Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் மரபைப் பின்பற்றிய புதுமுறைத் திருமணம்
#12
மேகநாதன் Wrote:<span style='color:green'><b>தமிழ் மரபைப் பின்பற்றிய புதுமுறைத் திருமணம்
துர்க்கா மணிமண்டபத்தில் நேற்று நடந்தேறியது! </b>

தமிழ் மரபைப் பின்பற்றிய புதுமுறையி லான திருமணம் ஒன்று நேற்று நல்லூரில் சிறப்புற நடந்தேறியது.
பேராசிரியர் <b>அ.சண்முகதாஸ்</b>,கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ் தம்பதியர் தலைமையில் நல்லூர் துர்க்கா மணிமண்ட பத்தில் நேற்று முற்பகல் 9.30 மணியளவில் இந்தத் திருமணம் நடைபெற்றது.

தமிழ் முறையில் உள்ள பிரதான <b>சம்பிர தாயங்களை</b> உள்ளடக்கியதாக <b>வித்தியாச மான</b> முறையில் நடைபெற்ற இந்தத் திருமண நிகழ்வில் அந்தணர்களுடன் கூடிய சமயக் கிரியைகள் எவையும் இடம்பெறவில்லை. மணமகன், <b>தோழன்</b> ஆகியோர் தலைப்பாகை அணிந்துகொள்ளவில்லை.

இந்தத் திருமண நிகழ்வில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து திருக்குறள் ஓதுதல் ஆன்றோர்களால் திருக்குறளுக்கு பொருள் கூறல், தலைவரின் முன்னுரை, மணமகன் உறுதியுரை, மணமகள் உறுதியுரை என்பன இடம்பெற்றன.
தொடர்ந்து <b>மங்கல நாண்</b> அவையினரின் ஆசீர்வாதத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்தவேளை மங்கல வாழ்த்துப்பா ஓதுதல் இடம் பெற்றது.

பின்னர் திருமணத்தை தலைமை வகித்து ஒப்பேற்றிய பேராசிரியர் சண்முகதாஸ் தம்ப தியர் மாலையை எடுத்து மணமக்களுக்கு வழங்க மணமக்கள் மாறி, மாறி அணிந்து கொண்டனர்.

தொடர்ந்து <b>மங்கல நாண் மணமகனால் பூட்டப்பட்டது</b>.
அடுத்து தலைமை தாங்கும் தம்பதியினர், மணமக்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்க மணமக்கள் தலைமைக்குரியயோரையும், பெற்றோரையும் வணங்கி ஆசிபெற்றனர்.

தொடர்ந்து அனைவரும் மணமக்களுக்கு ஆசிவழங்கினர். சான்றோர்கள் வாழ்த்துரை களை வழங்கினர்.
இந்த நிகழ்வில் தமிழ்க் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள், பேராசிரியர் கள், விரிவுரையாளர்கள், வங்கியாளர்கள் உட்பட பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியதைக் காணமுடிந்தது.</span>

<i><b>தகவல் மூல்ம்- உதயன்</b></i>

இதில புதுசா ஒண்டும் காணேல...............எல்லாம் வழமையா நடக்கிறது தானே.............ஒண்டே ஒண்டு மாறியிருக்கு.....................சமஸ்கிருதத்தில சொல்லுற மந்திரத்துக்கு பதிலா திருக்குறளும் தமிழில வாழ்த்துப்பாவும் படிச்சிருக்கினம்............இத ஒரளவுக்கு முன்னேற்றம் எண்டு சொன்னாலும்..............இன்னும் விட்டு விடுதலையாகுறதுக்கு நிறையக் கிடக்கு................

மங்கல நாண் ஏற்றுறது எந்தக் காலத்தில தமிழற்ற அடையாளமானது???????? தமிழருக்கே தெரியல எது தன்ர எது மற்றவன்ர எண்டு........இதுக்குள்ள தமிழற்ற மரப பின்பற்றின திருமணமாம்...........புதுசு புதுமையெண்டு நல்லா கதைவிடுவினம்.................மொழியிலயே எது தமிழ்ச்சொல்லு எது அடுத்தமொழிச்சொல்லு எண்டு தெரியாம முழுசுகினம்...............நாங்க கதைக்கிறதில முழுசும் தமிழ் தானா எண்டு சந்தேகம் வேற..........இதுக்குள்ள அடுத்தவன்ர கலாச்சாரம் எங்கட மரபு எண்டு வேற குழப்பம்..............எது தமிழற்ற அடையாளம் எது தமிழற்ற பண்பாடு எண்டு ஆதாரத்தோட முன்வையுங்கோ..................அதுக்கு பிறகு அடையாளங்கள காப்பாத்துறத பற்றி யோசிப்பம்.....................
Reply


Messages In This Thread
[No subject] - by kuruvikal - 02-09-2006, 08:07 AM
[No subject] - by ஊமை - 02-09-2006, 08:20 AM
[No subject] - by kuruvikal - 02-09-2006, 08:31 AM
[No subject] - by putthan - 02-09-2006, 09:53 AM
[No subject] - by putthan - 02-09-2006, 10:29 AM
[No subject] - by மேகநாதன் - 02-12-2006, 06:47 AM
[No subject] - by MUGATHTHAR - 02-12-2006, 07:00 AM
[No subject] - by kuruvikal - 02-12-2006, 09:22 AM
[No subject] - by MUGATHTHAR - 02-12-2006, 11:10 AM
[No subject] - by kuruvikal - 02-12-2006, 03:49 PM
[No subject] - by poonai_kuddy - 02-12-2006, 05:09 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)