02-18-2006, 12:58 AM
தமிழ் இளையோர் அமைப்பு என்ற தலைப்பில் குருவிகள் எழுதிய அனைத்துக் கருத்துக்களும் நிர்வாகம் பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளன. இது அவரது கருத்துச் சுதந்திரத்தில் தலையிடும் ஒரு செயல். தன்னுடைய கருத்துக்கள் எவையோ அவற்றை துணிந்து முனவைக்கும் முழு உரிமையும் அவருக்கு உண்டு. ஆகவே அவர் தமிழ் இளையோர் பற்றியும் தமிழ் இளையோர் அமைப்பின் செயற்பாடுகள் பற்றியும் எழுதிய அனைத்துக் கருத்துக்களையும் வாசகர்களின் பார்வைக்கு விட வேண்டும். வேண்டுமானால் தனியான பக்கத்தில் குருவிகளின் கருத்துக்கள் என்ற பெயரில் அக் கருத்துக்களை வெளியிடுதல் சாலச் சிறந்தது. என்னுடைய விருப்பம் என்னவெனில் அவர் எழுதிய அக் கருத்துக்களை மற்றவர்கள் பார்வையிடக்கூடிய அளவில் மட்டுமாயினும் அப் பொன்னான கருத்துக்களை அனுமதியுங்கள் என்பதே.. ஆகவே.. வாகசப் பெருமக்களே.. குருவியின் கருத்துச் சொல்லும் உரிமையை மறுக்கும் நடவடிக்கைகளை நிறுத்தி குருவி தன்னுடைய கருத்துக்களை வெளிப்படையாக சொல்ல அனுமதிக்கும் படி நிர்வாகத்தை கேட்பீர்கள் என நம்புகிறேன். உங்களின் ஆதரவு குருவியின் கருத்து உரிமையைப் பாதுகாக்கும்.

