாக அங்கே இடப்படும்.

