02-14-2006, 11:11 AM
விடுதலைப் புலிகளை விரட்டியே தீருவேன் என்று முழக்கிய வீராங்கனை அல்லவா ஜெயலலிதா?: கருணாநிதி கிண்டல்
[செவ்வாய்க்கிழமை, 14 பெப்ரவரி 2006, 06:52 ஈழம்] [புதினம் நிருபர்]
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மீண்டும் தமிழீழ விடுதலைப் புலிகளை மையப்படுத்தி தமிழக அரசியல் காய் நகர்த்தல்கள் நடந்து வருகின்றன.
தமிழீழ விடுதலைப் புலிகளை என்றும் ஆதரிப்பேன் என்று கூறியதால் இந்திய அரசாங்கம் கொண்டு வந்த பொடா சட்டத்தினால் தமிழக முதல்வர் ஜெயலலிதா அரசால் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ கைது செய்யபட்டார்.
எதிர்வரும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வைகோவின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்தான் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும் என்பதை பிரதான கட்சிகளான கருணாநிதியின் தி.மு.க.வும் ஜெயலலிதாவின் அண்ணா தி.மு.க.வும் தங்களது பேச்சுக்களின் மூலம் வெளிப்படுத்தி வருகின்றனர்.
விடுதலைப் புலிகளை ஆதரித்தமைக்காக வைகோவை பொடா சட்டத்தில் சிறையிலடைத்த அண்ணா தி.மு.க.வின் சார்பில் இப்போது பகிரங்க அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.
இதற்குப் பதிலளிக்கும் வகையில் தமிழீழ விடுதலைப் புலிகளை முன்னிறுத்தி தி.மு.க. தலைவர் கருணாநிதியும் தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளார்.
செஞ்சியில் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் முதலாவது தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் விடுதலைப் புலிகள் தொடர்பாக பேசியதாவது:
கர்நாடக மாநில புதிய முதல்வர் சொல்கிறார்..தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய தொழிற்சாலை ஆந்திராவிற்குப் போய்விட்டதாகச் சொல்கிறார்கள். அந்தத் தொழிற்சாலை ஆந்திராவிற்கும் வேண்டாம். தமிழ்நாட்டிற்கும் வேண்டாம். ஏனென்றால் தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகள் இருக்கிறார்கள். ஆந்திராவில் நக்சலைட்கள் இருக்கிறார்கள், ஆகவே அந்தத் தொழிற்சாலையை கர்நாடகத்திற்குத் தாருங்கள். இங்கே அனைத்து வசதிகளையும் செய்து தருகிறோம் என்று சொல்லியிருக்கிறார் என்றால், இதைப் பற்றி தமிழ்நாட்டு முதலமைச்சர் வாய் திறந்திருக்கிறாரா?
இங்கே விடுதலைப் புலிகள் எங்கே இருக்கிறார்கள் என்று சொல்லி இருக்க வேண்டாமா?
விடுதலைப் புலிகள் எப்போதே இருந்தார்கள், இப்போது இல்லை என்று சொல்ல வேண்டாமா முதலமைச்சர். அதிகாரபூர்வமாக பதிலளிக்க வேண்டாமா?
சொன்னவர் சாதாரணமானவர் அல்லவே!
பக்கத்து மாநில முதலமைச்சர் அல்லவா? புதிய முதலமைச்சர் தமிழ்நாட்டிலே விடுதலைப் புலிகள் இருக்கிறார்கள். ஆகவே, அந்தத் தொழிற்சாலையை எங்கள் மாநிலத்திற்குத் தாருங்கள் என்று கேட்கிறார்.
அதை மறுத்துப் பேச தமிழக முதல்வருக்கு முடியவில்லை.
ஏன் விடுதலைப் புலிகள் என்றால் உங்களுக்குப் பயமா?. இந்த அம்மையாருக்குத்தான் பயமே கிடையாதே!
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சட்டப்பேரவையில் விடுதலைப் புலிகளையெல்லாம் விரட்டியே தீருவேன். விடுதலைப் புலிகள் துரோகிகள், அவர்களுக்குத் தமிழ்நாட்டில் எள்ளளவு இடமும் தரமாட்டேன் என்று நீட்டி முழக்கிய இந்த வீராங்கனை ஏன் இப்போது கர்நாடக முதல்வரின் கூற்றுக்கு பதில் சொல்லாமல் ஓடி ஒளிகிறார். அப்படி ஒன்றும் விடுதலைப் புலிகள் இங்கேயில்லை, அவர்களால் தொழில் வளருவது ஒன்றும் கெடாது என்று சொல்லியிருக்க வேண்டாமா? என்றார் கருணாநிதி.