Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நேரத்தின் மதிப்பு
#1
<b>நேரத்தின் மதிப்பு</b>

சகோதரியின் முக்கியத்துவம் தெரியவேண்டுமென்றால், சகோதரியுடன் பிறக்காதவர்களிடம் கேளுங்கள்

பத்து வருடங்களின் மதிப்பை சமீபத்தில் விவாகரத்து செய்த தம்பதிகளைக் கேளுங்கள்

நான்கு வருடங்களின் மதிப்பை ஒரு பட்டதாரியிடம் கேளுங்கள்

ஒரு வருடத்தின் மதிப்பை இறுதித்தேர்வில் தோல்வியுற்ற மாணவனிடம் கேளுங்கள்

ஒன்பது மாதங்களின் மதிப்பை அப்போதுதான் குழந்தைப்பெற்ற இளம் தாயிடம் கேளுங்கள்

ஒரு மாதத்தின் மதிப்பை குறிப்பிட்டக் காலத்திற்கு முன்னதாகவேக் குழந்தை பெற்ற ஒரு தாயிடம் கேளுங்கள்

ஒரு வாரத்தின் மதிப்பை ஒரு வாரப் பத்திரிகையயின் ஆசிரியரிடம் கேளுங்கள்

ஒரு மணி நேரத்தின் மதிப்பை சந்திக்கக் காத்திருக்கும் காதலர்களிடம் கேளுங்கள்

ஒரு நிமிடத்தின் மதிப்பை பேருந்தையோ, விமானத்தையோ, இரயிலையோ தவறவிட்ட பயணியிடம் கேளுங்கள்

ஒரு வினாடியின் மதிப்பை விபத்திலிருந்து மயிரிழையில் உயிர்தப்பிய நபரிடம் கேளுங்கள்

ஆயிரத்தில் ஒரு வினாடியின் மதிப்பை ஒலிம்பிக் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப்ப்தக்கம் வென்ற வீரரிடம் கேளுங்கள்

ஒரு நண்பனின் மதிப்பு அவனை இழக்கும்போதுதான் தெரியும்.


காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை. ஒவ்வொரு மணித்துளியும் விலைமதிப்பற்றது. விலைமதிப்பற்ற நேரத்தை நமக்கு மிகவும் வேண்டியவர்களுடன் பகிர்ந்துக்கொள்ளவேண்டும். பயனுள்ள விதத்தில் உபயோகப்படுத்தவேண்டும்.

ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்ப்பு. நன்றி: வினோத்
Reply


Messages In This Thread
நேரத்தின் மதிப்பு - by Shankarlaal - 02-18-2006, 03:10 PM
[No subject] - by Eelam Angel - 02-20-2006, 10:53 PM
[No subject] - by நர்மதா - 02-20-2006, 11:17 PM
[No subject] - by ப்ரியசகி - 02-21-2006, 07:23 PM
[No subject] - by sabi - 02-21-2006, 09:17 PM
[No subject] - by tamilini - 02-21-2006, 10:44 PM
[No subject] - by RaMa - 02-25-2006, 05:55 AM
[No subject] - by Nitharsan - 02-25-2006, 08:20 AM
[No subject] - by அனிதா - 02-26-2006, 04:47 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)