Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சிறிலங்கா - ஈரான் இராசதந்திர உறவு சிக்கலடைகிறது
#1
<span style='color:brown'><b>சிறிலங்காவின் நிலைப்பாடு: ஈரான் கடும் அதிருப்தி </b>

[ஒஸ்ரிய தலைநகர் வியன்னாவில் நடைபெற்ற சர்வதேச அணுசக்தி சபையின் கூட்டத்தில் சிறிலங்காவுக்கு எதிராக வாக்களித்திருப்பதில் ஈரான் கடுமையாக அதிருப்தியடைந்துள்ளது.


தமது அதிருப்தியை கொழும்பில் உள்ள தூதரகத்தின் மூலம் சிறிலங்கா அரசாங்கத்துக்கும் தெரியப்படுத்தியுள்ளது.

வியன்னா மாநாட்டில் இந்தியா, சிறிலங்கா உள்ளிட்ட 27 நாடுகள் அமெரிக்க அணியில் நின்று ஈரானுக்கு எதிராக வாக்களித்தன. கியூபா, சிரியா, வெனிசூலா ஆகிய நாடுகள் ஈரானை ஆதரித்தன. தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட 5 ஆப்பிரிக்க நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த சிறிலங்கா வெளிவிவகார அமைச்சுப் பேச்சாளர், ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் கவனத்துக்குத்தான் இந்த விவகாரம் கொண்டு செல்லப்பட்டுள்ளதே தவிர ஈரான் மீதான தடைக்கான தீர்மானம் இது அல்ல என்று விளக்கம் அளித்தார்.

சிறிலங்காவுக்கு கடந்த ஆண்டு 150 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியை ஈரான் வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் பிரதிநிதி நிக்கலஸ் பேர்ன்சின் அண்மைய சிறிலங்கா பயணத்தின் போது அமெரிக்க ஆதரவு நிலைப்பாடு மேற்கொள்ள அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும் இந்த நிலைப்பாட்டை மேற்கொள்வதற்காக பாரிய கடனுதவிகளை அளிக்க முன்வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. நிக்கலஸ் பேர்ன்சும் கொழும்பு ஊடகவியலாளர் மாநாட்டில் சிறிலங்காவுக்கான கடனுதவித் திட்டங்கள் மற்றும் இராணுவ உதவிகள் பற்றி அறிவித்ததையும் கொழும்பு அரசியல் நோக்கர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

அதற்கு முன்னதாக அமெரிக்கா சென்ற மங்கள சமரவீர, அந்நாட்டு அமைச்சர் கொண்டலீசா றைசுடனான சந்திப்பின் போதும் அமெரிக்கா தரப்பில் இத்தகைய அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் ஈரானை விட அமெரிக்கா கூடுதலான கடனுதவி மற்றும் இராணுவ உதவி அளிக்க முன்வந்தமையால்தான் அமெரிக்க அணிக்கு சிறிலங்கா தாவியது என்றும் கொழும்பு கொள்கை வகுப்பாளர்கள் சிலர் கூறுகின்றனர்.</span>

<i><b>தகவல் மூலம் - புதினம்.கொம்</b></i>
"
"
Reply


Messages In This Thread
சிறிலங்கா - ஈரான் இராசதந்திர உறவு சிக்கலடைகிறது - by மேகநாதன் - 02-12-2006, 06:19 AM
[No subject] - by மேகநாதன் - 02-12-2006, 06:21 AM
[No subject] - by I.V.Sasi - 02-12-2006, 01:26 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)