02-09-2006, 08:23 PM
ப்ரியசகி Wrote:நான் மேலேயே..சொல்லி இருக்கின்றேன்..மதத்தை பிரித்து நான் பார்ப்பதற்கு இதை சொல்லவில்லை என்று...
நான் சொன்னது..நான் கடவுளாக கும்பிடும் கடவுளை இப்படி நகைச்சுவையாக..கவர்ச்சியாக ரோட்டில் ஓடுவதைப்போல ஒரு படத்தை பார்க்க எனக்கு சிரிப்பு வரவில்லை என்பது தான். இது கடவுளைப்பற்றியது..!
இதில் நான் ஆப்கானிஸ்தானிலோ வேறு நாட்டிலோ நடப்பதை சொல்லவில்லை..அதை நான் ஆமோதித்ததாகவும் நீங்கள் எடுப்பது பிழை..யாரோ செய்ததை என் தலையில் போடுகிறீர்களே... :roll: ஏன் எப்பவுமே..தவறான கண்ணோடு என்னை பார்ப்பது தான் உங்கள் பழக்கமா? :roll: :roll:
இல்லை உங்களை தவறான கண்ணோட்டடில் பார்ப்பதாகச் சொன்னேனா? நான் கேட்டது எமது நம்பிக்கைகளின் அடிப்படயில் மட்டுமே நாம் உலகைப் பார்கிறோம் என்று.இதில் நானும் அடக்கம்.அதில் இருந்து மீண்டு பிறப்பில் இருந்து ஊட்டப்பட்ட நம்பிக்கைகளுக்கு அப்பால் நான் சுயமாகச் சிந்திக்க முடியாதா என்ற கேள்வியையே கேட்கிறேன்?


