Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கொழும்பில் தமிழ் வர்த்தகர் கூலிக்கும்பல்களால் கடத்தல்!!
#6
கொழும்பு வர்த்தகரை விடுவிக்க ரூ. 20 மில்லியன் பிணைத் தொகை கேட்கும் கடத்தல்காரர்கள்!

கொழும்பில் கடத்தப்பட்ட தமிழ் வர்த்தகரான வடிவேல் ஆனந்தனை (வயது 54) விடுதலை செய்ய ரூ. 20 மில்லியன் பிணைத் தொகையாகத் தர வேண்டும் என்று கடத்தல்காரர்கள் மிரட்டியுள்ளனர்.


கொழும்பு வெள்ளவத்தை அலெக்சாண்டரா பிளேசிலுள்ள அவரின் வீட்டிற்கு அருகில் கடந்த புதன்கிழமை நள்ளிரவு நகைக்கடை வர்த்தகரான வடிவேல் ஆனந்தன் கடத்தப்பட்டார். இந்த நிலையில் வடிவேல் ஆனந்தனின் குடும்பத்துக்கு தொலைபேசியில் 2 நிமிடம் பேசிய கடத்தல் குழுவைச் சேர்ந்த ஒருவர் ரூ 20 மில்லியன் பிணைத் தொகை கேட்டுள்ளார்.

இது தொடர்பில் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கக் கூடாது என்றும் எச்சரித்துள்ளார்.

இச்சம்பவத்தை நேரில் பார்த்த வடிவேல் ஆனந்தனின் சகோதரர் வடிவேல் அருள் கூறுகையில்இ இரு வான்களில் வந்த 4 பேர் கொண்ட குழுவினரால் தனது சகோதரர் கடத்தப்பட்டதாகத் தெரிவித்தார்.

முதலாவது வானில் வந்தவர்கள் வடிவேல் ஆனந்தனின் அடையாள அட்டையை சோதித்தனர் என்றும் 2 ஆவது வானில் வந்தவர்கள் அவரை வானிற்குள் இழுத்து போட்டுச் சென்றனர் என்றும் அவர் மேலும் கூறினார்.

இது தொடர்பாக உடனடியாக வெள்ளவத்தை காவல் நிலையத்தில் வடிவேல் அருள் முறைப்பாடு செய்தார்.

புதினம்
Reply


Messages In This Thread
[No subject] - by ஜெயதேவன் - 02-09-2006, 12:19 AM
[No subject] - by ஜெயதேவன் - 02-09-2006, 12:28 AM
[No subject] - by Nellaiyan - 02-09-2006, 01:44 PM
[No subject] - by ஜெயதேவன் - 02-10-2006, 12:03 PM
[No subject] - by நர்மதா - 02-10-2006, 05:46 PM
[No subject] - by I.V.Sasi - 02-10-2006, 07:17 PM
[No subject] - by Shankarlaal - 02-11-2006, 12:18 PM
[No subject] - by ஜெயதேவன் - 02-11-2006, 04:39 PM
[No subject] - by Shankarlaal - 02-11-2006, 04:47 PM
[No subject] - by jsrbavaan - 02-14-2006, 08:01 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)