Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் வலைப்பதிவுகளில் காலம் தள்ளுவது எப்படி?
#1
தமிழ் வலைப்பதிவுகளில் காலம் தள்ளுவது எப்படி?

தமிழ்மணத்தில் நிகழும் குடுமிப்பிடி சண்டைகளை பார்த்து மண்டை குழம்பியதாலும் எனக்கும் சமீபத்தில் இப்படி ஒரு அனுபவம் எற்பட்டதாலும் சர்வைவல் டெக்னிக் கொடுக்கச் சொல்லி என் நண்பன் ஆழம் அருமைநாயகத்தை வேண்டினேன். அவன் பல வருடங்களாக தமிழ்வலைப்பதிவுகளை தொடர்ந்து படித்து வருபவன்தான்.

.எங்கள் உரையாடலை அப்படியே கொடுத்துள்ளேன்.

"முதல்ல உன்கிட்ட எத்தனை பிளாக்கர் அக்கவுண்ட் இருக்கு?" என்றான்.

"ஏன்? ஒண்ணுதான்" என்றேன்.

"போடா லூசு, குறைஞ்சது நாலு அக்கவுண்டாவது வேண்டும்"

"எதுக்கு?"

"ஒரு மெயின் அக்கவுண்ட் வையி..அதுல ஆழமா அறிவுபூர்வமான கட்டுரைகளை எழுதனும்..படிக்கிறவங்க நீ எவ்ளோ பெரிய அறிவாளின்னு நெனைக்கற அளவிற்கு அதில எழுதனும்"

"ம்"

"அப்புறம் பின்னூட்டம் இடுறதுக்கு தனி அக்கவுண்ட்"

"எதுக்கு, அதே பேர்ல பின்னூட்டம் இடலாமே"

"சேச்சே,சில நேரம் தரம் தாழ்ந்து எழுத வேண்டி இருக்கும்..அதுக்கு அதே பேரை யூஸ் பண்ணா உன் இமேஜ் என்னாவது? "

"ஓ"

"ஆமா,ஆனா இந்த பேரை யூஸ் பண்ணும்போது ஜாக்கிரதையா இருக்கணும்.சில பேரு ஐ.பி. செக் வைப்பான்.அதுக்காக முடிஞ்ச அளவு உங்கள் பதிவுலேயே நீங்களே பின்னூட்டம் இட்டு யாரையாவது கிண்டல் பண்ணலாம்."

"சரி மூன்றாவது அக்கவுண்ட் எதுக்கு"

"ஆழமாகவும் அகலமாகவும் எழுதி போரடிச்சா விஜய் சாரும் நானும், நயன்தாரா என் தங்கம் என்றெல்லாம் எழுதலாம்.பர்சனாலிட்டி கிலாஷ் பிரச்சினையை தவிர்க்கலாம்"

"சரி நாலாவது அக்கவுண்ட்"

"அதை போலி டோண்டு உங்க பேரில வெச்சிருப்பான்.அதை கண்டுக்காதீங்க"

"அட... இதுவெல்லாம் எழுதறவங்களுக்கு...எங்களை மாதிரி ஆட்களுக்கு என்ன ஐடியா?"

"குறும்பும் பண்ணணும்.ஆனா எல்லார்க்கும் நல்ல பிள்ளைன்னு பேர் எடுக்கணுமா?"

"..."

"சென்சிட்டிவ்வான பிரச்சினைகளில் எனக்கு கருத்தே இல்லைனு நம்ப பதிவுல போட்டுட்டு யாராவது குறும்பா கருத்து சொல்லக்கூடியவங்க பதிவுல போய் சூப்பர்,எல்லா கருத்தையும் ஏற்க முடியாவிட்டாலும் உங்கள் பதிவை போற்றுகிறேன் என்றெல்லாம் புகழ வேண்டும்.உடனே நீங்க எந்த கருத்தை ஏற்கறீங்க எதை மறுக்கறீங்கன்னு புரியாமல் மக்கள் குழம்புவாங்கள்ள"

",,,,,"

"இதுல ஒரு வம்பு என்னன்னா உங்க ஆளு எக்கச்சக்கமா மாட்டிட்டார்னா நீங்க அங்க பின்னூட்ட சப்போர்ட் கொடுக்க முடியாது.ஆனா உங்க மறைமுக ஆதரவை தெரிவிக்க நீங்க உங்க பதிவுல கம்பு சுத்தியாகணும்.இது கொஞ்சம் கஷ்டம்.தெறமை வேணும்"

தன் கட்டிலுக்கு அடியில் இருந்து "நெட்ஓர்க்கிங் ஃபண்டமெண்டல்ஸ்", "உள்குத்து மேட் ஈஸீ",ஆகிய புத்தகங்களை எடுத்து கொடுத்தான் அருமைநாயகம். இதற்கே தலைசுத்திபோன நான் அப்புறம் வருகிறேன் என்று கூறி நடையை கட்டினேன்.

நன்றி - முத்து / ஒரு தமிழனின் பார்வை
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply


[-]
Quick Reply
Message
Type your reply to this message here.

Image Verification
Please enter the text contained within the image into the text box below it. This process is used to prevent automated spam bots.
Image Verification
(case insensitive)

Messages In This Thread
தமிழ் வலைப்பதிவுகளில் காலம் தள்ளுவது எப்படி? - by Mathan - 02-11-2006, 09:50 AM
[No subject] - by Mathan - 02-11-2006, 09:53 AM
[No subject] - by kuruvikal - 02-11-2006, 09:55 AM
[No subject] - by kuruvikal - 02-11-2006, 09:57 AM
[No subject] - by Mathan - 02-11-2006, 10:16 AM
[No subject] - by kuruvikal - 02-11-2006, 10:25 AM
[No subject] - by Mathan - 02-11-2006, 10:42 AM
[No subject] - by kuruvikal - 02-11-2006, 11:00 AM
[No subject] - by Shankarlaal - 02-11-2006, 11:28 AM
[No subject] - by Mathan - 02-11-2006, 11:33 AM
[No subject] - by kuruvikal - 02-11-2006, 11:48 AM
[No subject] - by Niththila - 02-11-2006, 01:20 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)