Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் மரபைப் பின்பற்றிய புதுமுறைத் திருமணம்
#7
<b>"கடவுளுக்குத் தமிழ் தெரியுமா?" என்ற கேள்வியைத் தமிழனே கேட்கிறான்!

--------------------------------------------------------------------------------
இதுதான் எம்மை வியப்பில் ஆழ்த்துகிறது
தமிழ்முறைத் திருமணவிழாவில் திரு. ஈழவேந்தன் உரை
"தமிழ் அன்னையின் இனிய உயிர் நிலையாம்" திருக்குறளை ஓதி தமிழ் மணம் கமழும் திருமணத்தை சென்ற சனிக்கிழமை 21.01.2006 இல் கொழும்பில் நடாத்தி வைத்த ஈழவேந்தன் அவர்கள்; கவலை தோய்ந்த நிலையில் மேற்குறித்த கேள்வியை எழுப்பியுள்ளார். "வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவர் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் " என்ற வள்ளுவர் வாய்மொழியையும் மற்றைய குறட்பாக்களையும் மேற்கோள்காட்டி உரை நிகழ்த்தினார்.


சென்ற சனிக்கிழமை கணனிப்பொறியியலாளர் நளின் அவர்களுக்கும் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைப் பட்டதாரி தனுஜா அவர்களுக்கும் திருக்குறள் ஓதி தமிழ்மணம் கமழும் திருமணத்தை மிக்க சிறப்புடன் ஈழவேந்தன் நடாத்தி வைத்தாக். இத் திருமணத்தில் நூற்றுக்கணக்கில் தமிழ் அறிஞர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இவ்விழாவில் கல்வி உதவி இயக்குநர் சிவநிர்தானந்த அவர்களும் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். ஈழவேந்தன் தன் தலைமை உரையில் புரட்சி பூக்கின்ற நிலையில் திருக்குறள் ஓதி வழிபடும் தமிழ் மணம் கமழும் இத்;திருமணத்திற்கு தலைமை தாங்கி உரையை நிகழ்த்துவது தமக்குப்; பெருமிதத்தையும் பேருவகையையும் தருகின்றது என்று குறிப்பிட்ட அவர் 1962 ஆம் ஆண்டிலேயே தந்தை செல்வாவின் தலைமையில் தனது திருமணம் தமிழில் நடைபெற்றது என்று குறிப்பிட்ட அவர் பின்பு 1986ல் தனது மகள் யாழினியின் திருமணம் தமிழகத்தில் திருமுறைகள் ஓதி கலைஞர் தலைமையில் பேராசிரியர் அன்பழகன் முன்னிலையில் சென்னை பல்கலைக்கழக சைவசித்தாந்தத் துறைத்தலைவர் திரு.இரத்தினசபாபதி அவர்கள் நடாத்திவைத்தார்;. இவ்விழாவில் பழநெடுமாறன்ää வைகோää வீரமணிää தமிழ்க்குடிமகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.



எனினும் நீண்ட கால இடைவெளிக்குப் பின் 2006 இல் நான் பெறாத செல்வங்கள் நளின் தனுஜா அவர்களுடைய திருமணம் பல அறிஞர் முன்னிலையில் தமிழில் இங்கு சிறப்பாக நடைபெறுவது காலத்தின் கருத்தோட்ட வளர்ச்சியை எடுத்துக் காட்டுகிறது. மணமக்கள் இருவரும் வௌ;வேறு மதத்தைச் சார்ந்தவர்கள். ஆனால் மொழி பண்பாடு நாகரிகம் வாழ்வியல் முறை ஆகியவை அவர்களை இணைத்துள்ளது. ஈழவேந்தன் அவர்கள் தன் உரையில்; சங்ககாலமää; சங்கமருவிய காலம் ஆகிய காலப்பகுதிகளில் தமிழில் வழிபாடும் தமிழ்த் திருமணங்களும் நடைபெற்றதற்குச் சான்றுகள் உண்டு. பின்பு களப்பிரர் மற்றும் பல்லவர் காலத்தில் வீழ்ச்சியுற்ற தமிழன் வாழ்வு "தமிழால் ஞாலம் அளந்த ஞானசம்பந்தராலும் " "தமிழோடு இசை பாடிய அப்பராலும் " தமிழ் மீண்டும் தலைதூக்கியது. பின்பு "அர்ச்சனை" பாட்டே ஆகும்ää ஆதலால் நம்மை மண்மேல் சொற்றமிழில் பாடுக என்று 8 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆளுடைய நம்பிக்கு – சுந்தரருக்கு இறைவன் இட்ட கட்டளையை நினைவுபடுத்திய ஈழவேந்தன் அவர்கள் 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த செந்தமிழ் காப்பியம் தந்த சேக்கிழார் இதனை வலியுறித்திச் சென்றதையும் நினைவுபடுத்தனார். 12 நூற்றாண்டுகள் உருண்டோடிய நிலையில் தமிழ் வழிபாட்டினை 20 ஆம் நூற்றாண்டில் கலைஞர் சட்டமாக்க முனைந்தபோது அங்குள்ள பார்ப்பனீயம் நீதிமன்றம் ஏறித் தமிழ் வழிபாட்டினைத் தடுத்து வடமொழி வல்லாண்மை தலைதூக்க வழி வகுத்தது. எனினும் 21 ஆம் நூற்றாண்டில் தமிழ் மீண்டும் மறுமலர்ச்சி காண்கின்ற முறையில் தமிழ் வழிபாடும் தமிழ்த் திருமணங்களும் புத்துயிர் பெற்றிருப்பது வீழ்ந்த தமிழன் மீண்டும் எழுச்சி பெற்றதற்கு சான்றாக விளங்குகிறது. இந்நிலையிலும் கடவுளுக்குத் தமிழ் தெரியுமா? என்று தமிழன் கேட்பானாயின் தமிழ் தெரியாத கடவுளுக்குத் தமிழ் நாட்டிலும் சரி தமிழீழத்திலும் சரி இடமில்லை. 18 ஆயிரம் தமிழ் உயிர்களை களத்தில் இழந்துள்ள நாம்ää ஏறக்குறைய 70 ஆயிரம் உயிர்களை போரின் விளைவினால் இழந்துள்ள நாம் எப்படி எமக்கு உயிரூட்டும் தமிழை மறந்து வாழ்விழந்த வடமொழிக்கு வாழ்வு கொடுக்க முடியும்?



