02-11-2006, 10:14 AM
Mathan Wrote:தமிழர்கள் றோயல் மெயிலில் வேலை செய்வது தான் காரணமோ என்று கூறுவது சரியல்ல. இது நம்மை நாமே தாழ்த்தி கொள்வது போல. றோயல் மெயில் பல இன சமுதாயத்தினர் வேலை செய்வதுடன் அனைத்து இன பிரிவுகளிலும் தவறு செய்யும் ஓரிருவர் இருக்கலாம். அது தவிர லண்டன் ரோயல் மெயில் என்றில்லாமல் பொதுவாக நாடு முழுவதும் ரோயல் மெயில் சேவை சிறப்பாக இல்லை என்று விமர்சிக்கப்படுகின்றது.
நம்மை நாமே தாழ்த்திறதில்லை... நம்மாக்கள் அப்படித்தான் பிகேவ் பண்ணினம்..! எங்களுக்கு இரண்டு இடத்திலும் பரீட்சையம் இருக்குது..வெள்ளையளோட வாழ்ந்த போது அவர்கள் நடந்து கொண்ட முறைக்கும் தமிழர்கள் உள்ளடங்க ஆசியர்கள் நடந்து கொள்ளும் முறைக்கும் இடையில் பாரிய வேறுபாடு உண்டு..! இவர்கள் தொழில் இடத்தில் கூட வேண்டா வெறுப்பாகத்தான் நடந்து கொள்வார்கள்..! வெள்ளையள் மனசுக்க என்ன இருந்தாலும் வெளியில் நாகரிகமாக அனுதாபத்தோடு அக்கறையோடு நடப்பார்கள்..! அதுமட்டுமில்லாமல் ஊழல் லஞ்சம் சுருட்டலில் தமிழர்கள் பங்கெடுத்திருப்பது லண்டனில் றோயல் மெஜில் உட்பட பல இடங்களில் அறியக் கூடியதாக இருக்கிறது..! நாங்கள் தமிழர்கள் என்பதற்காக தமிழர்களின் குற்றங்களை மறைக்க முயலப் போவதில்லை..! நாடு முழுவதும் என்றாலும் பாதிப்பு என்னவோ லண்டனில் அதிகமாகவே இருக்கும்..! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

