Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஐஸ்வர்யா அபிஷேக் பச்சன் திருமண ஏற்பாடுகள் தீவிரம்
#1
ஐஸ்வர்யா அபிஷேக் பச்சன் திருமண ஏற்பாடுகள் தீவிரம்

மும்பை: ஐஸ்வர்யா ராய் அபிஷேக் பச்சன் காதல் விவகாரம் பாலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விரைவில் அவர்களின் திருமணம் நடைபெற உள்ளது. அபிஷேக் பச்சன் வீட்டில் இதற்கான ஏற்பாடுகள் தொடங்கி விட்டதாக தெரிகிறது.

முன்னாள் உலக அழகியான ஐஸ்வர்யா ராய் முதலில் பாலிவுட் நடிகர் சல்மான் கானை காதலித்தார். அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சல்மானை விட்டு பிரிந்தார். பிறகு விவேக் ஓபராயைக் காதலித்தார். தங்கள் காதலைப் பற்றி பகிரங்கமாக செய்தி வெளியிட வேண்டும் என்று விவேக் கேட்டதால் அவரை விட்டும் ஐஸ்வர்யா பிரிந்தார். அதன் பிறகு, பாலிவுட் சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சனின் மகனும் பாலிவுட் நடிகருமான அபிஷேக் பச்சனை தற்போது ஐஸ்வர்யா ராய் காதலிக்கிறார் என்று மும்பை வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டது. இந்த காதல் வதந்தியல்ல உண்மை தான் என்று நிரூபிக்கும் விதமாக நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன.

அபிஷேக் மற்றும் ஐஸ்வர்யாவின் ஜாதகங்களை சந்திரசேகர் ஸ்வாமி என்பவரிடம் அமிதாப் பச்சனின் தம்பி அஜிதாப் பச்சன் கொண்டு சென்று பொருத்தம் பார்த்ததாக கூறப்பட்டது. பொருத்தம் பார்த்தது உண்மை தான். ஆனால், அமிதாப் பச்சன் தனது நம்பிக்கைக்கு உரிய தன்னுடைய உதவியாளர் ஒருவரை அனுப்பி பொருத்தம் பார்த்தாராம். அஜிதாப் பச்சன் பூஜை விஷயமாகத்ததான் சந்திரசேகர் ஸ்வாமியை சந்தித்தார் என்று கூறப்படுகிறது. அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யாராயின் ஜாதகங்கள் கனகச்சிதமாக பொருந்தியுள்ளதாக கூறிய சந்திரசேகர் ஸ்வாமி எவ்வளவு சீக்கிரத்தில் திருமணத்தை நடத்த முடியுமோ அவ்வளவு சீக்கிரம் நடத்துவது நல்லது என்றும் கூறியுள்ளார்.

பாலிவுட் நடிகை ராணி முகர்ஜியை அபிஷேக் பச்சனுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் விரும்பி வந்தனர். ஆனால், ஐஸ்வர்யாவை தான் திருமணம் செய்ய வேண்டும் என்று அபிஷேக் பச்சனின் அம்மா ஜெயா பச்சன் பிடிவாதமாக இருந்துள்ளார்.

கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு தான் அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய்க்கு இடையே காதல் மலர்ந்துள்ளது. தற்போது இவர்கள் நடித்துக் கொண்டிருக்கும்"உம்ராவோ ஜான்' என்ற படத்தின் மூலமாகத்தான் இவர்கள் சந்திப்பு நிகழ்ந்தது. கடந்த ஐந்தாம் தேதி நடந்த அபிஷேக்கின் பிறந்த நாள் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஐஸ்வர்யா ராய் விடியற்காலை வரை அபிஷேக் குடும்பத்தில் ஒருவர் போல் அவர்கள் வீட்டிலேயே தங்கியிருந்தாராம். இந்த காதல் பற்றி ஐஸ்வர்யா தரப்பில் இன்னும் மூச்சு விடவில்லை என்றாலும் விரைவில் இது பற்றி அவர் வெளிப்படையாக பேசுவதற்கான வாய்ப்பு உள்ளது.

தினமலர்
Reply


Messages In This Thread
ஐஸ்வர்யா அபிஷேக் பச்சன் திருமண ஏற்பாடுகள் தீவிரம் - by Shankarlaal - 02-15-2006, 12:42 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)