02-13-2006, 08:40 AM
ஜெவுடன் கூட்டணி வேண்டாம்: வைகோவுக்கு புலிகள் அட்வைஸ்?
அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டாம் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு விடுதலைப் புலிகள் தரப்பில் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
முதல்வர் ஜெயலலிதா தமிழர் எதிர்ப்பாளரான மாஜி இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா இடையிலான நட்பை சுட்டிக் காட்டி, இந்தக் கூட்டணி வேண்டாம் என வைகோவுக்கு புலிகள் தரப்பு கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிகிறது.
முன்னதாக வைகோ அதிமுகவுடன் கூட்டணிக்குத் தயாராகிறார் என்ற தகவல்கள் உண்மை தான் என புலிகளுக்கு திமுக தரப்பில் இருந்து தகவல் அனுப்பப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனால் அதிமுக கூட்டணி குறித்த தனது முடிவை வைகோ மறுபரிசீலனை செய்து வருவதாகவும், அதே நேரத்தில் தனது கட்சியின் இரண்டாம் மட்டத் தலைவர்கள் அதிமுக வலையில் விழுந்துவிடுவதைத் தடுக்கும் முயற்சிகளில் அவர் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
திமுகவிடம் இருந்து கூடுதல் இடங்கள் கிடைக்கும் வரை ஜெயலலிதாவை விமர்சிப்பதை வைகோ நிறுத்தி வைத்திருப்பார் என்று மதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன. அதே நேரத்தில் தனது கட்சியின் முக்கியஸ்தர்களை பேச வைத்து திமுகவுக்கு நெருக்கடியைத் தொடரவும் வைகோ திட்டமிட்டுள்ளார்.
நாஞ்சில் சம்பத் பேச்சு:
இந் நிலையில் பொதுக் கூட்டத்தில் பேசிய மதிமுக கொள்கைப் பரப்புச் செயலாளரும் வைகோவின் மனசாட்சியுமான நாஞ்சில் சம்பத்,
தமிழக சட்டசபைத் தேர்தலில் யார் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தாலும் எதிர் கட்சித் தலைவராக அமரப் போவது வைகோதான் என்றார். திமுகவை மிகக் கடுமையாகத் தாக்கிப் பேசி வந்த சம்பத்தை சில வாரங்களாக அடக்கி வைத்திருந்தார் வைகோ. அவர் பொதுக் கூட்டங்களில் பேசவே தடா போட்டிருந்தார்.
இந் நிலையில் சென்னையில் நடந்த மதிமுக பொதுக் கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் வழக்கம் போல் அனல் பறக்கப் பேசினார். சம்பத் பேசுகையில்,
கடந்த 12 வருடங்களாக மக்களுக்காக நாங்கள் உழைத்து வருகிறோம். எங்களுக்கு இதுவரை வெற்றியே கிடைக்கவில்லை. மற்றவர்களின் வெற்றிக்காக பாடுபட்ட எங்களுக்கு தோல்விதான் கிடைத்தது.
சறுக்கல்கள் பல கண்டாலும் நாங்கள் துவண்டு போய் விடவில்லை. நபிகள் நாயகம் இவ்வாறு கூறியுள்ளார்: யாருக்கு பதவி ஆசை இல்லையோ, அவர்கள்தான் பதவியில் அமர வேண்டும். அதுதான் எங்களது கொள்கையும்.
