Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வண்ண ரோஜாக்கள் விற்பனை மும்முரம் !!
#1
<b>காதலர் தினம்: வண்ண ரோஜாக்கள் விற்பனை மும்முரம் </b>

நாளை காதலர் தினத்தை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், தளி பகுதிகளில் விளையும் கண்கவர் வண்ண ரோஜாக்களின் விற்பனை உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் படுஜோராக நடைபெற்று வருகின்றன.

காதலர்களின் கற்பனையிலும், கவிதைகளிலும் முதல் இடம் வகிப்பது ரோஜா மலர்கள் தான். காதலர்கள் தங்களின் அன்பையும், ஆசையையும் பரிமாறிக் கொள்ள பயன்படும் இந்த வகை வண்ண ரோஜாக்களின் தேவை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே உள்ளது.

குறிப்பாக பிப்ரவரி 14-ந் தேதி காதலர் தினம் என்பதால் ரோஜா பூவின் தேவை உலக நாடுகளில் பன்மடங்கு உயர்ந்து வருகிறது. இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் அனைத்திற்கும் ஓசூர், தளி பகுதிகளில் இருந்து குளிர்சாதன வசதி செய்யப்பட்ட லாரிகள் மூலம் பெங்களூர் விமான நிலையம் கொண்டு சென்று அங்கிருந்து குளிர்சாதன வசதி செய்யப்பட்டது. விமானத்தில் உலக மலர் சந்தையான ஹாலந்துக்கு அனுப்பப்படுகின்றன.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வெளிநாடுகளிலும், உள்நாட்டு மலர் சந்தைகளிலும் ரோஜா பூவின் தேவை மிக அதிகமாக உயர்ந்து உள்ளது.

அனைத்து மாநிலங்களுக்கும் ஐரோப்பியா மற்றும் ஐக்கிய அரபு நாடுகளுக்கும் 50 லட்சம் ரோஜா பூக்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளன.

வழக்கத்தை விட இந்த ஆண்டு ஓசூர், தளி பகுதிகளிலிருந்து அனுப்பப்பட்டுள்ள ரோஜா பூவிற்கு உலக மார்க்கெட்டில் நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக ஐரோப்பிய நாடு களில் பூ உற்பத்திக்கான செலவினம் அதிகம் ஆவதால் அங்கு மலர் சாகுபடி அடியோடு நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் வெளிநாடுகள் ரோஜாவுக்காக இந்தியா உள்ளிட்ட நாடுகளை எதிர் நோக்கி இருக்கின்றன.

ரோஜா மலர்களில் சிவப்பு ரோஜா என்றாலே மார்க்கெட்டில் அதற்கான தனி மவுசு உள்ளது. ஓசூர், தளி பகுதிகளில் ஏற்றுமதி தரம் வாய்ந்த பூக்கள் உற்பத்தி செய்வதற்கான மண்ணின் தரம், சிதோஷ்ண நிலை மிகவும் ஏதுவாக உள்ளது.

அதனால் நல்ல தரமான மலர்கள் விளைகின்றன. இதனால் கிருஷ்ணகிரி மாவட்ட சாகுபடியாளர்களுக்கு நல்ல வருவாய் கிடைப்பதுடன் நமது நாட்டுக்கு அன்னியச் செலாவனி கிடைக்க வாய்ப்பாக உள்ளது.

ஆண்டு முழுவதும் இதன் உற்பத்தியும், விற்பனையும் இருந்து வந்தாலும் காதலர் தினத்தில் அதிக விலை கொடுத்து கூட காதலர்கள் தங்கள் காதலிக்கு அன்பு பரிசாக ரோஜா மலர்களை வாங்கி கொடுப்பதால் உலக சந்தையிலும், உள்நாட்டிலும் இதன் சாகுபடியாளர்களுக்கும், வியாபாரிகளுக்கும் கூடுதல் வருவாய் கிடைக்க வாய்பாக உள்ளது.

மனம் கவர்ந்த ரோஜாக்கள் ஓசூரில் இருந்து கடல் கடந்து செல்வது அனைவருக்கும் மகிழ்ச்சி தரும் ஒன்றாகும்.


விடுப்பு : .
<b> .. .. !!</b>
Reply


Messages In This Thread
வண்ண ரோஜாக்கள் விற்பனை மும்முரம் !! - by Rasikai - 02-13-2006, 06:47 PM
[No subject] - by ப்ரியசகி - 02-13-2006, 08:34 PM
[No subject] - by சுடர் - 02-14-2006, 07:51 AM
[No subject] - by MUGATHTHAR - 02-14-2006, 09:44 AM
[No subject] - by வினித் - 02-14-2006, 09:53 AM
[No subject] - by அருவி - 02-14-2006, 10:19 AM
[No subject] - by MUGATHTHAR - 02-14-2006, 10:24 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)