02-14-2006, 02:35 PM
வைகோவை எங்கே ஜெயலலிதா தன்பக்கம் இழுத்துவிடுவார் என்கிற அச்சத்தினால், பழைய சம்பவங்களை கருணாநிதி தனதுரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
கருணாநிதி, வைகோவுக்கு எப்படியும் அதிகளவு ஆசனங்களை கொடுக்கப் போவதில்லை. அதேவேளை வைகோவை ஜெயலலிதா பக்கம் செல்ல விடாமல் தனது வார்த்தை ஜாலங்கள், நினைவாற்றல் சக்தி(!?) ஆகியவற்றினூடாக தடுக்க முனைகிறார்.
கருணாநிதி அரசியலில் சாதித்தது எனில், அவருடைய குடும்பத்தையும், சொத்தையும் சேகரித்ததுதான். கட்சிக்காக உழைத்தவர்களை கருணாநிதி தூக்கி வைத்ததில்லை. மாறாக தூக்கியெறிந்திருக்கிறார். இதில் வைகோ உட்பட பலர் அடங்குகிறார்கள்.
இதற்கு ஒரு உதாரணம். தமிழ்நாட்டில் அண்மையில் ஜெயலலிதா கேபிள் டிவி உரிமையை அரசு உடமையாக்க போவதாக அறிவித்தார்.
வெள்ள நிவாரணத்துக்கு நிதி கொடுக்க செல்லாத கருணாநிதி, தனது குடும்ப தொலைக்காட்சியான சண் டிவிக்கு ஆபத்துவந்துவிட்டதனை அறிந்து ஆளுநரிடம் மனு கொடுக்க சென்றிருக்கிறார்.
இதிலிருந்தே நீங்கள் எல்லோரும் கருணாநிதியை புரிந்துகொள்ளுங்கள்.
முன்னர் இதே கருத்துக்களம் பகுதியில் கூறியதனை இங்கே மீண்டும் வலியுறுத்துகிறேன். நான் ஜெயலலிதாவுக்கு வக்காளத்து வாங்க இங்கே வரவில்லை.
புலிகளை எதிர்க்கிறேன் அல்லது ஆதரிக்கிறேன் என்று ஜெயலலிதா தனது நிலைப்பாட்டை தெளிவாக கூறியும், கூறிவருகிறார். ஆனால் இந்த கருணாநிதி தன்னையும் குழப்பி மக்களையும் குழப்பி அறிக்கை விடுகிறார்.
இவருடைய அறிக்கை வேண்டுமெனில், தமிழ்நாட்டுத் தமிழர்களை ஏமாற்றலாம். ஆனால் ஈழத் தமிழர்களை ஏமாற்ற முடியாது. இதனை அவர் புரிந்து கொள்ள வேண்டும்.
வைகோ, ஜெயலலிதா கட்சியிலிருந்தாலும் சரி, இந்திரா காங்கிரசிலிருந்தாலும் சரி தனது நிலைப்பாட்டை விட்டுக் கொடுக்காதவர். ஆகவே அவர் தமிழ்நாட்டில் தனது இருப்பை உறுதிப்படுத்த ஜெயலலிதாவின் அழைப்பையேற்று அவருடன் இணைந்து தேர்தலில் நின்றால் அவரது கெளரவம் காப்பாற்றப்படும். இல்லையேல் கருணாநிதி மீண்டுமொரு தடவை வைகோவை புதைகுழிக்கே அனுப்புவார். அல்லது அழித்துவிடுவார்.
இதில் இன்னொரு விடயம் குறிப்பிட்டாக வேண்டும்.
நீண்டகாலத்துக்குப்பின்னர் ஈழப்பிரச்சனை தமிழக தேர்தல் களங்களில் சூடுபிடித்திருப்பதுதான். ஆக, விடுதலைப் புலிகள் விவகாரம் தமிழ்நாட்டிலும் அரசியலாகிவிட்டது.

S.Nirmalan