Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஜெனீவாவில் பேச்சு ஸ்ரீலங்கா அரசுக்கு தற்கொலைக்கு ஈடானது
#1
ஜெனீவாவில் பேச்சு ஸ்ரீலங்கா அரசுக்கு தற்கொலைக்கு ஈடானது; - புலிகளுக்கு அதிர்ஷ்டம்

சமாதானப் பேச்சுகளை நடத்துவதற்குரிய நகரமாக சுவிற்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகர் தெரிந்தெடுக்கப்பட்டது விடுதலைப்புலிகள் அமைப்புக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாகும். ஆசியாவைச் சேர்ந்த நாடொன்றில் புலிகள் அமைப்புடனான சமாதானப் பேச்சுகளை நடத்தும் நிலைப்பாட்டையே ஸ்ரீலங்கா அரசு முதலில் கொண்டிருந்தது. இந்த நிலைப்பாட்டைக் கருத்தில் கொண்டே சமாதான நடவடிக்கைகளுக்கான சபையில் அங்கத்துவம் வகிக்கும் நாடுகளின் பிரதிநிதிகள் சமாதானப் பேச்சுகளை பிரிட்டனிலோ ஜப்பானிலோ அல்லது நோர்வேயிலோ நடத்துவதற்குச் சம்மதித்திருந்தனர். ஆயினும், தற்போது ஜெனீவாவில் பேச்சுகளை நடத்துவதற்கு ஸ்ரீலங்கா அரசு இணங்கியிருப்பது புலிகள் அமைப்பினருக்கு லொத்தர் சீட்டிழுப்பில் பரிசு கிடைத்த அதிர்ஷ்டம் போன்றதாகும். ஐக்கிய நாடுகள் சபையும் மற்றும் பல சர்வதேச அமைப்புகளும் அமைந்திருப்பதும் பல்வேறு சர்வதேச ஊடகங்களின் பிரதிநிதிகள் செயற்பட்டு வருவதுமான முக்கிய நகர் ஒன்றில் ஸ்ரீலங்கா தமிழர்களின் பிரச்சினைகளை வெளியிடுவதற்குச் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்திருப்பது ஸ்ரீலங்கா அரசு செய்துள்ள தற்கொலைக்கு ஈடானதும் மீண்டும் சரி செய்ய முடியாததுமான பாரிய தவறாகும். ஜெனீவாவை சமாதானப் பேச்சுகளை நடத்தத் தெரிவு செய்ததானது ஒஸ்லோ நகரில் சமாதானப் பேச்சுகளை நடத்தியதைக் காட்டிலும் பயங்கரமானதாகவே இருக்கப் போகிறது. இதன் மூலம் ஐக்கிய நாடுகள் சபையுடன் விடுதலைப்புலிகள் அமைப்பு நேரடியாகத் தொடர்புகளை வைக்கும் சந்தர்ப்பம் ஏற்படுவதுடன் சுவிற்சர்லாந்து அரசாங்கத்துடனும் உத்தியோகபுூர்வமாக விடுதலைப்புலிகள் அமைப்பு தொடர்பு கொள்ளும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் சுூழ்நிலை உண்டாகும். புலிகள் அமைப்பினரின் முக்கிய எதிர்பார்ப்பும் இதுவேயாகும்.


கடந்த 2002 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒஸ்லோவில் நிகழ்ந்த சமாதானப் பேச்சுகளுக்கான மாநாட்டில் புலிகள் அமைப்பின் பேச்சாளர் அன்ரன் பாலசிங்கம் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியைப் பற்றி பச்சைப் பொய் மூட்டையை அவிழ்த்திருந்தார். ஸ்ரீலங்கா அரசின் சமாதான பிரதிநிதிகள் சமாதானத்தை உத்தேசித்து பாலசிங்கத்தின் பேச்சுகளை பொறுத்துக் கொண்டனர். ஆயினும் இதன் விளைவாக ஸ்ரீலங்கா அரசைப் பற்றியும் சிங்களப் பெரும்பான்மை மக்கள் பற்றியும் சர்வதேச ரீதியில் தவறான அபிப்பிராயமே ஏற்படுத்தப்பட்டிருந்தது. இவ்வாறான சர்வதேச பாதிப்பு ஜெனீவா மூலமாகவும் ஏற்படுவதற்கு ஸ்ரீலங்கா அரசு இடம்கொடுத்திருப்பது மேலும் பயங்கரமானதாகும்.


-லங்காதீப விமர்சனப் பகுதி: 05.02.2006-
Reply


Messages In This Thread
ஜெனீவாவில் பேச்சு ஸ்ரீலங்கா அரசுக்கு தற்கொலைக்கு ஈடானது - by நர்மதா - 02-10-2006, 12:32 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)