02-10-2006, 07:40 AM
kuruvikal Wrote:உலகத்தில மனிசருக்கு எத்தினை பிரச்சனை இருக்கு..பட்டினியில எத்தினை இறக்குதுகள்..கோர விபத்தில எத்தினை தனிமையா விடுபடுகுதுகள்..எத்தனை சிறுவர்கள் தனிமையா வாடுதுகள்..அதுகளின்ர மன உணர்வுகள்..அதுகளின்ர கஸ்டங்கள்.. எதிர்காலம் பற்றி..கலாசார சமூகக் கலப்புகளால வாற விளைவுகள் பற்றி அவற்றை மனிதாபிமான ரீதியில் எப்படி அணுக வேண்டும் என்று எவராவது கதைல சொல்லுறியளா...கிடையாது..! ஆனா கதை எழுதிறதெண்டு போட்டு உதவாக் குடும்பங்களில அடுத்தவன் வீட்டுக்க மனிசன் மனிசிக்க என்ன நடக்குது எவன் எவளை விவாகரத்துப் பண்ணுறான் எப்படிப் பண்ணுறான்/ள்..எப்படி அடிக்கிறான் உதைக்கிறான் சித்திரவதை பண்ணுறான்..அவள் எப்படி அடுத்தவனோட பழகிறாள்...என்று ஆராயிறதே வேலையாப் போச்சு..! அதைக் கதையென்று ரசிக்க ஒரு கூட்டம்..அவர்கள் என்னத்தை இவற்றில இருந்து உள்வாங்கினம் எண்டது கூட கவலையளிக்கும் விடயமாகவே இருக்கிறது...இப்படிப் போனா உதுகள்..சமூகத்தில் மனிதாபிமானமற்ற இரக்கமற்ற அடுத்தவர்களை தயவோடு நோக்காத மனப் பான்மையையே வளர்க்கும்..அந்த வகையில் இவை ஒரு வகை வக்கிரத்தனத்தை வளர்ப்பனவாகவே அமைகின்றன..! மனிதாபிமான அணுகுமுறைகள் எவையும் குறிப்பிட்டு கூறும் அளவுக்கு சுட்டிக்காட்டப்படவில்லை..!
சாத்திரி ஏன் நீங்கள் அடுத்த குடும்பங்களைப் பற்றி ஆராயிறத்துக்கே அதிகம் முக்கியத்துவம் கொடுக்கிறீங்கள்..! ஆராயிறது முக்கியமில்ல..நீங்கள் சொல்ல வாற விடயம் பலதரப்பட்ட வாசகர்களையும் என்னென்ன வடிவத்தில் போய் சேர்கிறது என்பதையும் நோக்குங்கள்..! ஒன்று தெரியுமோ...குமுதம் இந்திய நாவல்கள் அதுஇதென்று முந்தி யாழில தடை செய்தது..அப்ப ஸ்கூலுக்கு வந்த இளம்பரிதியண்ணா சொன்னது... உப்படி குடும்பங்களில நடக்கிறதா எழுத்தாளர்களும் தேவையில்லாத தங்கள் கற்பனைகளை புகுத்தி எழுதிற வக்கிரத்தனத்தை வெளிக்காட்டும் கதைகள் வாறதும் தான் காரணம் என்றவர்..! நீங்கள் எழுதுபவை உண்மையா நடந்தவையின் பிரதிபலிப்பாகக் கூட இருக்கலாம்..ஆனா நீங்கள் கதை என்று எழுதி அதை சமூகத்துக்க விடேக்க அதன் சமூகத்தாக்கம் என்ன என்று சிந்திச்சுத்தானே விடுறீங்கள்...! அப்படின்னா சரி..ஏன்னா நாளைக்கு இவையே இன்னும் நாலு பேருக்கு உதாரணமாகாமல் இருக்க வேணும் எண்டதுக்காகத்தான்..! ஏன்னா நாங்கள் அறியாத பல குடும்ப அந்தரங்கங்களை இங்க வாசிக்க முடியுது...! சிலது சகிக்க முடியல்ல..! சிலது இப்படி உண்மைல நடக்குமா என்ற ஐயத்தை உண்டு பண்ணுது..! தயவுசெய்து சமூக ஒழுக்கத்துக்கு முன்னுரிமை அளித்து எழுதுங்கள்...! :evil: :twisted:
குருவிகள் நீங்கள் கூறுவது நல்ல கருத்து தான். ஆனால் உன்னை நீயே திருத்திக்கொள் சமுகம் தானகவே திருந்து என்று ஒரு பழமொழி உண்டு எல்லோ. நீங்கள் இணைத்த இக்கதைகளில் எங்கு சமூக ஒழுக்கத்துக்கு முன்னுரிமை அளித்து இருக்கின்றது. இதிலும் மற்றவர்களின் வாழ்க்கையை தானே ஏட்டிப் பார்த்திருக்கின்றார்கள். உங்களின் கதைபடி ஒரு அநாதை சிறுமியைப்பற்றி எழுதப்போனாலும் அவளின் குடும்பத்தை பற்றி கொஞ்சம் விபரித்து எழுதினால் தான் கதை நல்லாய் வரும். ஆகவே அவ்விடத்திலும் நாங்கள் பக்கத்து வீட்டை ஏட்டிப்பார்க்கும் நிலை தானே? நானும் சாத்திரியரரின் இக்கதையை ரசித்த கூட்டங்களில் ஒருத்தி என்றவகையில் இந்த கருத்தை எழுதுகின்றேன். உதராணத்திற்கு ஒரு கதை மற்றவர்களின் குடும்பங்களை ஏட்டிப்பார்க்கமால் எழுதிக்காட்டுங்கள். அதிலிருந்து மற்றவர்கள் தொடர்கிறார்களோ இல்லையோ நான் உங்கள் வழியில் தொடர்ந்து எழுதுகின்றேன்.
http://www.yarl.com/forum/viewtopic.php?t=8594
http://www.yarl.com/forum/viewtopic.php?t=6521


