02-14-2006, 03:24 AM
<b>யாழில் மக்களை அச்சுறுத்தும் படையினர் நடவடிக்கைகள் அதிகரிப்பு! </b>
யாழ். குடாநாட்டில் பொதுமக்கள் பயணம் செய்யும் பேரூந்துகள், வான், கார் மற்றும் லொறிகளில் பலாத்காரமாக ஆயுதமுனைகளில் மறித்து பயணம் செய்யும் படையினரின் செயலுக்கு பொதுமக்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் விருப்பத்திற்கு மாறாக தொடர்ந்து பொதுமக்களின் வாகனங்களில் படையினர் பயணம் செய்வது நீடிப்பதாகவும் அச்சத்தின் காரணமாக பொதுமக்களை பணயமாகப் பயன்படுத்தும் மனநிலையில் படையினரின் செயற்பாடுகள் மாறிவருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்களின் வாகனங்களை படையினர் தாம் நினைத்த இடத்தில் மறித்து ஏறுவதும் தமது முகாம்களுக்கு முன்னால் நிறுத்தி இறங்குவதும் தற்பொழுது சர்வ சாதாரணமாக நடைபெறுவதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் நாவற்குழி சந்தியில் நிலைகொண்டுள்ள சிறிலங்காப் படையினர் மாலை ஏழு மணிக்கு பின்னர் பிரதான சாலை வழியாக வருவோரை மறித்து தாக்கி வருவதாக அப் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
வேலை முடித்து விட்டு களைப்புடன் வீடு திரும்பும் அப்பாவி மக்களை படையினரின் ஈவிரக்கமற்ற முறையில் தாக்கி வருகின்றனர்.
மக்களின் சைக்கிள்களின் காற்றுக்களை பிடுங்கி விடும் படையினர் பொதுமக்களை சைக்கிள்களை உருட்டிச் செல்லுமாறு பணித்து வருகின்றனர்.
சிலருடைய அடையாள அட்டைகளைப் பறித்து வைத்துக்கொண்டு காலையில் வந்து பெற்றுக்கொள்ளுமாறு அச்சுறுத்துவதுடன் பொதுமக்களுக்கு எதிரான நடவடிக்கையில் தொடர்ந்து படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே யாழ். குடாநாட்டில் அரச படைகளால் சமாதான காலத்தில் பொதுமக்கள் மீது மேற்கொள்ளப்ட்ட படுகொலைகள் மற்றும் படுகாயப்படுத்தப்பட்டு ஊனமாக்கப்பட்டோருக்கு நட்ட ஈடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
படையினரின் தாக்குதலில் சொத்துக்கள் மற்றும் பொருட்களை இழந்த மக்களுக்கு போர் ஓய்வு கால நட்டஈடு வழங்க யாழ். அரச செயலகம் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சமாதான காலத்திலும், சிறிலங்காப் படைகளால் மக்கள் சந்தித்த உயிர், உள பொருளாதார இழப்புக்களுக்கு சிறிலங்கா அரசாங்கமே பொறுப்பு என்பதால் யாழ். குடாநாட்டில் படையினராலும் அவர்களுடன் சேர்ந்து இயங்கும் ஆயுதக்குழுக்களாலும் படுகொலை செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான குடும்பங்களுக்கும் பாதிப்புக்குள்ளான குடும்பங்களுக்கும் அரசிடமிருந்து இழப்பீடுகளை பெற்றுக்கொடுக்க யாழ். அரச அதிபர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பருத்தித்துறை கடற்பரப்பில் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கட்டுமரங்கள் சில காணாமல் போயிருப்பதாக தெரிவிக்கும் மீனவர்கள், இவை படையினரால் எடுத்துச் செல்லப்பட்டு கரையோர பாதுகாப்பு நிலைகள் அமைக்க கட்டுமரத்தில் உள்ள மரங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
படையினரின் பிரசன்னம் உள்ள கரையோரப் பகுதிகளில் பிறிதொருவரின் நடமாட்டம் இடம்பெற வாய்ப்பு இல்லாமையால் படையினர் இவற்றை தமது தேவைகளுக்கு பயன்படுத்தியிருக்கலாம் என்றும் கடந்த காலங்களிலும் இவ்வாறாக கட்டுமரங்கள் சில காணாமல் போய்யிருப்பதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
அதேபோல் தென்மராட்சி இராணுவ உயர்பாதுகாப்பு வலயப் பகுதிக்குள் வசிக்கும் மக்கள் படையினரின் அச்சுறுத்தல்களுக்கும் கொலை மிரட்டல்களுக்கும் அஞ்சி வாழ்வதாக தெரிவிக்கின்றனர்.
இப்பகுதியில் ஒரு சிறிலங்காப் படைச் சிப்பாய்க்கும் ஆபத்து நேரும் எனில் அனைவரையும் சாம்பல் ஆக்குவோம் என்றும் ஒருவரேனும் இப்பகுதியில் கடத்தப்பட்டாலோ, காணாமல் போனாலோ உங்களில் பலர் காணாமல் போய்விடுவீர்கள் என்றும் நேரடியாகவே அச்சுறுத்தி வரும் படையினர் பொதுமக்களை ஆயுதமுனையில் அச்சுறுத்தும் முயற்சிகளிலேயே தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
பல குடும்பங்களை அச்சத்திற்குள்ளாக்கியிருப்பதால் பலரும் அப்பகுதியை விட்டு வெளியேற்றி வருவதாகவும் பலர் தமது பிள்ளைகளை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி விட்டு இப் பகுதியில் வசிப்பதாகவும் நாள் தோறும் அனைத்து வீடுகளும் படையினரின் கூடுதலான கண்காணிப்பில் இருப்பதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
சரசாலை ஊடாக நெல்லியடிக்குச் செல்லும் வெளிப்பகுதியில் உள்ள பிரதான சாலையின் இருபுறங்களிலும், நீண்டு செல்லும் பெரும் பற்றைகளை படையினர் தீயிட்டு அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
பெரும் காடுகளைப் போல் ஓங்கி வளர்ந்து நிற்கும் மரங்கள் பல படையினரால் தீயிட்டு அழிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கும் மக்கள் படையினரின் நடமாட்டம் அதிகம் இருப்பதாலும், பெரும் பற்றைகளுக்கு இடையிடையே முகாம்கள் சில இருப்பதாலும் பொது மக்களின் குடிமனைகள் நீண்டு செல்லும் இப்பெரும் வெளிப் பகுதியில் இல்லாமையினாலும் பொதுமக்கள் இந்த வீதியை அவசர தேவைகளுக்காக மட்டுமே பயன்படுத்துகின்றனர்.
சாவகச்சேரிப் பிரதேசத்தில் இருந்து நெல்லியடிக்கு இலகுவில் செல்லும் வீதி இப்பாதை என்பது குறிப்பிடத்தக்கது
<i><b>தகவல் மூலம் - புதினம்.கொம்</b></i>

"
"
"