02-18-2006, 11:52 AM
<b><span style='font-size:25pt;line-height:100%'>முகத்தார் வீடு - 18</b></span>
<i><b>புது மாப்பிளைக்கு பப் . .பப் . பப்ரி</b></i>
<b>சின்னப்பு எவ்வளவு பகிடி விட்டாலும் சண்டைக்கு வரமாட்டார் எண்ட நம்பிக்கையில்தான் </b>
<i>(முகத்தார் வீட்டில் பே;பர் பாத்துத்துக் கொண்டிருக்கிறார் அந்த நேரம் சின்னப்பு மிகுந்த சோர்வுடன் அங்கு வருகிறார்)</i>
முகத்தார் : அட . . சின்னப்பு என்ன காணக்கிடைக்குதில்லை உடம்புக்கு எதைவது வருத்தங்களோ ? ? ஆளும் சரியா வாடின மாதிரிக் கிடக்கு
சின்னப்பு : சா . . அப்பிடியொண்டுமில்லையடா . . மனுசிக்காரி கொழும்புக்குப் போய் 10 மாதமாகுது என்னைப் பற்றியொரு சிந்தனையிருக்கோ பார் நானும் எத்தனை நாளுக்குத்தான் அங்கை இங்கை எண்டு திண்டு திரியிறது .
முகத்தார் : உன்ரை பிரச்சனை எனக்கு விளங்குது சின்னாச்சிக்கு விளங்கலையே என்ன செய்வம் நானும் உன்னை நெடுக கூப்பிட்டு எப்பிடி சாப்பாடு தாறது மனுசிக்காரி நான் சாப்பிடேக்கையே முறைச்சுப் பாக்கிறாள்
சின்னப்பு : எனக்கும் ஒருதரிடமும் கடமைப்பட விருப்பமில்லை முகத்தான் சின்னாச்சிக்கு ஒரு பாடம் படிப்பிக்கவேணுமெண்டு நினைச்சுக் கொண்டுதான் உன்னட்டை வந்தனான் பொண்ணம்மா எங்கை வீட்டிலையோ? ? ?
முகத்தார் : அவள் அடி வளவுக்கைத்தான் நிக்கிறாள் நீ சொல்ல வந்ததைச் சொல்லு பாப்பம்
சின்னப்பு : முகத்தான் எனக்கு அவசரமா ஒரு பெம்பிளை தேவை கலியாணத்துக்கு வந்த எதாவது குறிப்புகள் இருந்தா பார் பாப்பம்
முகத்தார் : சின்னப்பு நான் கலியாண புரோக்கர் என்ரை பேரை மாத்திப் போடாதை .
சின்னப்பு : இப்ப நான் என்ன சும்மா வைச்சுக்கவே கேக்கிறன் சட்டப்படி கலியாண கட்டத்தானே
முகத்தார் : சின்னப்பு உனக்கென்ன தலைகிலை எதாவது கழண்டு போச்சே . .இந்த வயசிலை போய் கலியாணம் எண்டு கொண்டு ஊருக்கை எவ்வளவு வெட்கம் அதோடை சின்னாச்சி வேறை உயிரோடை இருக்குது . .
சின்னப்பு : எனக்கு ஒருதரைப் பற்றியும் கவலையில்லை ஒரு நேர சோறு தராத சனங்கள் வேலைகாரி ஒண்டை வீட்டிலை வைச்சிருந்தாலும் வீண் கதைதான் கதைக்குங்கள் அதிலும் பார்க்க சட்டப்படி கட்டி கூட்டி வந்தால் பிரச்சனையில்லை தானே . . என்ன உனக்கு கொமிசன் கிடைக்காது எண்டு பயப்பிடுகிறியோ. . அதுவும்தாறன்
முகத்தார் : என்ரை கதையை விடு இந்த விசயம் நம்மடை மனுசிக்குத் தெரிஞ்சால் எனக்கும் திண்ணேலைதான் வாழ்வு நல்லா யோசிச்சு முடிவெடு சின்னப்பு . .
