Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நாடாளுமன்ற ஆசனத்தை இழந்தார் எஸ்.பி.திசநாயக்க
#7
<b>மார்ச் 27 இல் எஸ்.பி.திசநாயக்க விடுதலை </b>
[செவ்வாய்க்கிழமை, 14 பெப்ரவரி 2006, 05:45 ஈழம்] [கொழும்பு நிருபர்]
ஐக்கிய தேசியக் கட்சியின் எஸ்.பி.திசநாயக்க எதிர்வரும் மார்ச் 27 ஆம் நாள் சிறையிலிருந்து விடுவிக்கப்படுகிறார்.


சிறை நன்னடத்தை காரணமாக அவரது தண்டனைக் காலம் முடிவதற்கு 8 மாதங்கள் 14 நாட்களுக்காக அவர் விடுதலை செய்யப்படக்கூடும் என்று தெரிகிறது.

இதனிடையே தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி நீக்கத்தை ஆட்சேபித்து எஸ்.பி.திசநாயக்க தாக்கல் செய்திருந்த சிறப்பு மேன்முறையீட்டு மனுவை தலைமை நீதிமன்றம் நேற்று திங்கட்கிழமை நிராகரித்தது.

பதில் பிரதம நீதிபதி நிஹால் ஜயசிங்க தலைமையில் என்.கே. உடலகம,என்.ஈ. திசநாயக்க ஆகியோரை கொண்ட குழு இம்மனுவை நிராகரித்தது.

நீதிமன்ற அவமதிப்பு குற்றவாளி என்ற காரணத்துக்காக தமது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை பறித்து விட முடியாது என்று தெரிவித்து இம்மனுவை திசநாயக்க தாக்கல் செய்திருந்தார்.

எஸ்.பி.திசநாயக்க, பதவி விவகாரம் தொடர்பில் ஏலவே மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தாராயினும் தலைமை நீதிபதி தீர்ப்பு சம்பந்தப்பட்ட விடயம் என்பதால் அம்மனுவை விசாரிப்பதற்கான சட்டவாதிக்கம் கீழ்நிலை நீதிமன்றத்துக்கு இல்லை என்று தெரிவித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் பிரதிவாதிகளுக்கு அறிவித்தல் வழங்க மறுத்திருந்தது.

இந்நிலையில் தலைமை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு மீதான விசாரணைகள் நடைபெற்று நேற்று முடிவடைந்தன.

மனுதாரரான திசநாயக்கவின் சார்பில் சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபாவுடன் சட்டத்தரணி கௌரிசங்கரி தவராசா, கோலித தர்மவர்த்தன ஆகியோர் முன்னிலையாகி இருந்தனர்.

அரசியலமைப்பின் 105 ஆவது அத்தியாயம் உயர் நீதிமன்றத்தின் சட்ட நியாயாதிக்கம் பற்றியது. ஆனால் குற்றவியல் குற்றம் பற்றிய வரைவிலக்கணத்தை அது கூறவில்லை. நீதிமன்ற அவமதிப்பு குற்றத்துக்கு தண்டனை வழங்க முடியும் என்று தான் அதில் கூறப்பட்டுள்ளது. நீதிமன்ற அவமதிப்பு அரசியலமைப்பின் கீழும் சரி தண்டனைச் சட்டக் கோவையின் படியாயினும் சரி குற்றவியல் குற்றமல்ல என்று அரச தரப்பில் வாதிடப்பட்டது.

இதையடுத்து மனுவை விசாரணைக்கு ஏற்க மறுப்பதாக நீதிபதிகள் அறிவித்து திசநாயக்கவின் மனுவை தள்ளுபடி செய்தனர்.

<i><b>தகவல் மூலம் - புதினம்.கொம்</b></i>
"
"
Reply


Messages In This Thread
[No subject] - by Mathan - 01-19-2006, 03:03 PM
[No subject] - by மேகநாதன் - 01-31-2006, 02:49 AM
[No subject] - by தூயவன் - 02-05-2006, 01:36 PM
[No subject] - by மேகநாதன் - 02-07-2006, 04:26 AM
[No subject] - by மேகநாதன் - 02-14-2006, 03:21 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)