தமிழ் ஈழத்தைப் பொறுத்த வரையில் தமிழீழ விடுதலைப் புலிகள் நடாத்துவிக்கின்ற திருமணங்கள் தலைவர் பிரபாகரன் தலைமையில் அல்லது அவரை அடுத்த நிலைத்தலைவர்கள் தலைமையில் தமிழில் நஇபெறுகின்றது. புலிச்சின்னத்தோடு கணையாழிகள் மாற்றப்படுகின்றன. மலர் மாலைகளும் மணமக்களிடையே அணியப்படுகின்றன. வாழ்விலும் தாழ்விலும் நாம் இருவரும் ஒன்றுபட்டே வாழ்வோம் என மணமக்கள் தமிழில் எடுக்கின்ற உறுதிமொழி தமிழரிடையே காணப்படுகின்ற வந்தனைக்குரிய சிந்தனைப் புரட்சிக்கு எடுத்துக்காட்டாகும்.



ஈழத்தமிழ் மக்கள் விரைவில் அரசியல் விடுதலை பெறுவது உறுதி. அத்தோடு தமிழீழம் மலர்வதை எவரும் தடுக்க முடியாது. ஆனால் சமுதாயத்திலும் சமயத்திலும் பொருளியல் வாழ்விலும் புரட்சி பூத்தால்த்தான் எம் அரசியல் விடுதலை ஆக்கம் தரும். 2003 ஆம் ஆண்டு ஒக்தோபர் திங்கள் 12 ஆம் நாள் தலைவர் பிரபாகரனைச் சந்தித்து உரையாடிய போது அவர் சொல்லிய அரிய கருத்துக்களுள் ஒன்று "ஆரிய மாயையில் இருந்து தமிழன் விடுபட்டாற்றான் தமிழினத்திற்கு மீட்சியும் வாழ்வும் உண்டு " என்று அவர் கூறியதைத் தாம் இங்கு நினைவுபடுத்துவதாகக் கூறினார்.



இறுதியில்; மணமக்களை அவர் விளித்து ஆண்குழந்தையோ பெண்குழந்தையோ எமக்குக் கவலையில்லை ஆனால் "புலிக்குட்டிகளைப்" பெற்று எம் இனத்தின் வாழ்வுக்கும் வளத்திற்கு துணைநிற்க வேண்டும்” என்று அவர் கூறியபோது அவையோரிடம் இருந்து பெருங்கையொலி எழும்பியது

<i>[b]தகவல் மூலம்- சூரியன்.கொம்</b></i>
"
"
Reply


Messages In This Thread
[No subject] - by kuruvikal - 02-09-2006, 08:07 AM
[No subject] - by ஊமை - 02-09-2006, 08:20 AM
[No subject] - by kuruvikal - 02-09-2006, 08:31 AM
[No subject] - by putthan - 02-09-2006, 09:53 AM
[No subject] - by putthan - 02-09-2006, 10:29 AM
[No subject] - by மேகநாதன் - 02-12-2006, 06:47 AM
[No subject] - by MUGATHTHAR - 02-12-2006, 07:00 AM
[No subject] - by kuruvikal - 02-12-2006, 09:22 AM
[No subject] - by MUGATHTHAR - 02-12-2006, 11:10 AM
[No subject] - by kuruvikal - 02-12-2006, 03:49 PM
[No subject] - by poonai_kuddy - 02-12-2006, 05:09 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)