02-11-2006, 10:39 AM
Mathan Wrote:தமிழர் என்பதற்காக குற்றங்களை மறைக்க வேண்டும் என்று சொல்லவில்லை. ஆனால் தமிழர்கள் தான் காரணமோ என்பது ஒட்டுமொத்தமாக நாம் தான் என்பது போல் அதிகப்படியாக பட்டது அதனாலேயே சொன்னேன்.
வெள்ளை இனத்தவரோடு மட்டுமேயும் பின்பு கலப்பு சூழலிலும் வாழ்ந்த போது நீங்கள் குறிப்பிட்ட வேறுபாட்டை நானும் உணர்ந்திருக்கின்றேன். அதற்கு அவர்கள் வளர்ந்த பின்ணணியும் நாம் (மற்றய இனத்தவர்கள்) வளர்ந்த பின்ணணியும் வேறு வேறு என்பதே காரணமாக இருக்கலாம். மற்றது நீங்கள் குறிப்பிட்டது போல "வெள்ளையள் மனசுக்க என்ன இருந்தாலும் வெளியில் நாகரிகமாக அனுதாபத்தோடு அக்கறையோடு <b>நடப்பார்கள்..!</b>" என்பதை விட பல சமயங்களில் <b>நடிப்பார்கள்</b> என்றும் சொல்லலாம். அவர்கள் மனதில் வைத்திருப்பதை வெளியே வெளிக்காட்டாமல் இருப்பதும் நம்மவர்கள் வெளியே வெளிகாட்டுவதும் உண்மை தான்.
மற்றது லண்டனில் பாதிப்பு அதிகமாக இருப்பதற்கு காரணம் பெருமளவிலான மக்கள் ஓரிடத்தில் அதுவும் தலைநகரில் குவிந்திருப்பது தான்.
நடிப்பு என்று எல்லாச் சந்தர்ப்பத்திலும் சொல்ல முடியாது..அநேகம் அக்கறையை வெளிப்படுத்துவதையும் அவதானிக்கலாம்..! எம்மவர்கள் அப்படியல்ல..ஏதோ வேலை செய்தம் மணித்தியாலம் நிறைச்சம் காசு உழைச்சம் வீட்ட போனம்...இப்படித்தான் நடக்கினம்..தாங்கள் வேலை செய்யும் சூழல், தங்கள் வேலையால் வழங்கப்படும் சேவையை எப்படி நிறைவாக வழங்கிறது என்பது பற்றி சிறிதும் அக்கறையோடு சிந்திப்பவர்களாக இல்லை..! வெறும் சுயநலம் பிடித்தவர்கள்..!
உம்...அதுதான் பல்லின சனத்தொகை கூடிய லண்டன் தரும் பாதிப்பே அதிகம் என்றமே..! அதனால் நேரடியாக பாதிக்கப்படுவது லண்டனிலும் பிற சிறிய நகரங்களே..! அங்குதான் பல வயோதிபர்கள் வாழ்கிறார்கள்..! நிதிப்பற்றாக்குறை வருவாய் இல்லையென்று பிற சிறிய நகரங்களில் உள்ள பல துணைத்தபாலங்கள் மூடப்பட்டன..அதனால் பாதிக்கப்பட்டது என்னவோ வயோதிபர்கள் தான்..அவர்கள் நீண்ட தூரம் பயணிக்க வேண்டி இருந்தது..தபாலகங்களை முடியதால்..! இதையிட்டு பலர் தங்கள் விசனத்தை வெளியிட்டதையும் கண்டிருக்கின்றோம்..!
தமிழர்களும் இந்தப் பாதிப்புக்களுக்கு உடந்தை என்பதில் எமக்கு மாற்றுக் கருத்தில்லை..! தமிழர்களும்...தமிழர்கள் மட்டும் என்றல்ல..! கவனியுங்கோ..! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

