02-18-2006, 08:20 AM
கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் எல்லாவற்றையும் எங்கும் எழுதிவிட முடியாது. கருத்துக்கள் மற்றையோரைப் பாதிக்கும், கோபமூட்டும், வன்முறைகளைத் தூண்டும் (உ+ம். முகம்மது நபியின் கேலிச்சித்திரம்) என்பதைப் புரிந்து கொள்ளாமல் விமர்சனம் என்ற பெயரில் ஆளையாள் தாக்கி எழுதுவதனால் எதுவித பலனுமில்லை. உணர்ச்சிவசப் பட்டு, அவசரப்பட்டு எழுதினால், உங்கள் அம்மணத்தை கண்காட்சியாக எல்லோரும் பார்க்க அனுமதிக்கின்றீர்கள் என்று அர்த்தம்.
விமர்சனங்கள் ஆரோக்கியமாக இருக்கவேண்டும், முட்டையில் மயிர் பிடுங்வதாக இருக்கக் கூடாது, தற்பெருமையைப் பறைசாற்றுவதாக இருக்கக் கூடாது. கற்றுக் குட்டித்தனமான விமர்சனங்களையும், கருத்துக்களையும் எழுதிக்கொள்வதால் எவரையும் அறிவூட்டமுடியாது. மாறாகத் தவறான பாதையில்தான் இட்டுச் செல்லமுடியும் (தெளிவானவர்கள் தங்கள் பாதையிலேயே போய்க் கொள்வார்கள்)
யாழ் களத்தில் வருபவர்கள் பலர் அனாமேதயங்களே. எழுதுபவர்களின் கருத்துக்களை வைத்துக் கொண்டுதான் அவர் எந்தத் தளத்தில்/பின் புலத்தில் இருந்து கருத்தாடுகின்றார் என்பதை மற்றவர்வர்கள் புரிந்து கொள்ள முயலவேண்டும்.
தேசியத்திற்கு எதிராக எழுதப் போகின்றேன் அல்லது ஆதரவாக எழுதப் போகின்றேன் என்று ஒருவர் முன்கூட்டியே அறிவித்தால், அதை அப்படியே ஏற்றுக் கொள்வதும் முட்டாள்த்தனமானது/சிறுபிள்ளைத்தனமானது.

<b> . .</b>