Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கருக் கலைப்பு
#2
ம்ம்ம்..பாவம் அவர்.. Cry

கருக்கலைப்பு பற்றி வரும் போது தான் ஒரு விடயம் ஞாபகத்துக்கு வருகிறது.

வயிற்றில் உள்ள குழந்தைக்கு அழும் ஆற்றல் இருக்குமாம். அதுவும் கருக்கலைப்பு செய்கையில் அந்த குழந்தை (குழந் தை என்று அப்போது சொல்ல முடியாது foetus என்பார்கள்..) முடிந்த வரை போராடுமாம். முடியாத நேரம் வாயை திறந்து அழுமாம்.
இது நான் ஸ்கூலில் வீடியோ ஒன்றில் பார்த்தேன். வாய் திறந்து அழுவதும்...துடிப்பதும் அப்படியே ஸ்கானரில் காட்டினார்கள். ரொம்ப அழுகையாக வந்திச்சு. கிளாசில அழாதவங்க யாருமே இருக்கல..
கரு கலைப்பு என்றால் அதுவரை நான் பெரிதாக எண்ணவில்லை. அதனோட உண்மையான அர்த்தமும், அந்த சொல்லில் அடங்கி இருக்கும் கருத்தும் நேரில் அந்த foetus துடிப்பதை பார்த்தபோது தான் புரிந்தது.

கரு கலைப்பை பற்றி ஊமை கொடுத்த தகவலில் இருப்பது போல எவ்ளோ சட்டங்கள் இருக்கு. ஆனாலும்..எத்தனையோ பெண்கள் அதையும் தாண்டி சுலபமாக செய்து விட்டு இருக்கின்றார்கள்.
அதே வீடியோவில் அப்படி செய்த பெண்களோட பேட்டிகள் பார்த்தேன். அதில் இருவர் அதை ஒரு பொருட்டாக எடுக்காமல் கதைத்தார்கள்.
ஒருவர்..தனக்கு குழந்தையை பார்க்க டைம் இல்லாததால் கருகலைப்பை செய்தாராம்.
மற்றவர் முஸ்லீம் மதத்தை சேர்ந்தவர்..3 கரு கலைப்புக்களை செய்தாராம். அதை தான் 3 கொலை செய்ததாக சுலபமாக சொன்னார். இத்தனைக்கும் அவர் வீட்டினருக்கு தெரியாதென்றும்..அதில் குறிப்பிட்டார். (அவர் மணமாகாதவர்).

அது ஒரு ஒண்டரை மணி நேர வீடியோ..முழு பேட்டிகளும் என்னால் பார்க்க் முடியவில்லை..ஆனால் எனக்கு மனதிலே இன்றைக்கும் அந்த foetus - வருங்கால குழந்தை.. வயிற்றுக்குள்ள..வாயை திறந்து அழுதது கண் முன்னால் நிறகிறது..எந்த ஒரு குழந்தையை பார்க்கும் போதும் அந்த முகம் தெரியாத குழந்தை தான் கண்ணுக்குள்ள நிற்கிறது. பின்னால் என்னோட கிளாசில் சொன்னார்கள்..அதை நாங்கள் பார்க்காமல் விட்டிருக்கலாம் என்று..நானும் இப்போ அப்படித்தான் நினைக்கிறேன் <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
..
....
..!
Reply


Messages In This Thread
[No subject] - by ப்ரியசகி - 02-12-2006, 05:47 PM
[No subject] - by kuruvikal - 02-12-2006, 06:51 PM
[No subject] - by Vasampu - 02-12-2006, 07:08 PM
[No subject] - by RaMa - 02-13-2006, 06:38 AM
[No subject] - by aathipan - 02-13-2006, 07:37 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)