02-13-2006, 10:50 PM
பிரான்சின் பாரிஸ் விமான நிலையத்தில் ஊருக்கு போவதற்கு தயாராக சாந்தி ஒரு சிறிய பையுடன் அவளை வழியனுப்ப சிறியும் சிவாவும் வந்திருந்தனர். வாங்கோ போடிங்பாஸ் எடுத்திட்டு வந்த நிண்டு கதைப்பம் பிறகு சனம் கூடிடும் என்று சிவா சாந்தியை அழைத்து போனான்.
சாந்தியையும் சிவாவையும் தனியே கதைக்க விட்ட விட்டு சிறி ஒரு பக்கமாக வந்து நின்று அங்கு வரிசையாக நிறுத்தி வைத்திருந்த விமானங்களை வேடிக்கை பாத்து கொண்டு நிண்டான்;.வழைமையாக வளவளவென்று கதைக்கும் சிவாவும் சாந்தியும் அன்ற கதைக்க வார்த்தைகள் வராமல் வசனங்களை தேடித் தேடியே கதைத்தனர்.
சாந்தி புறப்படும் விமானத்திற்கான உள்நுளைவு அனுமதி ஒலி பெருக்கியில் அறிவிக்கபட்டதும் சாந்தி சிவாவிடம் சரி சிவா நான் போக போறன் நேரமாயிட்டுது. நீஙகள் இதுவரை எனக்கு செய்த உதவிகளிற்கு எல்லாம் வெறும் வாயாலை நன்றி என்று சொல்லி போட்டு போக எனக்கு மனம் இல்லை. எண்டாலும் என்னாலை அதைத்தான் இப்ப செய்ய முடியும் என் வாழ்நாளில் உங்கடை உதவியளை மறக்கமாட்டன்:.
சிறி எங்கை காணெல்லை கூப்பிடுங்கோ சொல்லிட்டு உள்ளை போறன்.என்ற சிறிய விசும்பலுடன் கூறிகொண்டாலும் இதுவரை ஊருக்கு போக வேண்டும் என்கிற எண்ணத்தில் இருந்தவளிற்கு ஏனே இப்போது சிறிய தடுமாற்றம்.
சரி சரி அழாதையுங்கோ இதென்ன குழந்தை பிள்ளை மாதிரி இப்ப என்ன நான் ஊருக்கு வருவன் தானே அப்ப சந்திக்கலாம் தானே அந்தா சிறியும் வாறான். சரி நேரமாச்சு நீங்கள் போட்டு வாங்கோ என்ற சாந்தியை தேற்ற முயன்ற சிவா. சிறியும் அருகே வந்து சாந்தியிடம் என்ன நேரமச்சு அறிவிக்கிறாங்கள் சரி சந்தோசமா போட்டு வாங்கோ மறக்காமல் இடைக்கிடை கடிதம் போடுங்கோ என்ன என்றான்.
சாந்தி தனது கை பையை தூக்கி கொண்டு சரி போட்டு வாறதெங்கை போறன் கட்டாயம் உங்கடை இரண்டு பேரின்ரை வீட்டையும் போவன்.போய் சேந்த உடைனை போன் பண்ணுறன் பிறகு ஊருக்கு போனால் கடிதம் தான் போடலாம்.கட்டாயம் போடுறன்.யாரை மறந்தாலும் உங்கள் இரண்டு பேரையும் மறக்கமாட்டன்.
என்றவாறு புறப்பட்ட சாந்தியிடம் சாந்தி ஒரு நிமிசம் என்றவாற சிவா ஒரு கடிதத்தை நீட்டினான்.என்ன உங்கடை வீட்டை குடுக்க வேணுமே என்று கேட்ட சாந்தியிடம். இல்லை சாந்தி இது உங்களுக்குதான் எழுதினனான். நீங்கள் ஆறுதலாய் பிளேனுக்கை இருந்து படிச்சு பாருங்கோ சரி போட்டு வாங்கோ என்று சொல்லி அந்த கடிதத்தை அவளின் கையில் திணித்து விட்டு போய் கொண்டிருந்த சாந்தி மறையும்வரை கையசைத்து கொண்டிருந்தான்.
