02-11-2006, 11:00 AM
Mathan Wrote:எவை "நல்ல" பதிவுகள் என்று குறிப்பிட விரும்பவில்லை. ஓவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பார்வை தானே. நான் நல்ல பதிவு என குறிப்பிடுவது உங்களுக்கு தவறாக படலாம் அது இன்னொரு விவாதத்திற்கு வழிவகுத்துவிடும்.
சிலரின் ஏடாகூடமான புதிய வலைப்பதிவுகள் மற்றும் பின்னூட்டங்கள் அங்கும் சுதந்திரம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அது தவிர வலைப்பதிவுகளை தொகுக்கும் தமிழ்மணத்தின் கொள்கைகளும் சுதந்திரத்தை மட்டுப்படுத்துகின்றது. இது கருத்துகளம், வலைப்பதிவு உட்பட அனைத்து இடங்களிலும் நடப்பது தான்.
சரி நல்லதை விடுங்கள்..!
தமிழ்மண நிர்வாகத்தை குறை சொல்ல முடியாது..காரணம்..நீங்கள் சொல்லுற பின்னூட்டல்களில் அதிகம் அநாகரிகமாக எழுதுபவர்கள் ஈழத்தமிழர்கள்..! உதாரணத்துக்கு சொல்ல வேண்டுமா...???! வேண்டாம்..! இன்னும் சிலர் ஈமெயில் ஐடிகள் மூலம் தங்களுக்குள் அறிமுகம் ஆகிக்கொண்டு.. அறிமுகமானவர்கள்..தங்கள் பதிவுக்கு பின்னூட்டம் விட்டுவிட்டவர்கள் என்று தேடித்தேடி பின்னூட்டம் என்று என்னவோ விடுகினம்..உருப்படியா நடப்பவை நடந்திருந்தா தமிழ்மணமும் ஒத்துழைச்சிருக்கும்..! நிறைய முதிர்ச்சியற்ற தன்மை தமிழில் எழுதுபவர்களிடம் உண்டு...! உதாரணத்துக்கு ஒரு பெண் பெயரில் ஈமெயில் ஐடி வச்சிருந்தால் அதுக்கு வரும் ஈமெயில்களின் எண்ணிக்கை எம் எஸ் என் சட் இணைப்புக்கான உத்தரவாதம் கேட்டு வரும் அழைப்புக்கள் அதிகம்..இது எழுத்தாளர்களுக்கான திறமையை வெளிக்கொணரும் ஆரோக்கியமான சூழலுக்கான நல்ல பண்பாகத் தென்படவில்லை..! :wink:
hock:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>


