02-16-2006, 07:00 AM
[size=14]அரசியலில் எதுவும் நடக்கலாம், ஆனால் சில ஈழத்தமிழர்கள் ஓரு சில இந்தியத் தமிழர்களின் ஈழத்தமிழ் எதிர்ப்பைக் கண்டு, அவர்களைச் சீண்டிப் பார்க்க வேண்டுமென்ற ஒரே காரணத்துக்காக கருணாநிதியை எதிர்த்து, ஜெயலலிதாவுக்குச் சாதகமாக எழுதுகிறார்கள் போல் தெரிகிறது, ஆனால் ஜெயலலிதா ஈழத்தமிழர்களை இது நாள்வரை எதிரிகளாகக் கருதியது மட்டுமல்லாமல், சந்திரிகாவுக்கும், கதிர்காமருக்கும் உற்ற நண்பராக இருந்து, ஈழத்தமிழரின் முதுகில் குத்தியவர் என்பதை மறந்து விட்டார்கள் போல் தெரிகிறது.
ஜெயலலிதா, ஜனாதிபதி ராஜபக்சவைச் ச்ந்திக்க மறுத்தது, தேர்தல் நெருங்கி விட்டதென்பதால் தான். அதற்கு முன்பு ஜெயலலிதா, சந்திரிகாவையும், கதிர்காமரையும் அடிக்கடி சந்தித்து விருந்து கொடுத்தது மட்டுமல்லாமல், தமிழீழம் அமைய விடக்கூடாது என்று பகிரங்கமாகச் சொல்லி, ஈழவிடுதலைக்குப் பெரும் இடைஞ்சலாகவும் இருந்துள்ளார். அதை விடப் பார்ப்பன தமிழ் வெறுப்பாளர்களான சோ ராமசாமி போன்றோரிடம் சேர்ந்து கொண்டு, இந்தியா ராணுவத்தை வன்னிக்கு அனுப்பி பிரபாகரனைக் கைது செய்ய வேண்டுமென்று கூடப் பேசியுள்ளார், ஆனால் கருணாநிதி சில தவிர்க்க முடியாத காரணங்களால் வெளிப்படையாக ஈழவிடுதலைப் போராளிகளுக்கு, வைகோ மாதிரி ஆதரவைத் தெரிவிக்காத போதிலும், திமுக கூட்டணிகளின் மாபெரும் கூட்டத்தில் செக்கோஸ்லவாக்கியா பிரிந்த்து போன்று அமைதியான முறையில் இலங்கை இரண்டு நாடுகளாகப் பிரிக்கப் பட வேண்டும், அதற்கு உலக நாடுகள் உதவி செய்து ஈழத்தமிழர்கள் இரத்தம் சிந்துவது தவிர்க்கப் படவேண்டும் என்று பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்துப் பல இந்தியத் தலைவர்களினதும், இலங்கை அரசினதும் பகையைச் சம்பாதித்தவர் கலஞர் கருணாநிதி. கருணாநிதியின் பேச்சுக்கு இலங்கை அரசு, டில்லியிலுள்ள இலங்கைத் தூதுவர் மூலம், தன்னுடைய எதிர்ப்பை இந்திய அரசுக்குத் தெரிவித்துக் கொண்டது. அதைவிட கடைசி வரை ஈழத்தமிழரைக் காட்டிக் கொடுத்த கதிர்காமரையும், ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்காவையும் சந்திக்க மறுத்தவர் கலைஞர் கருணாநிதி.
அப்படியான ஒருவரை <b>உலகத்தமிழர்களால் மதிக்கப்படுபவரை, அவருடைய அரசியலுக்காக அல்லாது விட்டாலும், அவருடைய தமிழ்த் தொண்டிற்காக, தமிழறிவுக்காகவாவது நாம் ஈழத்தமிழர்கள் இழிவு படுத்தக் கூடாதென்பது தான் என்னுடைய தாழ்மையான கருத்து</b>.
நாம் ஈழத்தமிழர்கள் வைகோவின் மீதுள்ள அளவுகடந்த அபிமானத்தால் மற்ற தமிழ்த் தலைவர்களை அவமானப்படுத்துவது எப்படி நியாயமாகும். தமிழ்நாட்டு அரசியலில் நாங்கள் தலையிடாமல், நடுநிலை வகிக்க வேண்டும். எங்களுக்குத் தேவை முழுத் தமிழர்களினது ஆதரவு. திமுக, அதிமுக, பாமக, மதிமுக எல்லாக் கட்சிகளும், தொண்டர்களும் எங்களுடைய சகோதரர்கள், நாங்கள் நடுநிலை வகித்தால அவர்களும் ஈழத்தமிழருக்கான விடயங்களில் ஒன்றாக இணைவார்கள்.
என்னைப் பொறுத்தவரையில் வைகோ, ஜெயலலிதாவுடன் இணைவது அரசியல் தற்கொலைக்குச் சமமானது. இப்பொழுது சில கூடிய தொகுதிகளுக்காக அதிமுகவுடன் இணைவதிலும் பார்க்க, வைகோ திமுக கூட்டணியில் தொடர்ந்து பொறுமை காத்தால, எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு எப்படி ஜெயலலிதா தலைமையைக் கைப்பற்றினாரோ அவ்வாறு வைகோ திமுக தலைமையைக் கைப்பற்றலாம். திமுகவின் அடிமட்டத் தொண்டர்கள், ஸ்டாலினை விட வைகோவைத் தலைவராக ஏற்பார்கள். ஆனால் வைகோ இப்பொழுது ஜெயாவுடன் இணைந்தால், கருணாநிதியின் மறைவுக்குப் பின்பு திமுகவுக்குத் திரும்புவது கடினம். வைகோ பிரிந்தால், அவர் கடைசியாக சாகுமுன்பு கருணாநிதி முதல்வராகும் சந்தர்ப்பத்தையும், எதிரியான ஜெயலலிதாவைத் தோற்கடிப்பதையும் கருணாநிதிக்கு மறுத்தவராக திமுகவின் உண்மையான தொண்டர்களால் கருதப்படுவார். தொண்டர்கள் அவரைத் துரோகியாகப் பார்ப்பார்கள். எவருமே துரோகிகளை விரும்புவதில்லை