Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
குமாரபுரம் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவு கூரல்
#1
[size=18]<b>குமாரபுரம் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவு கூரல் </b>

திருகோணமலை குமாரபுரம் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவு கூரல் நிகழ்வு நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.


சிறிலங்கா இராணுவத்தினரால் 1996 ஆம் ஆண்டு பெப்ரவரி 11 ஆம் நாளன்று குழந்தைகள், அப்பாவி பொதுமக்கள் உட்பட 26 பேர் கிளிவெட்டி பகுதியின் குமாரபுரத்தில் படுகொலை செய்யப்பட்டனர். இதில் 30 பேர் படுகாயமடைந்தனர். 2 தமிழ்ப் பெண்கள் படையினர் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர்.

குமாரபுரம் படுகொலை நினைவு கூரல் நிகழ்வு குமாரபுரம் கிராம அபிவிருத்தி சங்கத்தில் சனிக்கிழமை மாலை நடைபெற்றது.

சிறிலங்கா இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட 26 பேரின் புகைப்படங்களும் நிகழ்வில் வைக்கப்பட்டு இருந்தது.

கிராம மக்கள் சுடரேற்றி மலர் வணக்கம் செலுத்தினர்.

குமாரபுரம் கிருஸ்ணன் ஆலயத்தில் படுகொலை செய்யப்பட்டோர் நினைவாக சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. அதன்பின்னர் குமாரபுரம் கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர் எஸ். ஜேசுதாசன் தலைமையில் பொதுக் கூட்டம் நடைபெற்றது.

14 குழந்தைகளை சிறிலங்கா இராணுவம் படுகொலை செய்தது. 5 வயதுக்குக் குறைவான 3 குழந்தைகள்; 5 முதல் 10 வயதுக்குட்பட்ட 3 பேர், 11 முதல் 20 வயதுக்குட்பட்ட 8 பேர், 21 முதல் 30 வயதுக்குட்பட்ட 6 பேர், 31 முதல் 40 வயதுக்குட்பட்ட இருவர் மற்றும் 50 வயதுக்கு மேற்பட்ட இருவர் என்று இராணுவத்தினர் வெறியாடிக் கொன்றனர்.

இந்தப் படுகொலை தொடர்பாக 9 படையினர் கைது செய்யப்பட்டனர். 10 ஆண்டுகளாகியும் திருகோணமலை நீதிமன்றில் இந்த வழக்கு விசாரணைக்கு காத்திருக்கிறது.

இந்தப் படுகொலை தொடர்பான சாட்சியங்களும் படுகொலைக்கான ஆயுதங்களும் கடந்த ஆண்டு கொழும்பு இரசாயன பகுப்பாய்வுக் கூடத்தில் நடந்த தீ விபத்தில் எரிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

<i><b>தகவல் மூலம்- புதினம்.கொம்</b></i>
"
"
Reply


Messages In This Thread
குமாரபுரம் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவு கூரல் - by மேகநாதன் - 02-12-2006, 06:04 AM
[No subject] - by I.V.Sasi - 02-12-2006, 01:36 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)