02-11-2006, 12:18 PM
கொழும்பில் கடத்தப்பட்ட தமிழ் வணிகர் விடுதலை!
Written by Paandiyan - Saturday, 11 February 2006 14:36
ஸ்ரீலங்கா தலைநகர் கொழும்பின் வெள்ளவத்தைப் பகுதியில் வைத்து கடந்த புதன்கிழமை இரவு அடையாளம் தெரியாத அயுதக்கும்பலினால் கடத்தப்பட்ட பிரபல தமிழ் வணிகர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெள்ளவத்தை அலெக்ஸ்சாண்ரா வீதியில் வைத்து கடந்த புதன்கிழமை இரவு வெஸ்ரன் நகைக் கடையின் உரிமையாளராகி ஆனந்தன் சிவா எண்மர் அடங்கிய அடையாளம் தெரியாத ஆயுதக்கும்பலினால் கடத்தப்பட்டிருந்தார்.
இவரை விடுவிப்பதற்கு 20 மில்லியன் ரூபா தரப்படவேண்டுமென கடத்தல்காரர்களால் கேட்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த வணிகர் விடுதலையாகியுள்ளார். இவர் தற்போது மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால் என்ன காரணத்திற்காக இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது தொடர்பான விபரங்கள் வெளியாகவில்லை.
சங்கதி