சின்னப்பு : இஞ்சை பார் காசு எவ்வளவு குடுக்கிறத்துக்கும் நான் ரெடி வீட்டிலை புருஷன்மாரை தனிய விட்டுட்டு ஆடப் போற பொம்பிளையளுக்கு என்ரை முடீவு படிப்பனையாக இருக்கவேணும் கண்டியோ . .நீயும் கையை விட்டுட்டால் இப்பிடியே பட்டினி கிடந்து சாக வேண்டியதுதான் வேறை வழியில்லை . .
முகத்தார் சரி இஞ்சையில்லை . . . . .லை ஒரு பகுதியிருக்கு கூட்டிப்போறன் ஆனா நான்தான் ஒழுங்கு செய்ததெண்டு வெளியிலை மூச்சுக் கூட விடப்பிடாது சரியோ ? ? ?
சின்னப்பு : வாயே திறக்கமாட்டன் எப்ப . . எப்ப . . போறது ? ?
முகத்தார் : பாத்தியோ நீ வயித்துப் பசிலை இருக்கிற மாதிரி எனக்குத் தெரியலை எதுக்கும் அந்த பகுதியோடை ஒருக்கா கதைச்சுப் போட்டு உன்னைக் கூட்டிட்டுப் போறன் அப்ப இண்டைக்கு இஞ்சை சாப்பிட்டுப் போவன்
சின்னப்பு : முகத்தான் எனக்கு இப்ப பசியில்லை வாறன் போட்டு . . .
முகத்தார் : (இந்த சின்னப்புவை புரிஞ்சு கொள்ள முடியலையே இந்த வயசிலை போய் கலியாணம் . . கடவுளே இது எங்கை கொண்டு போய் முடியுமோ ? ? )
<i>(ஒரு நல்லநாள் மம்மல் பொழுது சின்னப்புவைக் கூட்டிக் கொண்டு பெண் பாக்கிறத்துக்கு வந்தார் முகத்தார்)</i>
வீ .காரர் : வாங்க . . வாங்க . . இருட்டுக்கை வாறீயள் அது சரி மாப்பிளையை ஏன் கூட்டி வரேலை ? ?
முகத்தார் : ஜயா இவர்தான் மாப்பிளை உங்களுக்கு முன்னமே சொன்னான் தானே
வீ .காரர் : இல்லை நீங்க கொஞ்சம் வயசு எண்டு சொன்னீங்கள் நான் இந்தளவு வயசா இருக்கும் எண்டு நினைக்கலை . .
முகத்தார் : சரி ஜயா சுனங்கேலாது பெண்ணை கூப்பிடுங்கோ பாத்திட்டு போயிறம்
வீ .காரர் : அம்மா . .அன்னம் இஞ்சை புரோக்கர் முகத்தார் வந்திருகாக. . .மற்றும் அவர் . .
முகத்தார் : வோய் என்ன இது நாங்களும் வடிவேலின்ரை படம் பாத்திருக்கிறம் சும்மா ஆளைக் கூப்பிடுங்க
சின்னப்பு : (ரகசியமாக) முகத்தான் சின்ன பெண்ணு எண்டு சொன்னாய் பாத்தா தலை எல்லாம் நரைச்ச மாதிரி தெரியுது
வீ .காரர் : என்ன . .பெரியவர் . . சா . . மாப்பிளை சொல்லுறார் ? ?
முகத்தார் : இல்லை பெண்ணு கொஞ்சம் வயசாக்கிடக்கிற மாதிரி தெரியுது என்கிறார்
வீ .காரர் : வோய் அது என்ரை பெண்டாட்டி ஜயா . .நல்ல காலம் . . உங்களுக்கு அந்த பக்கத்திலை நிக்கிறதுதான் பெண்ணு
முகத்தார் : அடடா . .இருட்டோடை கலந்து நிக்கிறதாலை தெரியலை பிள்ளை இஞ்சாலை கொஞ்சம் வாங்கோவன்
முகத்தார் : (ரகசியமாக) சின்னப்பு கண் தெரியுதோ வடிவாப் பாத்துக் கொள் பிறகு என்னைப் பேசப்பிடாது
சின்னப்பு : முகத்தான் உண்மேலை நீ என்ரை தெய்வமடா இப்பிடியொரு பெம்பிளையை எனக்கு செட் பண்ணுவாய் . . சா . . காட்டுவாய் எண்டு நினைச்சுக் கூடப் பாக்கேலை
முகத்தார் : சரி . . சரி . . உணர்ச்சிவசப்படாதை . .இதுவெல்லாம் ஒரு தேசத் தொண்டு மாதிரி . . .(பொண்ணம்மாக்கு மட்டும் தெரிஞ்சுது முதுகிலை டிண் தான்)
முகத்தார் : அப்ப ஜயா மற்ற விசயங்களைப் பற்றி கதைப்பம் என்ன . .அது சரி இது ஆரு சின்னப் பையன் ? ?
