Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
"TRT" தமிழ் அலையின் அரசியல் ஆய்வாளருக்கு கொலைப்பயமுறுத்தல்!!
#1
கடந்த சில தினங்களாக தொடர்ச்சியான முறையில் ஐரோப்பாவிலிருந்து இயங்கும் "TRT" தமிழ் அலை வானொலியின் அரசியல் ஆய்வாளர் "உதயகுமார்" கூலிக்குழுக்களின் வானொலி மூலம் பயமுறுத்தலுக்கு உட்பட்டுள்ளார்! குறிப்பாக டென்மார்க், ஜேர்மனி நாடுகளிலிருக்கும் கூலிகளின் உறுப்பினர்கள் மூலமே இப்பயமுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வருவதாக தெரிகிறது!

கடந்த காலங்களில் இக்கூலி கும்பல்களினால் தாயகத்தில் ஊடகவியலாளர்கள் "விமலராஜன், நடேசன், சிவராம், சுகிர்தராஜன், .." போன்றோர் பயமுறுத்தல்களின் பின் கொல்லப்பட்டதும், பல அரசியல் ஆய்வாளருக்கு கொலைப்பயமுறுத்தல் விடுக்கப்பட்டு நாட்டை விட்டு வெளியேறியதும் இங்கு குறிப்பிடத்தக்கது!!!

இவர்களது கொலை கலாச்சாரங்கள் புலத்துக்கும் வந்துள்ளதா?? என்று சந்தேகப்படத் தோன்றுகின்றது!!

இக்கொலை வெறி பிடித்த காட்டுமிராண்டிக் கூலிகளின் பயமுறுத்தல்களை உரிய முறையில், அவ்வானொலி நிர்வாகமோ அல்லது அவ்வரசியல் ஆய்வாளரோ, இந்நாடுகளிலுள்ள பாதுகாப்பு துறையினரின் கவனத்துக்கு கொண்டு வருவதன் மூலம் உரிய பாதுகாப்பை பெறக்கூடியதாக இருக்கும். அதேவேளை எதிர் காலத்தில் வரக்கூடிய மிரட்டல்களுக்கு முகம் கொடுக்கக் கூடியதாகவுமிருக்கும்.
Reply


Messages In This Thread
"TRT" தமிழ் அலையின் அரசியல் ஆய்வாளருக்கு கொலைப்பயமுறுத்தல்!! - by ஜெயதேவன் - 02-13-2006, 03:09 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)