02-11-2006, 11:54 PM
மன்னாரில் வெடிப்பொருட்களை ஏற்றிவந்த படகு வெடித்துள்ளதாக கடற்படையினர் கூறுகின்றனர்.
<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2006/02/20060211165536lankanavyboat203.jpg' border='0' alt='user posted image'>
இலங்கையின் வடமேற்கே மன்னார் கடற்பரப்பில் வெடிபொருட்களை ஏற்றிவந்த மீன்பிடிப்படகு ஒன்று வெடித்துச் சிதறியதாக இலங்கை படையினர் தெரிவித்துள்ளனர்.
இரணைதீவுக்கும், தலைமன்னாருக்கும் இடையே இரணைதீவுக்கு தென்மேற்காக 8 கடல்மைல் தொலைவில் இந்தச் சம்பவம் நடந்ததாகவும், வெடிபொருட்களை ஏற்றிவந்த பயங்கரவாதிகளின் பன்முகச் செயற்திறன்கொண்ட படகு ஒன்றே இவ்வாறு வெடித்ததாகவும் இலங்கை இராணுவத்தின் பேச்சாளர் பிரிகேடியர்பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார்.
கடற்படையினர் அந்தப்படகை சோதனை செய்ய முற்பட்ட போது அந்தப்படகில் இருந்தவர்கள் தமது படகைத் தாமே வெடிக்கச் செய்ததாகவும் அவர் கூறினார்.
இந்தப் படகு வெடித்தபோது அதில் இருந்தவர்களுக்கு என்ன நடந்தது என்று தெரியாது என்றும், இந்தச் சம்பவத்தில் கடற்படைச் சிப்பாய் ஒருவர் காயமடைந்ததாகவும் இராணுவப் பேச்சாளர் கூறினார்.
BBC தமிழ்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>