01-31-2004, 04:32 PM
<span style='font-size:30pt;line-height:100%'>குறுக்கே வந்தால் மிதிப்பேன்...
-எதிரிகளை எச்சரிக்கிறார் அஜீத்! </span>
அஜீத் என்றால் ஸ்பீடாமீட்டர் என்றும் ஒரு அர்த்தம் இருக்கலாம் போலிருக்கிறது. அவர் பேச பேச முள்ளின் வேகம் ஏறிக் கொண்டேயிருக்கிறது. உணர்ச்சி பிரவாகமாய் இருக்கிறார் ஒரு நிமிடம். மழலையாய் மாறுகிறார் மறு நிமிடம். கோபத்தில் கொந்தளிக்கிறார் சடக்கென்று. ஆனால் அவர் மனசு முழுக்க அப்பிக்கிடக்கிற விஷயம், தான் ஒரு ஆப்டிமிஸ்ட் என்ற எண்ணம் மட்டுமே. நீ எதுவாக மாற வேண்டும் என்று நினைக்கிறாயோ, அதுவாகவே ஆகிறாய். இதை அடிக்கடி சொல்லிக் கொண்டே பேட்டியை தொடர்கிறார். அவர் பதில் 100 கி.மீ வேகம் என்றால் நம்முடைய கேள்விகள் ஸ்பீட் பிரேக்கர் என்பதை சொல்ல வேண்டுமா என்ன?
திடீரென்று கார் ரேஸ் பக்கம் போய்விட்டீர்கள். மெல்ல ஹாலிவுட் போவதற்கான முன்னோட்டமா இது?
ஹாலிவுட் படங்களில் நடிக்க போகணும்னா, இப்படி ஒரு வழியை கண்டு பிடிச்சுதான் போகணும்னு அவசியம் இல்லை. இரண்டு வருஷம் அங்கே போய் தங்கியிருந்தா போதும். எப்படியாவது முயற்சி பண்ணி வாய்ப்பு வாங்கிடலாம். ஏன் மனோஜ் கே சியாமளனிடம் வாய்ப்பு கேட்டா, பரிசீலனை பண்ண மாட்டாரா என்ன? சின்ன வயசிலே இருந்து என் மனசிலே இந்த எண்ணம் ஓடிட்டு இருந்திச்சு. இதுக்கு நிறைய செலவாகும். இன்னிக்கு நான் அந் செலவை செஞ்சு போட்டியில் கலந்துக்கிற அளவிற்கு பொருளாதாரத்திலே நிறைவா இருக்கேன். இந்த வருட பட்ஜெட், நான் கலந்துக்க போற கார் ரேசுக்கு மட்டும் இரண்டரை கோடி ரூபாய் செலவு செய்ய போறேன். எங்க டீம் எல்லாருக்கும் சேர்த்து எனக்கு இவ்வளவு செலவு ஆகும். மார்ச் மாதத்திலிருந்து அக்டோபர் மாசம் வரைக்கும் ரேஸ் நடக்கும் காலங்கள். இந்த ஆறு மாதத்தில் மொத்தம் 28 ரேஸ். வெவ்வேறு இடங்களில் நடக்கும் இந்த ரேசுக்கு எங்க டீம் மொத்தமும் கிளம்பணும். அப்போ எவ்வளவு செலவு ஆகும்னு பார்த்துக்கங்க.
இந்த பணத்தை சினிமாவில் இருந்து சம்பாதிச்சுதானே செலவு பண்றீங்க. அந்த சினிமாவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கலாமே?
இந்த புகழ், பணம், இப்படி ஒரு லைஃப் ஸ்டைல் எல்லாமே இந்த சினிமா தந்ததுதான். ஆனா இந்த சினிமாவையும் மீறி நான் ஏதாவது அச்சீவ் பண்ணணும்னு நினைக்கிறேன். சினிமாவுக்கு வருவதற்கு முன் நான் ரேஸ் வீரனா இருந்தேன். இங்கே வந்துதான் டான்ஸ்னா என்ன? நடிப்புன்னா என்ன? ஃபைட்னா என்ன? எல்லாத்தையும் கத்துகிட்டேன். இப்போ கார் ரேசில் கலந்துக்க போகும்போது எனக்கு அது புதுசுதான். ஆனா எப்படி சினிமாவில் அச்சீவ் பண்ணினேனோ, அதுபோல் கார் ரேசிலும் முதலிடத்தில் வருவேன். இந்தியாவுக்கு பேர் சேர்ப்பேன். இப்போ நடந்த கார் ரேசில் நான் ஆறாவது இடத்திலே வந்தேன். ஒரு இந்தியனா இருந்து முதல் ஆறு பேர்ல ஒருத்தரா வந்தது எனக்கு ரொம்ப பெருமையா இருந்திச்சு. அதே நேரத்தில் சினிமாவை நான் முழுக்க கை விட்டுவிடலையே. வருடத்திற்கு இரண்டு படத்தில் நடிப்பேன். ரேசில் கலந்து கொள்ளும் நேரத்தில் சினிமாவில் நடிக்க மாட்டேன். சினிமாவில் நடிக்கும்போது ரேசிற்கு போக மாட்டேன். இதுதான் என்னோட திட்டம். அதில் எந்த குழப்பமும் இல்லை.
