02-16-2006, 08:13 AM
Aaruran Wrote:[color=green]/
<b>உலகத்தமிழர்களால் மதிக்கப்படுபவரை, அவருடைய அரசியலுக்காக அல்லாது விட்டாலும், அவருடைய தமிழ்த் தொண்டிற்காக, தமிழறிவுக்காகவாவது நாம் ஈழத்தமிழர்கள் இழிவு படுத்தக் கூடாதென்பது தான் என்னுடைய தாழ்மையான கருத்து</b>.
நாம் ஈழத்தமிழர்கள் வைகோவின் மீதுள்ள அளவுகடந்த அபிமானத்தால் மற்ற தமிழ்த் தலைவர்களை அவமானப்படுத்துவது எப்படி நியாயமாகும். தமிழ்நாட்டு அரசியலில் நாங்கள் தலையிடாமல், நடுநிலை வகிக்க வேண்டும். எங்களுக்குத் தேவை முழுத் தமிழர்களினது ஆதரவு. திமுக, அதிமுக, பாமக, மதிமுக எல்லாக் கட்சிகளும், தொண்டர்களும் எங்களுடைய சகோதரர்கள், நாங்கள் நடுநிலை வகித்தால அவர்களும் ஈழத்தமிழருக்கான விடயங்களில் ஒன்றாக இணைவார்கள்.
[color].
எனது கருத்தும் இதுதான். எமது தலைவனைப்பற்றி யாரும் கதைத்தால் எமக்கு எவ்வளவு கோபம் வருகிறது அதேபோல் நாம் மற்றவர்களையும் நினைத்துபார்ப்பது நல்லதென்பது எனது கருத்து.