எங்களை எந்த டிவியிலும் இதற்கு முன்பு காட்டியதில்லை. ஆனால் இப்போதோ, பெயர் தெரியாத டிவியில் கூட எங்களை காட்டுகிறார்கள். பயம் வந்துருச்சு. (சன் டிவியில் இப்போதெல்லாம் வைகோ அதிகமாகவே தென்படுகிறார்)
முதல்வர் ஜெயலலிதாவை ஒரு விஷயத்திற்காக பாராட்டியே ஆக வேண்டும். இலங்கையில் தமிழர்களை கொன்று குவிக்கும் அதிபர் ராஜபக்ஷே சென்னை வந்து அவரை சந்திக்க விரும்பியபோது, முடியாது என்று கூறி மறுத்து விட்டார் ஜெயலலிதா. இதைப் பாராட்டாமல் இருக்க முடியாது. (தேர்தல் நேரத்தில் தமிழர் எதிர்ப்பாளரான ராஜபக்ஷேவை சந்தித்தால், அது சரி வராது என்ற உளவுத்துறையின் அட்வைஸ் தான் அதற்குக் காரணம் என்பது வேறு கதை)
2 ¬முறை ஏமாந்து விட்டோம். இந்த முறை விட மாட்டோம். நாங்கள் இனியும் ஏமாறத் தயாரில்லை. யார் ஆட்சியில் அமரப் போகிறார்கள் என்பதை மதிமுகதான் தீர்மானிக்கும்.
கலைஞர் மகள் கனிமொழியும், ப.சிதம்பரம் மகன் கார்த்திக்கும் இணைந்து நடத்தும் கருத்து.காம் இணையதளத்தில் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்விக்கு 70 சதவீதம் பேர் வைகோவைத் தேர்வு செய்துள்ளார்கள்.
ஸ்டாலினுக்கு 10 சதவீதம்பேர்தான் ஆதரவு. இதிலிருந்து என்ன தெரிகிறது? மக்கள் எங்களை அங்கீகரிக்கத் தொடங்கி விட்டார்கள். அதைப் புரிந்து கொள்ள வேண்டியவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
ஒரு நடிகர் (விஜயகாந்த்) கட்சி ஆரம்பித்துள்ளார். எதையாவது பேச வேண்டும் என்பதற்காக என்னென்னவோ பேசி வருகிறார். வீடு தேடி ரேசன் பொருட்கள் வருமாம். என்ன பேச்சு இது? சினிமாவில் வசனம் பேசுவது போல இஷ்டத்திற்குப் பேசுகிறார்.
ரயிலில் போக வேண்டும் என்று டிக்கெட் எடுத்தால், ரயில் நம் வீட்டுக்கு வந்தா கூட்டிக் கொண்டு செல்லும்? நாம்தானே ரயில் நிலையம் போக வேண்டும். இது கூடத் தெரியாமல் உளறி வருகிறார் அந்த நடிகர்.
தேர்தல் களம் நெருங்கி விட்டது. இன்னும் ஒருவாரம்தான். அதற்குள் வைகோ தீர்மானமான முடிவை எடுப்பார். எங்களுக்கு எங்கு மரியாதை, அங்கீகாரம் கிடைக்கும் என்பது அவருக்குத் தெரியும். எங்களது உணர்வுகளை அவர் புறக்கணிக்க மாட்டார் என்றார் நாஞ்சில் சம்பத்.
உளவுத்துறைக்கு ஜெ. டோஸ்:
இப்போதைய நிலையில் கூடுதல் இடங்கள் கிடைத்தால் திமுகவை விட்டு விலக வேண்டிய அவசியமில்லை என்ற முடிவுக்கு வைகோ வந்திருப்பதாக மதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதுவரை அதிமுக எதிர்ப்பு என்ற நிலையும் வேண்டாம், திமுக ஆதரவு என்ற நிலையும் வேண்டாம் என்ற முடிவில் உள்ள வைகோ இரு கட்சிகளிடம் இருந்து சம தூரத்தில் விலகியிருந்து வருகிறார்.
இதனால் திமுகவுக்கு ஒரு பக்கம் டென்சன் என்றால், மறுபக்கம் வைகோவை இதுவரை அதிமுகவுக்கு இழுத்து வர முடியாமல் தவித்து வரும் உளவுத்துறையினரும், இந்த அசைன்மெண்ட் கொடுக்கப்பட்ட காவல்துறை உயர் அதிகாரிகளும், சில கட்சிப் பிரமுகர்களும் முதல்வர் ஜெயலலிதாவிடம் டோஸ் வாங்கி வருவது தனிக் கதை.
தட்ஸ் தமிழ்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>