கார் ரேசில் உங்களுக்கு ஏதாவது விபத்து ஏற்பட்டுவிட்டால் தயாரிப்பாளர் பாதிக்கப்படுவாரே..?
அதற்காகதான் படத்தை முடிச்சுட்டுதான் ரேசுக்கே போவேன். எப்பவுமே மார்ச் மாதங்களில்தான் ரேஸ் ஆரம்பிக்கும். அதிலிருந்து ஆறு மாதங்கள் ரேஸ் டைம். அந்த மாதங்கள் போக, மீதியுள்ள மாதங்களில் இரண்டு படங்கள் நடிக்கலாமே. தயவு செய்து என்னை என்கரேஜ் பண்ணுங்க. அஜீத்தாலே யாரும் வாழ்ந்தான்னு இல்லைன்னாலும் கெட்டான்னு இருக்க கூடாது. அதிலே உறுதியா இருப்பேன்.. கடந்த இரண்டு வருஷமா புதுபடங்கள் எதிலும் நடிக்க கையெழுத்து போடலை. முன்பு ஒப்புக் கொண்ட படங்களைதான் இப்போ நடிச்சிட்டு இருக்கேன். படங்களில் நடிக்க வில்லையே என்று சிலர் வருத்தப்படுறாங்க. அது எனக்கு தேவையில்லே. என் வருமானம் குறையறதுக்காக நான்தானே வருத்தப்படணும். மற்றவங்க ஏன் வருத்தப்படணும்?
நீங்கள் வெளிப்படையாக பேசுறீங்க. அதனால உங்களுக்கு ஏதும் பாதிப்பு வராதா?
(நம்மிடமே கேட்கிறார்) அப்படி பேசுறது உங்களுக்கு பிடிச்சிருக்கா? (நாம் பிடிச்சிருக்கு என்கிறோம்) அப்ப விட்ருங்க. அப்படி பேசுறதால வர்ற பாதிப்புகளை ஃபேஸ் பண்ண நான் தயார். நான் ரேசுக்கு போறதை சில பேர் வேடிக்கையா விமர்சிக்கிறாங்க. அலெக்ஸாண்டர் கிரகம்பெல் போனை கண்டு பிடிச்சப்போ யாராவது நம்பினாங்களா? இன்னிக்கு 100 ரூபா கொடுத்தா செல் போன் தரான். ரைட் சகோதரர்கள் விமானம்னு ஒரு விஷயத்தை கண்டு பிடிச்சப்போ யாராவது நம்பினாங்களா? இப்போ ரொம்ப ஈசியா பறந்திட்டு இருக்கோம். நான் ஜெயிப்பேன். ஒரு கிரிக்கெட் எப்படி உலகம் பூரா புகழுடன் இருக்கோ, அது மாதிரி கார் ரேசையும் உலகம் முழுவதும் புகழ் பெற வைப்பேன்.
சினிமாவில் உங்களோட இடம் என்ன?
அதுக்கு காலம் பதில் சொல்லும். நான் குதிரைக்கு கடிவாளம் கட்டியதுபோல் ஒரே நேர் கோட்டில் போயிட்டு இருக்கேன். யார் வேணுமின்னாலும் இந்த போட்டியிலே கலந்துக்கலாம். என்னை முந்த டிரை பண்ணு. எனக்கு பக்கவாட்டில் வா. அதுக்காக குறுக்கே வந்தே... யாராயிருந்தாலும் மிதிச்சுடுவேன். (கோபத்தில் கண்கள் சிவக்கிறது அஜீத்திற்கு. அவரைப்பற்றி அவதூறாக பேசுபவர்களுக்கு அவர் காட்டும் ரெட் சிக்னல் இதுதானோ என்ற ஐயம் வருகிறது நமக்கு)
பின் குறிப்பு- அஜீத் தனக்காக ஒரு இணைய தளத்தை துவங்கியிருக்கிறார். அஜீத் குறித்த சகலவிதமான விஷயங்களும் நிறைந்து கிடக்கும் அந்த தளத்தின் முகவரி- [b]www.flyingtaurus.com இந்த பெயரை தேர்வு செய்தது திருமதி அஜீத்!
சுட்டது: TamilCinema.Com