Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஆர்த்தி 'சீரியஸ்!'
#1
<img src='http://thatstamil.oneindia.com/images31/optimized/aarthyyg-500.jpg' border='0' alt='user posted image'>
ஆர்த்தி 'சீரியஸ்!' மீண்டும் தற்கொலை முயற்சி?
பிப்ரவரி 17, 2006

பிரபல தெலுங்கு, தமிழ் நடிகை ஆர்த்தி அகர்வால் தலையில் பலத்த அடிபட்டு கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் மீண்டும் தற்கொலைக்கு முயற்சித்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

தெலுங்கில் பிரபல நடிகையாக விளங்குபவர் ஆர்த்தி அகர்வால். தமிழிலும் ராஜா, வின்னர், பம்பரக் கண்ணாலே உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சில காலத்திற்கு முன்பு நடிகர் தருணுடன் ஏற்பட்ட காதல் தோல்வியால் தூக்க மாத்திரை சாப்பிட்டுத் தற்கொலைக்கு முயன்றார் ஆர்த்தி அகர்வால். அதிலிருந்து காப்பாற்றப்பட்டார்.

இந் நிலையில், ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அவர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் தலையில் ரத்த காயத்துடன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து அவரது குடும்பத்தினர் கூறுகையில், ஆர்த்தியின் பெற்றோர் ஹைதராபாத்துக்கு நேற்று முன்தினம் இரவு வந்தனர். பின்னர் ஆர்த்தி, அவரது தங்கை அதிதி மற்றும் பெற்றோர் இரவு சாப்பாட்டுக்காக வெளியில் சென்றனர்.

இரவில் அவர்கள் ஆர்த்தி தங்கியிருந்த அடுக்கு மாடிக் குடியிருப்புக்குத் திரும்பினர். அப்போது லிப்ட் வேலை செய்யாததால், 6வது மாடிக்கு நடந்தே சென்றனர். அப்போது மாடிப்படியில் கால் தவறி விழுந்தார் ஆர்த்தி. இதில் அவரது பின்னந்தலையில் அடிபட்டது.

லேசான அடிதானே என்று நினைத்து வலி நிவாரண மாத்திரைககளைக் கொடுத்தனர். ஆனால் காலை 11 மணியாகியும் ஆர்த்தி எழுந்திருக்காததால், பயந்து போன அவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

அங்கு கவலைக்கிடமான நிலையில் ஆர்த்திக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் கோமாவில் இருப்பதாகவும் 24 மணி நேரம் கழித்துத்தான் எதையும் சொல்ல முடியும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

இவ்வாறு குடும்பத்தினர் கூறினாலும் சம்பந்தப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்பின் காவலாளிகள் முரண்பாடான தகவலைக் கூறுகின்றனர். அவர்கள் கூறுகையில்,

லிப்ட் எல்லாம் நன்றாகத்தான் வேலை செய்தது. இரவு சாப்பாட்டுக்கு ஆர்த்தி அகர்வால் போகவே இல்லை. அவர் வீட்டிலேயேதான் தங்கியிருந்தார் என்று அந்தக் காவலாளிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால், ஆர்த்தி அகர்வாலுக்கு எப்படி காயம் ஏற்பட்டது என்பது குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. அவர் மீண்டும் தற்கொலைக்கு முயன்றிருக்கலாம் அல்லது வேறு ஏதேனும் நடந்திருக்குமா என்பது குறித்து சர்ச்சை எழுந்துள்ளது.

இதற்கிடையே ஆர்த்தி அகர்வாலை தெலுங்குத் திரையுலகினர் யாரும் இதுவரை போய்ப் பார்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

thatstamil.oneindia.com
Reply


Messages In This Thread
ஆர்த்தி 'சீரியஸ்!' - by Shankarlaal - 02-17-2006, 11:20 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)