02-12-2006, 02:20 AM
Shankarlaal Wrote:அது சரி கேட்கிறேனே என்று பிழையாக நினைக்கவேண்டாம். இப்ப மக்கள் எல்லாரும் தமிழ் ஈழவங்கியில் பணத்தை வைப்பு செய்கிறார்கள். நல்லது. வரவேற்கிறேன். நாளைக்கு சில வேளைகளில் கள நிலவரத்தில் மாற்றம் ஏற்பட்டு அது ஒரு பாரிய யுத்தமாக வெடித்து எதிரிகளின் வான்படை தாக்குதலால் இந்த வங்கிகளுக்கு ஒரு அழிவு ஏற்படும் பட்சத்தில் இந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் வைப்பில் இட்ட பணத்தின் முடிவு என்ன?
உலகிலேயே காவல் இல்லாத வைப்பகம் தமிழீழ வைப்பகம்தானாம்..... அங்கு மக்கள் வைப்பில் இடுவது பணத்தை மட்டும் அல்ல தங்களின் எதிர்கால கனவுடன் கூடிய நம்பிக்கையையும்தான். ஆகவே கவலை வேண்டாம்....!
அதைவிட தமிழீழ வைப்பகம் ஒண்றும் இரும்புப் பெட்டியில் பணத்தைப் பாதுகாக்கும் சேமிப்புக் கிடங்கு கிடையாது...! பலவளிகளில் பாவிக்கப்படும் அந்தப்பணத்தின் வரும்படிதான் உங்களுக்கு வட்டியாக கிடைக்கிறது.......... ! ஆகவே பணம் வங்கியில்(கட்டிடத்தில்) இருக்கும் எண்ற கவலைவேண்டாம்.....!
::

