Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஜே ஆரின் பழைய தந்திரம் புது வடிவம்...ரணில் + சந்திரிக்கா
#1
இலங்கையில் போர் நிறுத்தப்பட்டு இனப்பிரச்சனைக்கான நிரந்தரத் தீர்வுக்காக உழைப்பதாக வெளியில் கூறிக்கொள்ளும் சிங்கள அரசுகள் எதுவுமே இதயசுத்தியுடன் இல்லை என்பதை அவற்றின் கடந்த சில வார நடவடிக்கைகள் தெளிவாக எடுத்து இயம்புகின்றன....

*** அம்மையார் முழு இனவாதக் கட்சியான ஜே வி பியுடன் கூட்டணி அமைப்பு...

*** ரணில் இராணுவ ஒத்துழைப்புக்காக அமெரிக்கா இந்தியாவுடன் ஒப்பந்தங்கள் செய்வது பற்றி ஆலோசித்து வருவதும்... ரகசிய ஒப்பந்தங்கள் செய்வதும்....

*** இப்போ இவற்றை எல்லாம் கடந்து அம்மையார் ரஷ்சியாவுடன் செய்து கொண்டுள்ள இராணுவ ஒப்பந்தங்கள்... அதுவும் ரஷ்சியாவுடன் இணைந்து குடாநாட்டை எப்படி எதிர்காலத்தில் பாதுகாப்பது என்று திட்டம் தீட்டி செயல்படுத்தப்போவது என்பதான அறிவிப்புக்கள்...

சிங்கள ஆட்சியாளர்கள் தமிழ் மக்களை இராணுவ வேலிகளுக்குள் அடக்கவே விளைகின்றனர் எனபதையே தெளிவாகக் காட்டுகிறது.

இந்நிலையில் தமிழ் மக்களின் பாதுகாவலர்களான விடுதலைப்புலிகள் இவற்றை எவ்வகையில் எதிர் கொண்டு தமது மக்களையும் கொள்கைகளையும் பாதுக்காக்கப் போகின்றனர் என்ற கேள்வி இன்று தமிழ்மக்கள் மத்தியில் எழுவது இயல்பாகி நிற்கிறது....இதே போன்றதொரு தந்திரத்தை ஜே ஆரும் புலிகளுக்கெதிராகவும் தமிழ் மக்களுக்கெதிராகவும் பயன்படுத்தினார்...ஆனால் அன்று இருந்த உலக அரசியல் சூழல் வேறு இன்று இருப்பது வேறு...எந்த அழுத்தங்களையும் சமாளித்து தமது மக்களுக்காக புலிகளின் பேரம் பேசும் சக்தியைக் காக்க வேண்டியது தமிழ் மக்களினதும் புலிகளினதும் மற்றும் தமிழ் அரசியல் சக்திகளினதும் கட்டாயக் கடமையாகும்....உண்மையில் ரணிலும் அம்மையாரும் இரு துருவங்களாக இருப்பது என்பது சிங்கள பேரினவாதத்தின் ஒரு நாடகமே அன்றி வேறில்லை....இந்த வேஷம் தமிழ் இனத்திற்கு எதிரான சிங்கள பேரினவாதத்தின் சங்கமமே அன்றி வேறில்லை....!

ஈழத்தமிழர்களின் தலைவிதியை இன்னும் ஒன்றும் சோதிக்கப் போகிறது.... அதுதான் வரவிருக்கும் இந்திய நாடாளுமன்றத் தேர்தல்கள்....அங்கு தேர்தலின் பின் ஆட்சியமைக்கப் போகும் கட்சியின் ஈழத்தமிழர் தொடர்பான கொள்கை... விடுதலைப் புலிகள் தொடர்பான கொள்கை எந்த நிலைப்பாட்டை எடுக்கிறதோ... அது சிங்கள பேரினவாததிற்கு எந்த வகையில் இலாபமாக அமையப் போகிறது என்பதிலும் தங்கி உள்ளது.

எனவே தமிழ் மக்களும் அவர்களின் அரசியல், இராணுவ சக்திகளும் இந்த பேரினவாதச் சவால்களைச் சந்தித்து வெற்றி கொள்ள வேண்டியது கட்டாய தேவையாகும். அதற்கேற்ப திட்டங்களையும் செயற்பாடுகளையும் சரியான புரிந்துணர்வுடன் இணைந்த செயற்பாடுகள் மூலமாக மேற்கொண்டு தமது நிலையின் பலத்தை உலகிற்கு காட்ட வேண்டியதும் அவசியமாகிறது...அதற்காக தமிழ் மக்களாகிய நாங்கள் கருத்து வேறுபாடுகளுக்கு அப்பால் எமது பலத்தைக் காட்ட தமிழ் மக்களின் ஒரே இராணுவ, அரசியல் சக்தியின் பின் அணி திரள்வோமாக....!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :!: Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
ஜே ஆரின் பழைய தந்திரம் - by kuruvikal - 01-31-2004, 01:00 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)