02-17-2006, 03:45 AM
ஈழத்தமிழர்கள் பலர் இலங்கை அணி வெல்லவேண்டும் என நினைக்கிறார்கள். சிலர் இந்தியா வெல்லவேண்டும் எனவும், பிரித்தானியாவில் வாழும் ஈழத்தமிழர்களில் சிலர் இங்கிலாந்து அணிக்கும், ஒஸ்ரேலியாவில் வாழும் சிலர் ஒஸ்ரேலியாவுக்கும் ஆதரவு அளிக்கிறார்கள். ஆனால் சிங்கக்கொடி பிடித்துக்கொண்டு, இலங்கை அணி பொறிக்கப்பட்ட ஆடைகள் அணிந்து பலர் சிட்னியில் கிறிக்கேட் பார்க்கப்போயிருந்தார்கள். இவர்களில் பலர் ஈழத்தமிழர்கள். அதில் என்னவேடிக்கை என்றால் தமிழ்தேசியத்துக்கு ஆதரவாக மேடைகளில் கலந்து கொள்பவர்களில் சிலரும் சிங்கக்கொடி பொறுத்திய உடை அணிந்திருந்தார்கள். விளையாட்டில் அரசியல் பார்க்கக்கூடாது என்று பலர் சொல்வதுண்டு. விளையாட்டினைப்பார்க்க விரும்பினால் சாதாரண உடையில் சென்றிருக்கலாமே?
அண்மையில் ஒஸ்ரேலியா தினத்தில்(ஜனவரி 26) சிட்னிவாழ் தமிழர்கள் நடத்திய தமிழர் திருனாலுக்கு சிறுவர்கள் சிலர் இலங்கை அணி பொறிக்கப்பட்ட ஆடைகள் அணிந்து போட்டியில் கலந்து கொண்டார்கள். அந்த மைதானத்தில் அன்னியசதியினால் இறந்த கிட்டுவினது படம் வைத்து அஞ்சலி செய்யப்பட்டுள்ளது. இச்சிறுவர்களின் பெற்றோர்களில் சிலர் ஈழவிடுதலைக்கு ஆதரவான முக்கிய தமிழ் அமைப்புக்களினைச் சேர்ந்தவர்கள்.அவர்கள் இது பற்றி சிந்திப்பதில்லையா?