02-09-2006, 07:38 PM
35 சீட்: அதிமுக, திமுகவுக்கு வைகோ நிபந்தனை
தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியல், முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான வரும் 24ம் தேதியன்று வெளியிடப்படக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் சட்டசபை தேர்தலோ அல்லது நாடாளுமன்றத் தேர்தலோ ஜெயலலிதாதான் எதிலும் முன்னணியில் இருப்பார். தேர்தல் பணிகளைத் தொடங்குவதிலிருந்து தேர்தல் பிரசாரத்தை ஆரம்பிப்பது வரை அத்தனையிலும் ஜெயலலிதா படு வேகம் காட்டுவார்.
கடந்த சட்டசபைத் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலிலும் ஜெயலலிதாவே அனைவருக்கும் முன்பாக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். தேர்தல் பிரசாரத்தையும் எல்லோருக்கும் முன்பாக ஆரம்பித்தார்.
இந்த முறையும் அதுபோலவே நடைபெறும் எனத் தெரிகிறது. வருகிற 15ம் தேதி வரை போட்டியிட விரும்புவோரிடமிருந்து விண்ணப்பங்களை பெற்று வருகிறது அதிமுக தலைமை. இது முடிந்ததும் வேட்பாளர் பட்டியலை ஜெயலலிதா முடிவு செய்வார்.
இதைத் தொடர்ந்து திமுக கூட்டணியிலிருந்து யார் தங்களது கூட்டணிக்கு வரப் போவது என்று சில நாட்கள் வெயிட் பண்ணி விட்டு வரும் 24ம் தேதி தனது பிறந்த நாளன்று வேட்பாளர் பட்டியலை அவர் அறிவிப்பார் என அதிமுகவினர் எதிர்பார்க்கின்றனர்.
24ம் தேதிக்குப் பதில் அமாவாசை தினமான 26ம் தேதி பட்டியலை வெளியாகலாம் என சில அதிமுகவினர் கூறுகின்றனர்.
எப்படியிருப்பினும் திமுக கூட்டணிக் கட்சிகளின் தொகுதி எண்ணிக்கை குறித்த பட்டியல் மார்ச் 2ம் தேதி திருச்சி திமுக மாநில மாநாட்டில் அறிவிக்கப்படுவதற்கு முன்பாக அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு விடும் என்பதில் சந்தேகம் இல்லை.
இதற்கிடையே, மதிமுக மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் ஜெயலலிதாவுடன் கூட்டணி வைக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் வைகோவை எப்படியாவது, கூட்டணியில் தக்க வைக்க கருணாநிதி முயன்று வருகிறார்.
அதற்கு பாமகவும், காங்கிரஸும் சற்று இறங்கி வந்தால்தான் உண்டு. பாமக சீட்களை குறைத்துக் கொள்ள முரண்டு பிடித்தால், வைகோவை நிறுத்த கருணாநிதியால் முடியாது.
மதிமுகவில் உள்ள பெரும்பாலான தலைவர்களும் அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று வைகோவை அனத்தி வருகின்றனர்.
லேட்டஸ்ட் தகவலின்படி, யார் 35 சீட் தருகிறீர்களோ அவர்களுடன் தான் கூட்டணி என முதல்வர் ஜெயலலிதாவுக்கும், திமுக தலைவர் கருணாநிதிக்கும் தனித்தனியாக மெசேஜ் அனுப்பியிருக்கிறார் வைகோ என்கிறார்கள்.
thats tamil

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>