வீ .காரர் : என்ரை பேரன்தான் மகளின்ரை பையன்
முகத்தார் : எங்கை மகளை காணேலை உள்ளுக்கை நிக்கிறாவோ ? ?
வீ .காரர் : இப்ப இவ்வளவு நேரம் பாத்தீங்களே அந்த மகளோடை பையன்தான்
முகத்தார் : அட . . அப்ப கலியாணம் கட்டாத மகள் இருக்கோ எண்டு கேக்க ஓம் எண்டு மண்டையை மண்டையை ஆட்டினீங்கள் ? ?
வீ .காரர் : இப்பவும் சொல்லுறன் இது என்ரை மகள்தான் இது என்ரை பேரன்தான் ஆனா என்ரை மகள் கலியாணம் கட்டேலை
முகத்தார் : என்னங்க ஒரே குழப்பமா கிடக்கே . .
வீ .காரர் : என்னங்க இதிலை குழப்பம் கலியாணம் கட்டாம குழந்தைபெறக் கூடாதா?
முகத்தார் : சின்னப்பு எழும்பு எங்களுக்கு இது சரிபட்டு வராது வேறை இடம் பாப்பம்
சின்னப்பு : (ரகசியமாக) முகத்தான் அமைதியா இரு நானே டென்சன் ஆகாமல் இருக்கிறன் குழந்தை இருந்தா இருந்திட்டு போகட்டும் நமக்கென்ன இப்படியொரு பெம்பிளை என்ரை மூஞ்சைக்கு கிடைக்கிறதே பெரிய விசயம் குழப்பிப் போடாதை இண்டைக்கே கூட்டிட்டு போகலாமோ எண்டு கேள்
வீ .காரர் : என்ன மாப்பிளை குசுகுசுக்கிறார் ? ? ?
முகத்தார் : வேறை என்ன அவருக்கு பிரச்சனையில்லையாம் இப்பவே காசை தந்திட்டு கூட்டிட்டு போகலாமோ எண்டு கேக்கிறார்
வீ .காரர் : காசை வேணுமெண்டால் தாங்கோ . ஆனா அடுத்த ஞாயிற்றுகிழமை இதே நேரம் வந்தீங்கள் எண்டால் தாலியை கட்டி கூட்டிட்டுப் போகலாம்
சின்னப்பு : ஏன் அவ்வளவு நாள் அதுக்கு முன்னம் ஏலாதோ ? ?
வீ .காரர் : அப்பிடியில்லைங்க ஞாயிற்று கிழமைதான் மகளோடை குடும்பம் நடத்திறவர் தொழில் அலுவலாக கொழும்புக்கு போறார் அதோடை முழு அமாவாசை நாள் நீங்க மகளை கூட்டிக் கொண்டு போறதும் ஒரு சனத்துக்கும் தெரியாது
முகத்தார் : அப்ப வீட்டிலை ஒரு ஆள் ஏற்கனவே புக் ஆகி இருக்குதா. . நல்ல பமிலி இதுக்குப் பிறகும் சின்னப்பு உனக்கு தேவையா ? ?
சின்னப்பு : முகத்தான் நீ இடத்தைக் காட்டினதோடை உன்ரை வேலை முடிஞ்சுது இனி நான் பாத்துக் கொள்ளுறன் வெளியிலை போய் நில் . . .
