02-16-2006, 12:09 AM
சர்வதேசமே- தமிழீழத்தை உடனடியாக அங்கீகரி! விடுதலைச் சிறுத்தைகளின் பேரெழுச்சியான சென்னை மாநாட்டில் தீர்மானம்!!
[புதன்கிழமை, 15 பெப்ரவரி 2006, 01:58 ஈழம்] [ம.சேரமான்]
தமிழீழத்தை இந்தியப் பேரரசும், சர்வதேச ஜனநாயக சக்திகளும் உடனடியாக அங்கீகரிக்க வேண்டும் என்று சென்னையில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகளின் சென்னை மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
விடுதலைச் சிறுத்தைகள் இயக்கப் பொதுச்செயலாளர் தொல். திருமாவளவன் தலைமையிலும் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் முன்னிலையிலும் நடைபெற்ற இந்த ஈழத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர்.
சென்னை அமைந்தகரை புல்லாரெட்டி நிழற்சாலையில் நள்ளிரவு வரை நடைபெற்ற இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்:
- கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நிறுத்த ஒப்பந்தங்களையும் மீறி அப்பாவித் தமிழ் மக்கள் மீது இராணுவ அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்துவிட்டு வெறியாட்டம் போடும் சிங்களப் பேரினவாத அரசின் இனவெறிக்கு அண்மையில் பலியான கல்லுரி மாணவி தர்சினி, திருகோணமலை பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராசசிங்கம் உள்ளிட்ட ஈழத் தமிழ்ச் சொந்தங்கள் அனைவருக்கும் இம்மாநாட்டின் மூலமாக விடுதலைச் சிறுத்தைகள் வீரவணக்கம் செலுத்துகிறது.
- கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக, தொடரும் சிங்களப் பேரினவாத அரசின் இனவெறி அடக்குமுறைகளால் கணக்கிலடங்கா உயிர்ச் சேதங்களுக்கும், உடைமைச் சேதங்களுக்கும் ஆளாக்கப்பட்டு, இலட்சக்கணக்கான தமிழர்கள் உலக நாடுகளெங்கும் அகதிகளாய் புலம்பெயர்ந்து வாழும் கேடான நிலையில் மென்மேலும், ஈழத்தில் தலைவிரித்தாடும் சிங்கள இராணுவ வெறியாட்டத்தால் அண்மைக் காலமாக நூற்றுக்கணக்கான தமிழர்கள் தமிழகத்தை நோக்கி அகதிகளாக வெளியேறும் கொடுமைகளும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், ஈழத் தமிழ் மக்களின் மறுவாழ்வுக்கு 'தமிழ் ஈழமே தீர்வு' என்னும் அடிப்படையில் இந்தியப் பேரரசும் சர்வதேச சனநாயக சக்திகளும் தமிழ் ஈழத்தை உடனடியாக அங்கீகரிக்க வேண்டுமென இம்மாநாடு தமிழ்ப் பெருங்குடி மக்களின் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறது.
- கடந்த 1983 ஆம் ஆண்டிலிருந்து சிங்கள இனவெறிக் கொடுமைகளால் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்கள் பல்லாயிரக்கணக்கில் அகதிகளாக தமிழ்நாடு மற்றும் இந்திய மாநிலங்களில் பரவலாகக் குடியேறியுள்ளனர். அவர்களை ஆங்காங்கே 'அகதிகள் முகாம்' என்னும் திறந்தவெளிச் சிறைச்சாலைகளில் அடைத்து வைத்து அடிப்படை உரிமைகள் மற்றும் பிற மனித உரிமைகளுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலையில் நடத்தப்படும் போக்கு நிலவுகிறது. உலக நாடுகளெங்கும் இவ்வாறான அகதிகளைப் பாதுகாப்பதற்கு, அய்க்கிய நாடுகள் பேரவையின் அங்கமான 'அகதிகள் மறுவாழ்வு அமைப்பின்' விதிகள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. ஆனால், இந்தியப் பேரரசு ஐ.நா. பேரவையின் விதிகளுக்குக் கட்டுப்படாமல் தொடர்ந்து புறக்கணித்துவருவது மிகவும் வேதனைக்குரியது. எனவே இந்திய மாநிலங்களில் குடியேறியுள்ள ஈழத் தமிழர்கள் உள்ளிட்ட அனைத்து அகதிகளின் வாழ்வுரிமைகளைப் பாதுகாத்திட ஐ.நா. பேரவையின் அகதிகள் மறுவாழ்வு விதிகளை நடைமுறைப்படுத்த வேண்டுமென இந்திய அரசை இம்மாநாடு வற்புறுத்துகிறது.
- ஈழத் தமிழ் மக்களுக்கும் தமிழீழ விடுதலைக்கும் எதிரான வகையில், தொடர்ந்து சிங்கள இனவெறி ஆட்சியாளர்களுக்கும் நேரடியாகவும் மறைமுகமாகவும் அனைத்து வகையிலும் உறுதுணையாக நிற்கும் அமெரிக்க வல்லரசின் மக்கள் விரோதக் காலித்தனத்தை இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது. அத்துடன் தமிழீழச் சிக்கல்களில் தொடர்ச்சியாக வீம்புக்கு மூக்கை நுழைத்து, தமிழ்த் தேசிய இனத்திற்கு எதிராகச் செயல்படும் வல்லாதிக்கப் போக்கைக் கைவிட வேண்டும் எனவும் அமெரிக்க வல்லரசை இம்மாநாடு எச்சரிக்கிறது.
- கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக மீனவர்கள் மீது சிங்களக் கடற்படையினர் எல்லைதாண்டி வந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதுவரை 400-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களைக் கைது செய்து கடத்தியுள்ளனர். தமிழக மீனவர்களின் படகுகளும், மீன்பிடி வலைகளும் சேதமாக்கப்பட்டுள்ளன. அவர்கள் பிடித்த மீன்களும் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளன. தமிழக மீனவர்களைக் காப்பாற்ற வேண்டிய இந்திய கடற்படை வேடிக்கை பார்க்கிறது. இந்தியக் கடல் எல்லைக்குள்ளாகவே வந்து நமது மீனவர்களைத் தாக்கி வரும் சிங்களக் கடற்படையினர் மீது இதுவரை எந்தவித நடவடிக்கையையும் இந்தியக் கடற்படை எடுக்கவில்லை என்பதை இம்மாநாடு சுட்டிக்காட்டி கண்டனம் தெரிவிக்கிறது. தமிழக மீனவர்களைக் கொண்ட 'கடல் பாதுகாப்புப் படை' உருவாக்கி அவர்களுக்குப் பயிற்சியும், ஆயுதமும் வழங்குவதன் மூலமே சிங்களக் கடற்படைத் தாக்குதல்களிலிருந்து தமிழக மீனவர்களைப் பாதுகாக்க முடியும் என இம்மாநாடு கருதுவதோடு அதற்கான முயற்சிகளைத் தொடங்குமாறு மாநில- மத்திய அரசுகளை வற்புறுத்துகிறது.
- நோர்வே அரசின் சமரச முயற்சியோடு விடுதலைப் புலிகளும் சிங்கள அரசும் பேச்சு நடத்துவதற்கு முழுமையான ஆதரவை இந்திய அரசு தெரிவித்துள்ள அதேவேளையில் சிங்களக் கடற்படை வீரர்களுக்குப் பயிற்சி அளிப்பது, இந்தியப் படைத் தளபதிகள் அடிக்கடி இலங்கை சென்று சிங்களப் படை அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்குவது, யாழ்ப்பாணத்தில் உள்ள பலாலி இராணுவ விமான தளத்தைப் புதுப்பித்துத் தருவது போன்ற நடவடிக்கைகள் சிங்கள அரசுக்குச் சார்பாக இந்திய அரசு செயல்படுவதை வெளிப்படுத்தியுள்ளன. நடுநிலை பிறழ்ந்து இந்திய அரசு செயல்படுவதற்கு இம்மாநாடு கடுங்கண்டனம் தெரிவிக்கிறது. உடனடியாக இத்தகைய நடவடிக்கைகளை நிறுத்த வேண்டுமென இம்மாநாடு வலியுறுத்துகிறது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இம்மாநாட்டின் தொடக்கத்தில் சிறிலங்கா கடற்படையினரால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட யாழ். புங்குடுதீவு தர்சினி, தேவாலயத்தில் படுகொலை செய்யப்பட்ட மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம், திருகோணமலையில் சிறிலங்கா இராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழ் மாணவர்கள் உள்ளிட்டோருக்கு அக வணக்கம் செலுத்தும் வகையில் ஒரு நிமிட நேரம் மெளனம் கடைபிடிக்கப்பட்டது.
அதன் பின்னர் வீரவணக்க முழக்கங்களை உணர்ச்சிமிக்க உரத்த குரலில் தொல். திருமாவளவன் எழுப்ப கூட்டத்தில் திரண்டியிருந்த பல்லாயிரக்கணக்கானோரும் வீரவணக்க முழக்கங்களை எழுப்பினர்.
திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, தமிழ் தமிழர் இயக்கப் பொதுச்செயலாளர் தியாகு, பாவலர் அறிவுமதி, இயக்குநர்கள் வா.செ.குகநாதன் தங்கர்பச்சான், ஓவியர்கள் வீரசந்தானம், புகழேந்தி உள்ளிட்ட பலர் சிறப்புரையாற்றினர்.
முன்னதாக பாசறைப் பாணர் தேனிசை செல்லப்பாவின் இன முழக்க எழுச்சி இசை நிகழ்வு நடைபெற்றது.
ஈழத் தமிழர் உரிமைகளைப் பாதுகாக்கும் முழக்கங்கள், அமெரிக்காவின் வல்லாதிக்க தலையீடு மற்றும் இந்திய அரசின் கபடத் தனங்களைத் தெரிவிக்கிற பதாகைகளை மாநாட்டில் பங்கேற்றோர் உயர்த்திப்பிடித்திருந்தனர்.
http://www.eelampage.com/?cn=24212
-புதினம்