Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மகிந்தவை சந்திக்க மறுத்த ஜெயலலிதாவுக்கு நன்றி
#5
<b>மகிந்த ராஜபக்சவை சந்திக்க மறுத்த ஜெயலலிதாவுக்கு வைகோ கட்சி பாராட்டு </b>
[செவ்வாய்க்கிழமை, 14 பெப்ரவரி 2006, 06:34 ஈழம்] [புதினம் நிருபர்]

இந்தியா பயணம் மேற்கொண்ட சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவை சந்திக்க தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா மறுத்தமைக்கு வைகோ தலைமையிலான மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் நன்றி தெரிவித்துள்ளது.


சென்னையில் நேற்று முன்நாள் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மறுமலர்ச்சி தி.மு.க.வின் கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத் பேசியதாவது:

வருகிற சட்டசபை தேர்தல் முடிந்து சட்டசபையில் யார் ஆட்சியில் அமர்ந்தாலும், எதிர்க்கட்சி தலைவராக வைகோதான் அமர்வார். நாங்கள் கடந்த 12 வருடங்களாக நாட்டு மக்களுக்காக உழைத்து வருகிறோம். ஆனால் எங்களுக்கு தோல்விதான் கிடைத்தது. எத்தனையோ சறுக்கல்கள் ஏற்பட்டாலும் நாங்கள் துவண்டு விடவில்லை.

யாருக்கு பதவி ஆசை இல்லையோ அவர்தான் பதவியில் அமர வேண்டும் என்று நபிகள் நாயகம் கூறினார்.

எங்களை எந்த தொலைக்காட்சியிலும் இதுவரை காட்டியதே இல்லை. ஆனால் இப்போது பெயர் தெரியாத தொலைக்காட்சிகளில் எல்லாம் எங்களை காட்டுகிறார்கள்.

இந்த நேரத்தில் தமிழக முதலமைச்சருக்கு நான் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.

ஏன் என்றால் இலங்கை தமிழர்களைக் கொன்று குவிக்கும் இலங்கை அதிபர் ராஜபக்ச இந்தியா வந்தபோது தமிழக முதல்வரை சந்திக்க வேண்டும் என்றார்.

அதற்கு முதல்வர், அவரை சந்திக்க மறுத்ததை பாராட்டுகிறேன்.

கலைஞர் மகள் கனிமொழியும், ப.சிதம்பரம் மகன் கார்த்திக்கும் இணைந்து நடத்தும் கருத்து என்ற இணைய தளம் சமீபத்தில் தமிழ்நாட்டில் யார் முதலமைச்சராக வருவார்கள் என்று கருத்துக் கணிப்பு நடத்தியது.

இதில் வைகோவுக்குத்தான் அடுத்த முதலமைச்சர் என்ற முறையில் 70 விழுக்காடு வாக்குகள் கிடைத்தன.

மு.க.ஸ்டாலினுக்கு 10 விழுக்காடுதான் கிடைத்துள்ளது.

இதில் இருந்து என்ன தெரிகிறது என்றால் மக்கள் எங்களை அங்கீகரிக்க தொடங்கி விட்டார்கள்.

2 முறை நாங்கள் ஏமாந்து விட்டோம். இந்த முறை ம.தி.மு.க. தொண்டர்களை ஏமாற்ற முடியாது. நாங்கள் ஏமாற மாட்டோம். யார் ஆட்சியில் அமரப்போவது என்பதை தீர்மானிக்கும் கட்சியாக ம.தி.மு.க. இருக்கும்.

எங்களை எல்லா பெரிய கட்சிகளுமே அவர்களுடன் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். தேர்தல்களம் நெருங்கி விட்டது. இன்னும் ஒரு வாரத்தில் வைகோ சரியாக முடிவு எடுப்பார். எங்களுக்கு எங்கு அங்கீகாரம் கிடைக்கும் என்பது அவருக்கு தெரியும் என்றார் நாஞ்சில் சம்பத்.

<i><b>தகவல் மூலம்-புதினம்.கொம்</b></i>
"
"
Reply


Messages In This Thread
[No subject] - by Thala - 01-04-2006, 02:01 AM
[No subject] - by வர்ணன் - 01-04-2006, 02:27 AM
[No subject] - by மேகநாதன் - 02-14-2006, 03:17 AM
[No subject] - by adithadi - 02-14-2006, 03:47 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)