02-18-2006, 10:33 AM
காவடி Wrote:Quote:ஆனால் வெளிப்படையாக எவர் எவர் பிழையாக தெரியும்பட்சத்தில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
நல்ல கருத்து தூயவன்.. அண்மைக்காலமாக மிகவும் ஈடுபாட்டுடன் எங்கள் <b>சின்னஞ்சிறுசுகள்</b> செய்யும் தம்மால் முடிந்ததான <b>தாயக சேவையை</b> இங்கு சிலர் கொச்சைப்படுத்தியும், கேவலப்படுத்தியும் வருகின்றனர். விவாத ரீதியாக தாங்கள் தோற்று விடக் கூடாதென்ற ஒரே நோக்கில் எதுவெல்லம் சொல்ல முடியுமோ அவற்றையெல்லாம் சொல்கின்றனர். அவர்களை என்ன செய்யலாம்
உங்கள் சின்னன்சிறுசுகளின் செயற்பாட்டினை எவரும் கொச்சைப்படுத்தவில்லை..! ஒரு செயற்பாட்டினை உளமார்ந்த ஆர்வத்துடன் செய்விப்பதற்கும்...ஏனோதானோ என்று பப்பிளிசிற்றிக்காக செய்வதற்கும் நிறைய வேறுபாடுண்டு..அதைத்தான் சுட்டிக்காட்டினம்..! எனவே உங்கள் சிறுசுகளை சின்னனிலையே சீராக வழிநடத்துக்கள்...செய்வீர்களா...??! இல்ல என்ர பிள்ளையும் இன்று "awareness programme போனது..நாங்கள் எவ்வளவு உதவி செய்யுறம்" என்று தம்பட்டம் அடிப்பீர்களா..??! பிறகு இவையும்... சமாதான காலத்தில் புகழிடத்தில் இருந்து தாயம் நோக்கிப் படையெடுத்த சில அநாமதேய நிறுவனங்களால் ஆரம்பிக்கப்பட்ட திட்டங்கள் பாதியில் கைவிடப்பட்ட நிலையில்...சரியான நிர்வாக நிதி முகாமைத்துவமின்றி இருக்கின்றது போல ஆகாதே..???! :roll:
hock:
செய்வன திருந்தச் செய்...இப்படி தமிழில் இருக்குது அதை எல்லா மொழியிலும் மொழிபெயர்த்து உங்கள் சின்னஞ்சிறுசுகளுக்கு சொல்லி கொடுங்கோ..! புகழிடத்தில் awareness programme நடத்திறது ஒன்றும் புதிய விடயமல்ல..! பாடசாலைகளிலேயே கற்றுக்கொடுக்கினம்..கற்றதைக் கூட ஒழுங்காக நடைமுறைப்படுத்த உங்கள் சின்னஞ்சிறுசுகளை சீராக வழிகாட்டுங்கள்..! ஒன்றைச் செய்வதற்கு முதல் அதை ஏன் எதற்காக செய்யுறம் என்ன விடயத்தைச் சொல்ல செய்யுறம் எப்படி வெளிப்படுத்த வேண்டும் போன்ற அடிப்படைகளை விளக்குங்கள்..! விளக்கமில்லாமல் உங்கள் சின்னஞ்சிறுசுகள் செய்வது எதுவும் பின்னாடி பயனளிக்காது..! மற்றும்படி புகழிடத்தில் உள்ள மற்றைய சின்னஞ்சிறுசுகளின்ர போல..உங்கள் சின்னஞ்சிறுசுகளின் extra curriculum activities நல்லாத்தான் இருக்குது..! இல்லை என்றில்லை..! இன்னும் உங்கள் சின்னஞ்சிறுசுகளை...அவர்களின் சிந்தனைகளை தாயகம் நோக்கி கொண்டுவர நிறையச் செய்ய இருக்குது...அதையாவது ஏற்றுக் கொள்வீங்களோ...இல்லை இதுவே போதும் என்று விட்டிருவீங்களோ..??!
hock:
எனவே உங்கள் சின்னஞ்சிறுசுகளின் நடவடிக்கைகளை இங்கு பிரசுரிக்கும் போது அல்லது பிரச்சாரப்படுத்தும் போது வரும் விமர்சனங்களையும் உள்வாங்கக் கற்றுக்கொள்ளுங்கோ..அதுக்குத்தான் கருத்துக்களம்..! கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள..!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