கையசைத்து கொண்டிருந்த சிவாவிடம.; டேய் சாந்தி போய் கன நேரமாச்சு இன்னுமேன் கையை அசைச்சு கொண்டு நிக்கிறாய். அடசே நானும் ஏதோ தமிழ்படங்களிலை வாற மாதிரி எயா போட்டிலை வைச்சு கடைசியிலை சாந்தி அய் லவ் யுயு........எண்டு கத்த அவாவும் படியாலை இறங்கி ஓடிவந்து உன்னை கட்டி பிடிக்க அதை நான் பாக்கலாமெண்டு அரை நேர லீவு வேறை போட்டிட்டு வந்தன்.
(அப்பிடி நடந்திருந்தா நானும் இதோடை கதையை முடிச்சிருப்பன்)
நீயென்னடா எண்டா கடிதத்தை எழுதி அதுவும் பிளேனுக்கை படிக்க சொல்லி குடுத்து விட்டிருக்கிறாய். பிளேனுக்கை பொழுது போக்க படிக்கதான் பேப்பர் குடுப்பாங்களே? பிறகேன் உன்ரை கடிதம் என்று சரித்தாவாறே கூறிக்கொண்டு சரி வா போவம் என்றபடி நடந்த சிறியிடம்.
சிறி நீயும் என்னை புரிஞ்சு கொள்ளேல்லை அதுதான் சிறிக்கிறாய். எற்கனவெ ரவியாலை சரியா பாதிக்கப்பட்ட சாந்திக்கு தானாகவே கலியாணம் எண்டாலோ ஆண்கள் எண்டாலோ ஒரு வெறுப்பு வந்திட்டிது அது பலதரம் நான் அவளோடை கதைக்கேக்கை கவனிச்சிருக்கிறன்.
நானும் இப்ப போய் நான் காதலிக்கிறன் எண்டு சொன்னா எல்லா ஆம்பிளையளும் இப்பிடித்தான் பெண்ணெண்டா உடைனை கலியாணமும் மற்ற தேவையளையும் தான் பெண்ணிட்டை எதிர்பாக்கினம் எண்டு ஆண்களைப்பற்றி ஒரு பொதுவான அபிப்பிராயம் வந்திடும்.அதோடை நான் இவ்வளவு காலமும் செய்த உதவியளாலை ஏதோ தன்னிலை ஒரு அனுதாபதம் வந்துதான் அப்பிடி சொல்லுறன் எண்டும் நினைக்கலாம்.
அதாலை தான் அவளுக்கும் ஒரு குறிப்பிட்ட காலஅவகாசம் குடுத்திருக்கிறன் மன காயங்களிற்கு காலம்தான் சரியான மருந்து காலம் கட்டாயம் அவள் மனதையும் மாத்தும். அப்ப அவளா என்னட்டை வருவாள் அப்பிடி இல்லாட்டியும் கூட பரவாயில்லை. இது என்ன உலகத்தின் இறுதி சுழற்சியா??இல்லை தானே.
என்ற கூறி கொண்டு போன சிவாவை சிறி பாத்து சரி சரி பகிடிக்குதான் சொன்னனான் அதுக்கு போய் நீ இப்பிடி தத்துவம் எல்லாம் கதைப்பாய் எண்டு நினைக்கேல்லை காதலிச்சா கவிதைவரும் எண்ட கேள்விப்பட்டிருக்கிறன் ஆனால் தத்துவமும் வருமெண்டு இப்பதான் தெரியிது என்ற சிறியை செல்லாமாய் அடிக்க சிவா துரத்த அப்படியே வீடு போய் சேர்ந்தார்கள்.
விமானத்தில் ஏறி தனது இருக்கை இலக்கத்தை சரி பார்த்து இருந்து கொண்ட சாந்தி தனது பாது காப்பு பட்டியை அணிந்து கொண்டதும் அங்கு சிறிய திரையில் போய்கொண்டிருந்த முதலுதவி பாதுகாப்பு பற்றிய விளக்கங்களைகூட பாக்க விருப்பம் இல்லாதவளாய் சிவா அப்படி என்ன தான் தனக்கு எழுதியிருப்பான் அதை படித்துவிட வேண்டும் என்கிற அவாவில் அவசரமாக தனது கைப்பையை திறந்து சிவா குடுத்த கடிதத்தைதிறந்து பிரித்தாள்

<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
http://sathriii.blogspot.com/