<i>(அடுத்த ஞாயிறு வாறது எண்டு சொல்லியிட்டு திரும்பினார்கள் இருவரும்)</i>
<i>ஞாயிற்றுக் கிழமை காலை சின்னப்பு வீடு
சின்னப்பு காலேலையே குளிச்சு வலு உற்சாகத்துடன் இருக்கிறார் றேடியோவும் பெரிதாகப் பாடுகிறது அதில் "<b>முதல் முதல் பார்த்தேன் உன்னை முழுவதும் மறந்தேன் என்னை"</b> என்ற பாடல் போய்க் கொண்டிருந்தது சின்னப்பு கண்களை மூடி பாடலை முணுமுணுத்தபடி சாய்கதிரையில் படுத்திருக்கிறார் வாசலில் ஓட்டோ ஒன்று வந்து நிற்கும் சத்தம் கேக்கிறது யாரோ படலைத்திறந்து கொண்டு வாறது தெரிய சின்னப்பு மெல்ல எழும்பிப் பாக்கிறார் </i>. <b>.சி . . ன் . . னா . .ச் . சி </b>
சின்னப்பு : (மனசுக்குள்) இவள் எங்கை இங்கை . . முகத்தான் எனக்கு ஆப்பு வைச்சிட்டான் போலக் கிடக்கு
சின்னாச்சி : என்னப்பா காலேலையே குளிச்சு வலு சந்தோஷமாக இருக்கிற மாதிரி கிடக்கு
சின்னப்பு : இப்ப என்னத்துக்கு இஞ்சை வந்தனீர் ? ?
சின்னாச்சி : அட . .நாசமே . .மனுசன் என்னபாடோ எண்டு விழுந்தடிச்சு ஓடி வாறன் வாசலை வைச்சு கேக்கிற கேள்வியைப் பார்
சின்னப்பு : இல்லை அறிவிச்சுப் போட்டு வந்திருந்தீர் எண்டால் வசதியா இருந்திருக்கும் இப்ப எல்லாம் பிழைச்சுப் போச்சு. . .
சின்னாச்சி : என்ன பிழைச்சுப் போச்சு . எண்டு கேக்கிறன் நான் கொழும்பிலை இருந்தாலும் எந்த நாளும் உங்கடை நினைப்புத் தானப்பா தனிய கஷ்டப்படுவீயளே எண்டு அதோடை பேப்பரிலையும் ஒரு கதையை படிச்சன் அதுக்கு பிறகு அங்கை நிக்க மனமே பிடிக்கலை ஓடி வந்திட்டன்
சின்னப்பு : அப்பிடி என்ன பேப்பரிலை பெரிசா போட்டுட்டாங்கள் நீர் ஓடி வாறதுக்கு .
சின்னாச்சி : ஒரு வயசான மனுசனாம் மனுசியை கொழும்புக்கு அனுப்பிப் போட்டு ஒரு சின்னப் பிள்ளையை இரண்டாம் தாரமா கலியாணம் கட்டிப்போட்டுதாம் எவ்வளவு வெட்கம் கெட்ட செயல் பாத்தீங்களே . .என்னவோ தெரியலை இதை வாசிச்ச பிறகு எனக்கு அங்கை நிக்கப் பிடிக்கலை
சின்னப்பு : (மனசுக்குள்) நாசமாப் போண முகத்தான் அதுக்குள்ளை பேப்பரிலை வேறை எழுதிப் போட்டுட்டான் போல கிடக்கு மகனே. .இரடி உனக்கு வைச்சுக்கிறன்
சின்னாச்சி : அது சரியப்பா ஏன் உங்களுக்கு இப்பிடி வேர்க்குது உடம்புக்கு எதாவது . ? ? ?
சின்னப்பு : சா . அப்பிடியில்லை சாதுவா வயித்தை கலக்கிற மாதிரி இருக்கு இரும் வாறன்
<i>(சின்னப்பு பாத்துறூம் நோக்கி பறக்கிறார்)</i>
<b>(சின்னப்பு வெறி சொறி உண்மைக் கதையை இஞ்சை எழுதினதுக்கு )</b>

<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>